எல்லாருக்கும் குலுக்கல் பரிசு விழுந்து இருக்குமோ!.. தீபாவளியை முன்னிட்டு சொகுசு கார்களை வாங்கிய நடிகர்கள்!

இந்தியர்கள் பெரும்பாலானோர் பண்டிகை தினத்தில் புதிய பொருட்களை வாங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமல்ல கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை விழாக் காலத்திலேயே பலர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பண்டிகை நாட்களை இதற்கு மிக சிறந்த நாளாக நம் மக்கள் நம்புகின்றனர்.

ஆகையால், இந்த பண்டிகளைகளை முன்னிட்டு புதிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை ஏராளமாக உள்ளது. இதனால்தான், இந்த கால கட்டத்தில் வாகன உற்பத்தியாளர் ஆஃபர்களை வாரி வழங்குவார்கள். இந்த நாளில் சாதாரண மக்கள் மட்டுமல்ல, பெரும் செல்வந்தர்களும், திரை நட்சத்திரங்களும் கூட புதிய கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Actors who bought luxury cars recently

அந்தவகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் தீபாவளி மற்றும் ஆயுதபூஜை ஆகிய பண்டிகளை முன்னிட்டு ஒரு சில பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் விலை உயர்ந்த புதிய வாகனங்களை வாங்கி இருக்கின்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட ஒரு சில கார் கொள்முதல் நிகழ்வுகள் நாட்டையே திரும்பி பார்க்க செய்யும் வகையில் அமைந்தன.

அத்தகைய சில முக்கிய கார் வாங்கல் நிகழ்வு பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, அந்த பிரபலம் யார்? என்ன மாதிரியான வாகனத்தை அவர் வாங்கி இருக்கின்றார்? அதன் சிறப்புகள் மற்றும் விலை விபரங்கள் என்ன என்பது பற்றிய தகவல்களையே காண உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Dulquer salmaan ferrari 296 gtb

மலையாள திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் சமீபத்தில் ஓர் விலை உயர்ந்த காரை வாங்கி இருக்கின்றார். ஃபெர்ராரி 296 ஜிடிபி மாடலே அது ஆகும். இந்த கார் மாடலின் ஒற்றை யூனிட் மட்டுமே 5.4 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகமாகவே இருக்கக் கூடும். சுமார் ஆறு கோடி ரூபாயைக்கூட அது தாண்டலாம். இத்தகைய அதிக விலைக் கொண்ட என்ட்ரீ லெவல் ஸ்போர்ட் காரை மலையாள நடிகர் வாங்கினார். இந்த காரை தீபாவளியை முன்னிட்டு வாங்கினார் என்பதற்கான எந்த சான்றும் இல்லை.

Shraddha kapoor lamborghini huracan

இருப்பினும், இந்த தீபாவளி பண்டிகைக் காலத்திலேயே அவர் இந்த சூப்பரான காரை கொள்முதல் செய்திருக்கின்றார். துல்கர் சல்மான் ஓர் மிகப் பெரிய கார் காதலர் ஆவார், அவருடைய தந்தையை போல. ஆமாங்க, மலையாள திரை உலகின் ஜாம்பவான் நடிகரான மம்மூட்டியும் மிகப் பெரிய கார் காதலராகக் காட்சியளிக்கின்றனர்.

துல்கர் சல்மானை அடுத்து மிக மிக விலையுயர்ந்த காரை வாங்கி மற்றுமொரு நடிகர் ஸ்ரதா கபூர் ஆவார். பாலிவுட் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் இவர் வாங்கி இருப்பது லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா ஆகும். இது ஓர் ஸ்போர்ட்ஸ் வகை கார் மாடலாகும்.

Anil kapoor mercedes maybach s580

இந்த காரை பாலிவுட் திரை உலகில் வேறு எந்த நடிகையும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய முதல் பெண் பாலிவுட் நடிகை ஸ்ரதா கபூரே ஆவார். ஆகையால், இந்த தகவல் நாடு முழுக்க ஹாட் டாபிக்காக மாறியது.

இந்த காரின் விலை ரூ. 4.04 கோடிகள் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்ஜின் அதிகபட்சமாக 640 பிஎஸ் மற்றும் 565 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. உலகின் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் வகை சாலை பயன்பாட்டு வாகனம் இதுவாகும். இந்த காரையே இந்தி நடிகை ஸ்ரதா கபூர் வாங்கி இருக்கின்றார்.

Pooja hegde range rover

பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முன்னணி மற்றும் பழம்பெரும் நடிகரான அணில் கபூரும் சமீபத்தில் சொகுசு காரை ஒன்றை வாங்கினார். அவர், மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 சொகுசு காரையே வாங்கி இருக்கின்றார். இந்த காரின் விலை 2.69 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த சொகுசு மற்றும் ஆடம்பர காரில் 4.0 லிட்டர் வி8 மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த இரண்டும் சேர்ந்து 496 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த சொகுசு செடான் காரின் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Prithviraj sukumaran porsche 911 gt3 touring

இவரைப் போலவே இவருடைய மகளும் சமீபத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கினார். பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கும் சோனம் கபூர் ரூ. 93.55 லட்சம் மதிப்புக் கொண்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி ரக காரையே வாங்கினார். இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர் நிலை தேர்வு அதிகபட்சமாக ரூ. 2.30 கோடிக்கு விற்கப்படுகின்றது.

மேலும், இந்த பட்டியலில் மற்றும் ஒரு மலையாள நடிகராக பிரித்விராஜ், ஓர் சூப்பரான போர்ஷே (Porsche) வாங்கி இருக்கின்றார். 911 ஜிடி3 டூரிங் சொகுசு காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.20 கோடி ஆகும்.

Fahadh faasil mercedes benz gls 450 suv

இத்தகைய விலை உயர்ந்த காரையே பிரித்விராஜ் வாங்கி இருக்கின்றார். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே அவரிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63, லம்போர்கினி ஹூராகேன், மினி கூப்பர் ஜேசிடபிள்யூ, லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் ஆகிய சொகுசு கார் மாடல்கள் உள்ள நிலையில் மேலும் ஓர் புதிய வாகனமாக போர்ஷே 911 ஜிடி3 டூரிங்கை பிரித்வி வாங்கி இருக்கின்றார்.

இவரைத் தொடர்ந்து இன்னொரு மலையாள நடிகரும் சமீபத்தில் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கினார். விக்ரம் மற்றும் மாமன்னன் போன்ற முன்னணி திரைப்படங்களில் முக்கிய ரோல்களை மேற்கொண்ட ஃபஹத் ஃபாசில்லே அவர் ஆவார். இவர் சொகுசு கார்களை மாசம் ஒரு செருப்பு வாங்குவதைப் போல வாங்கிக் கொண்டிருக்கின்றார்.

Nita ambani rolls royce cullinan black badge

அந்தவகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 கார் மாடலை அவர் வாங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 450 சொகுசு எஸ்யூவி (Mercedes Benz GLS 450 Luxury SUV) காரை வாங்கினார்.

இந்த கார் இந்தியாவில் ரூ. 1.23 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 1.60 கோடியைத் தொடக் கூடும். நடிகர்களைப் போலவே இந்தியாவைச் சேர்ந்த சில முன்னணி தொழிலதிபர்களும் இந்த மாதத்தில் மிக மிக விலை உயர்ந்த கார்களை வாங்கி இருக்கின்றனர்.

RR spectre

அந்தவகையில், இந்தியாவின் பெரும் செல்வந்தர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் பயன்பாட்டிற்காக ரோல்ஸ் ராயஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls-Royce Cullinan Black Badge) எனும் அரிய வகை கார் வாங்கப்பட்டது. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 8.2 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை பத்து கோடியைக் கூட தொடலாம்.

இந்தியாவின் இந்த முன்னணி தொழிலதிபருக்கு டஃப் கொடுக்கும் விதமாக சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் பாஷ்யம் கன்ட்ஸ்டரக்சன் நிறுவனத்தைச் சேர்ந்த பாஷ்யம் யுவராஜ், இந்தியாவில் இதுவரை வாங்காத ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரோ சொகுசு வாங்கினார். இந்த சம்பவம் கடந்த ஒரு வார இடைவெளியிலேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 9 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து கார் கொள்முதல்களும் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் செய்யும் அமைந்தவை ஆகும். குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. அம்பானியே இந்த காரை இன்னும் வாங்காத நிலையில் சென்னையைச் சேர்ந்தவர்கள் வாங்கி இருக்கின்றார்களா என பலரை இந்த நிகழ்வு ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 16:19 [IST]
English summary
Actors who bought luxury cars recently
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X