இவ்ளோ பெரிய ஆளுங்க கூட சாதாரண மாருதி காரை வாங்கறாங்களா! அதுவும் ஷோரூமுக்கே வந்து டெலிவரி எடுத்துட்டு போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் தற்போதைய நிலையில் 6.49 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அவை இரண்டுமே 1.2 லிட்டர் இன்ஜின்கள்தான். பெட்ரோல் மூலமாக இயங்கும்போது அதிகபட்சமாக 82 பிஎஸ் பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனையும், சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது அதிகபட்சமாக 69 பிஎஸ் பவர் மற்றும் 102 என்எம் டார்க் திறனையும் இந்த இன்ஜின் உருவாக்கும்.

வசதிகளை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 6 ஏர்பேக்குகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.
இது மிகவும் விலை குறைவான ஒரு கார் என்பதால், நடுத்தர வர்க்க மக்கள் மட்டுமே வாங்குகின்றனர். திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை பெரிதாக வாங்குவது கிடையாது. அப்படி இருக்கும்போது மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர தம்பதியினர் தற்போது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வாங்கியுள்ளனர்.

அவர்கள் வினய் (Vinay) மற்றும் ஐஸ்வர்யா (Aishwarya) ஆகியோர் ஆவர். கணவன்-மனைவியான இவர்கள் இருவரும் கன்னட சீரியல்களில் நடித்து கொண்டுள்ளனர். அத்துடன் திரைப்படங்களிலும் இவர்களது முகங்களை நம்மால் பார்க்க முடியும். இவர்கள் இருவரும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த திரையுலக தம்பதியினர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வெள்ளை நிறத்தில் வாங்கியுள்ளனர். ஆரவாரமாக கேக் வெட்டி அவர்கள் காரை டெலிவரி எடுத்துள்ளனர். இதற்காக சமூக வலை தளங்களில் வினய் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios), ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.
ஓரளவிற்கு குறைவான விலை, அதிநவீன வசதிகள், சிறப்பான மைலேஜ் (சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர்), பராமரிப்பு செலவு குறைவு மற்றும் எளிதான கையாளுமை ஆகிய அம்சங்கள் எல்லாம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ப்ளஸ் பாயிண்ட்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications








