நடிகர் அஜித்தையும் கூட சேர்த்துக்கலாம்! ஏகே-வுக்கு இணையா ஆவுனா பைக் டிரிப் அடிக்கும் பிரபல நடிகர்கள்!

விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக இருக்கும். ஆனால், இதனை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால், செல்வந்தர்களும், சினிமா பிரபலங்களும் மட்டுமே ஆகும். குறிப்பாக, சில சினிமா பிரபலங்கள் மக்களோடு மக்களாக கலந்து வாழ வேண்டும் என்பதற்காகவே கார்களை காட்டிலும் பைக்குகளை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில், அப்போதுதான் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு பைக்கில் எங்கு வேண்டுமானாலும் சுத்தலாம் அல்லவா... அவ்வாறுதான் தற்போது இரு சினிமா நடிகர்கள் (Cinema Actors) பைக்கில் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர்.

இந்த நடிகர்கள் இருவரும் பாலிவுட் (Bollywood) துறையை சேர்ந்தவர்களாவர். அதேபோல், இவர்கள் இருவரும் விலையுயர்ந்த பைக்குகளில் ஊர் சுற்றுவது நம் இந்தியாவில் இல்லை, ஐரோப்பிய நாடுகளில் ஆகும். இந்த இரு நடிகர்களில் ஒருவர் மிகவும் பிரபலமானவர், அவரது பெயர் ஷாகித் கபூர் (Shahid Kapoor) ஆகும்.

shahid kapoor and ishaan khatter

தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த 'அர்ஜூன் ரெட்டி' (Arjun Reddy) திரைப்படத்தின் இந்தி வெர்சனான 'கபீர் சிங்' (Kabir Singh) திரைப்படத்தில் நடித்து மிகவும் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷாகித் கபூர் ஆவார். அதேபோல், இவருடன் ஐரோப்பிய பைக் பயணத்தை மேற்கொண்டுள்ள மற்றொரு நடிகரான இஷான் கட்டர் (Ishaan Khatter) பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகராக விளங்குகிறார்.

நடிகர்கள் ஷாகித் கபூர் மற்றும் இஷான் கட்டர் இருவரும் ஒருவகையில் பார்த்தால் அண்ணன்- தம்பி ஆவர். இந்த சகோதரர்கள் இருவரும் மற்றொரு நடிகர் குனால் கெமு உள்பட சினிமா துறையை சேர்ந்த சிலருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனை நடிகர் ஷாகித் கபூர் மற்றும் இஷான் கட்டாரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கங்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியவரும்.

ஏதேனும் புதிய இடங்களுக்கு சுற்றுலா சென்றால் அந்த இடத்தை சுற்றி பார்க்க கார், வேன்களை காட்டிலும் பைக்குகள் சிறந்தவையாக இருக்கும். குறுகிய பாதையில் கூட பைக்குகளை ஓட்டி செல்ல முடியும் என்பதாலும், எதிர்காற்றை அனுபவித்து செல்ல முடியும் என்பதாலும் பைக்கையே சுற்றுலா பயணங்களுக்கு அதிக பேர் பயன்படுத்துவதை சமீப காலமாக அதிகமாக பார்க்க முடிகிறது.

அந்த வகையில் இந்த சினிமா நட்சத்திர சகோதரர்கள் தங்களது ஐரோப்பிய பயணத்தை பி.எம்.டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ் (BMW R1300 GS) பைக்குகள் உடன் மேற்கொண்டுள்ளனர். நடிகர்கள் ஷாகித் கபூர் மற்றும் இஷான் கட்டார் இவ்வாறு ஐரோப்பாவில் பைக் பயணங்களை மேற்கொள்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல.

shahid kapoor and ishaan khatter

இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் கபீர் சிங் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஷாகித் கபூரும், பாலிவுட்டில் முதல் திரைப்படத்தில் நடித்ததற்காக இஷான் கட்டாரும் ஐரோப்பிய பயணத்தை மேற்கொண்டு இருந்தனர். அப்போதும், விலையுயர்ந்த பைக்குகளில் சில ஐரோப்பிய நாடுகளின் அழகிய மலைப்பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை ரசித்தவாறு அந்த பைக் பயணத்தை அவர்கள் மேற்கொண்டு இருந்தனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான பைக் பயணங்களை மேற்கொள்வதற்கு பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ் என்பது மிகவும் ஏற்ற பைக் ஆகும். ஏனெனில், இது எந்தவொரு பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய அட்வென்ச்சர் ரக பைக் ஆகும். இந்தியாவில் ரூ.24.68 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனை செய்யப்படும் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை நடிகர் ஷாகித் கபூர் மற்றும் இஷான் கட்டார் இந்தியாவில் இருந்து கொண்டு சென்றனரா அல்லது அங்கு வாடகைக்கு எடுத்து பயன்படுத்தினரா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, June 27, 2025, 12:05 [IST]
English summary
Actors shahid kapoor and ishaan khatter bike trip with bmw r1300 gs in europe
மேலும்... #celebrity bikes #bike travel
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+