நடிகர் அஜித் பட வில்லனா இது? மீசை எடுத்து ஆளே அடையாளம் தெரியல!! தந்தை உடன் 12 கோடி ரூபாய் காரில்...

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), உலகளவில் பிரபலமான பிரிட்டிஷ் லக்சரி கார் நிறுவனம். இந்தியாவிலும் ரோல்ஸ்-ராய்ஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு கடந்த 100 ஆண்டுகளாக கிடைத்து வருகிறது. இந்திய ராஜாக்கள் சிலர் கூட ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்கியுள்ள வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம். செல்வந்தர்கள் எத்தனை சொகுசு கார்களை வைத்திருந்தாலும், குறைந்தது ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஆவது வைத்திருக்க வேண்டும் என்பதை கௌரவமாக பார்க்கின்றனர். அந்த வகையில், தற்போது ஒரு பிரபலமான சினிமா திரைப்பட நடிகர் ஒருவர் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) காரை வாங்கியுள்ளார். யார் அவர் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்திய சினிமா பிரபலங்கள் பலரிடத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. நம் தமிழ் சினிமாவிலும் நடிகர் விஜய் உள்பட சில முன்னணி நடிகர், நடிகைகளிடம் உள்ளது. ஆனால், பாலிவுட்டில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் மட்டுமின்றி, நிறைய விஐபிகளும் ரோல்ஸ்-ராய்ஸ் காரை வைத்திருக்கின்றனர். இப்போது புதியதாக ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கியிருப்பவரும் பாலிவுட்டை சேர்ந்தவரே ஆவார்.

vivek oberoi bought rolls-royce cullinan

இவர் வேறு யாருமில்ல, நடிகர் அஜித்குமாரின் விவேகம் திரைப்படத்தில் அஜித்தை புகழ்ந்துக் கொண்டே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விவேக் ஓபராய் ஆவார். தற்போதுவரையில், இவர் நடித்த ஒரே தமிழ் திரைப்படம் விவேகம் ஆகும். ஆனால், பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், விவேக் ஓபராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், குடும்பத்துடன் இருக்கும் விவேக் ஓபராய் தனது புத்தம் புதிய ரோல்ஸ்-ராய்ஸ் காரை வெளியுலகிற்கு காண்பித்துள்ளார். நடிகர் விவேக் ஓபராய் புதியதாக வாங்கியிருப்பது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் ஆகும். இதன் விலை சுமார் ரூ.12.25 கோடி ஆகும். இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்கிய ஓபராய் தனது இன்ஸ்டா பதிவில், "வெற்றி ஆனது வெவ்வேறு விதமான வடிவங்களில், அளவிகளில் வரும், இன்று அது பார்ப்பதற்கு இப்படி உள்ளது.

vivek oberoi bought rolls-royce cullinan

வாழ்க்கையில் சிறப்பான தருணங்களை குடும்பத்துடன் கொண்டாடியதற்கு மிகவும் நன்றியுடனும், ஆசீர்வாதத்துடனும்" என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த விவேக் ஓபராயின் வீடியோவில், புதிய கல்லீனன் காரில் அவர் தனது குடும்பத்துடன் ஜாலியாக ஒரு ரவுண்ட் செல்வதையும் பார்க்க முடிகிறது. நடிகர் விவேக் ஓபராய் வாங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான கல்லீனன் கார் ஆகும்.

கல்லீனன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் பார்த்து பார்த்து உருவாக்கிய லக்சரியான எஸ்யூவி கார் ஆகும். 2018ஆம் ஆண்டில் கல்லீனன் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை ரோல்ஸ்-ராய்ஸ் துவங்கியது. தற்சமயம் உலகளவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ரோல்ஸ்-ராய்ஸ் காராக கல்லீனன் விளங்குகிறது. மேலும், சமீப காலமாக ரோல்ஸ்-ராய்ஸுக்கு கணிசமான வருவாயை பெற்றுதரும் காராக கல்லீனன் விளங்குகிறது.

vivek oberoi bought rolls-royce cullinan

குறிப்பாக, பிரபல இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி கிட்டத்தட்ட 10 கல்லீனன் கார்களை வைத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரில் சமீபத்தில்தான் பிளாக் பேட்ஜ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான கல்லீனன் காருடன் ஒப்பிடுகையில், கல்லீனன் பிளாக் பேட்ஜ் கார் சில தனித்துவமான தொழிற்நுட்ப வசதிகள் உடன் விற்பனை செய்யப்படுகிறது.

கல்லீனன் பிளாக் பேட்ஜ் காரில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 5,000 ஆர்பிஎம்-இல் 583 பிஎச்பி மற்றும் 1,600 ஆர்பிஎம்-இல் 900 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. கல்லீனன் காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் நடிகர்கள் என்றாலே நன்கு கட்டுடலுடன் இருப்பர் என்பது ஊரறிந்த விஷயம். விவேக் ஓபராயும் அதில் விதிவிலக்கு அல்ல. அவரது கட்டுக்கோப்பான உடலுக்கும், லக்சரியான வாழ்க்கை தரத்துக்கும் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் மிகவும் ஏற்ற காராகும். பாலிவுட்டில் உள்ள ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஓனர்களுள் ஒருவராக விவேக் ஓபராய் இணைந்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, November 25, 2024, 23:09 [IST]
English summary
Actor vivek oberoi bought brand new rolls royce cullinan suv check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X