நடிகர் விஜயை விட அவர் வந்த காரை பார்க்க கூடிய கூட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் அதிகாலையில் நடந்த பரபரப்பு!

நடிகர் விஜய் ரூபாய் 68 லட்சம் மதிப்பிலான தனது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கான ஷூட்டிங்கிற்க்கு தாய்லாந்து செல்வதற்காக வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்கள் எல்லாம் இந்த திரைப்படத்தின் வெற்றியில் குதூகலமாகவும் உற்சாகமாகவும் இருந்து வருகின்றனர். நடிகர் விஜய் அடுத்த திரைப்படத்தில் நடிக்க துவங்கி விட்டார்.

actor vijay in chennai airport

நடிகர் விஜயின் 68வது திரைப்படம் இயக்குனர் வெங்கட்பிரபுவால் இயக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நடிகர் விஜய்யும் தாய்லாந்து செல்வதற்காக தயாராகி விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு நடிகர் விஜய் தனது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் வந்து இறங்கினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் அதிகமான சொகுசு கார்களை வாங்குவதில் அதிக பிரியம் கொண்டவர் என்று நம் எல்லோருக்கும் தெரியும். இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட இருக்கிறது. இதற்கு முன்பு இவர் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சக நடிகர்களை ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏற்றிக்கொண்டு வலம் வந்த வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இவர் தற்போது தனது பிஎம்டபிள்யூ காரில் வந்துள்ளார்.

actor vijay in chennai airport

இவர் வந்து இறங்கிய பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் கார் இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலை கொண்ட பிஎம்டபிள்யூ கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் மொத்தமே இரண்டு பேர் வேரியன்டில் தான் இருக்கிறது. ஒன்று பெட்ரோல் வேரியன்ட் மற்றொன்று டீசல் வேரியன்ட். பெட்ரோல் வேரியன்ட் கார் 530ஐ எம் ஸ்போர்ட் என்ற பெயரிலும் டீசல் வேரியண்ட் கார் 520d எம் ஸ்போர்ட் என்ற வேரியன்டிலும் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை 1995 சிசி இன்ஜினும் டீசல் இன்ஜினை பொருத்தவரை 1998 சிசி இன்ஜின் கொண்ட இன்ஜினாக இருக்கிறது. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 190 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் டீசல் இன்ஜினை பொருத்தவரை 252 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

actor vijay in chennai airport

இந்த இரு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடனே இணைக்கப்பட்டுள்ளன. இந்த கார் ரியர் வீல் டிரைவ் காராக இருக்கிறது. இதில் பெட்ரோல் வெர்ஷன் கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.1 நொடியிலும், டீசல் வெர்ஷன் கார் 7 .3 நொடியிலும் பிக்கப் செய்யும் வகையில் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறம் அதிக சொகுசு வசதிகள் நிறைந்தவாறு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் இன்ஜினை பொருத்தவரை மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ரெய்டு குவாலிட்டியை பொருத்தவரை சாலையில் என்னதான் பள்ள மேடுகள் இருந்தாலும் காருக்குள்ளே இருக்கும் பயணிக்கு அது எதுவும் தெரியாத வகையில் சிறப்பான சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் ஃபிட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் பள்ள மேடான ரோடுகளிலும் சீரான வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

actor vijay in chennai airport

இந்த கார் திருப்பங்களில் வேகமாக திரும்பினாலும் காருக்குள்ளே இருப்பவருக்கு பாடி ரோல் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் நான்கு பேர் சொகுசாக பயணிக்கலாம். அவர்களுக்கு அதிக இட வசதி இருக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கால்களுக்கும் தலைக்கு மேலேயும் அதிகமான இட வசதி இருக்கும்.

இந்த காரில் இருக்கும் பிரச்சனை என்றால் இந்த கார் மெதுவாக செல்லும்போது ஷாக் அப்சர்பரில் ஸ்டிஃப்னஸ் ஏற்படும். இந்த காரின் ஸ்டேரிங் ரெஸ்பான்ஸ் சற்று குறைவாக தான் இருக்கிறது. அதேபோல பின் சீட்டில் மூன்று பேர் அமர்ந்தால் அவர்களுக்கு நடுவே இருக்கும் பயணிக்கு முதுகு பகுதி சாய்வதற்கு சற்று சிரமமாக இருக்கும் வகையில் தான் உள்ளது. ஆனால் பின்பக்கம் இரண்டு பேர் மட்டும் அமர்ந்தால் அவர்களுக்கு சுலபமான பயணம் கிடைக்கும்.

நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவர் காரிலிருந்து இறங்கவில்லை. அவர் வருவதை அறிந்து அங்கிருந்த மக்கள் மட்டும் பத்திரிகையாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்து விட்டார். பின்னர் காருக்குள் இருந்து இறங்காமல் சற்று தள்ளி அவரது கார் நின்றது. உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவர் காரிலிருந்து இறங்கும் பகுதியை சுற்றி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் நடிகர் விஜய் விமான நிலையத்திற்குள் சென்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் விஜய் இடம் இந்த பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் கார் மட்டுமில்ல இவரிடம் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது. இவரது கார்கலாச்சினை பார்க்கவே பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் காரும் இவரது முக்கியமான கார் பட்டியலில் சேர்ந்துள்ளது. இவர் உள்ளூர் பயணங்களுக்கு பெரும்பாலும் இந்த காரை அதிகம் பயன்படுத்துகிறார்.

Article Published On: Friday, November 3, 2023, 12:27 [IST]
English summary
Actor vijay was spotted with bmw 5 series car at chennai airport
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X