இன்னைக்கு காசை நீட்டினால் எத்தனை கார் வேணும்னாலும் கிடைக்கலாம்!! ஆனா... முதல் கார் எல்லாருக்கும் ஸ்பெஷல்!
இந்திய சந்தையை ஒரு சமயத்தில் ஆட்சி செய்துக் கொண்டிருந்த கார் பிரீமியர் பத்மினி ஆகும். 'பிரீமியர் பத்மினி' என்பது இந்தியர்கள் வைத்த செல்ல பெயர். இந்த காரின் உண்மையான பெயர் ஃபியட் 1100 (Fiat 1100). இந்த காரை இப்போதும் சில சினிமா நட்சத்திரங்கள் வைத்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த், ஜாக்கி ஷெரூஃப் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட நடிகர்கள் இப்போதும் பிரீமியர் பத்மினியை பயன்படுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த்: இவரை தெரியாதவர்கள் இந்தியாவிலேயே யாரும் இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த அளவிற்கு பிரபலமானவரோ, அதே அளவிற்கு எளிமையை விரும்பக்கூடியவர் ரஜினிகாந்த் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இவரை பலமுறை டொயோட்டா இன்னோவா காரில் தான் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.

இன்னோவாவிற்கு பதில் வேறொரு லக்சரி காரை பயன்படுத்த சமீப கால தான் ரஜினிகாந்த் ஆரம்பித்துள்ளார். ரஜினியின் முதல் கார் பிரீமியர் பத்மினி ஆகும். இந்த காரை இன்னமும் நல்ல நிலையில், வீட்டில் வைத்துள்ளார். தனது பிரீமியர் பத்மினி கார் உடன் ரஜினிகாந்த் அவர்கள் நிற்கும் புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.
ஐரோப்பாவில் விற்பனையில் இருந்த ஃபியட் 1100 கார் தான் இந்தியாவில் பிரீமியர் பத்மினி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது. ஃபியட் நிறுவனம் உலகளவில் பிரபலமானதற்கு காரணமாக இருந்த கார்களுள் ஃபியட் 1100 ஒன்று எனலாம். இந்த பழமையான ஃபியட் காரில் 1,089சிசி, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த என்ஜின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

ஜாக்கி ஷெரூஃப்: ரஜினிகாந்தை போல், இவரும் நாடு முழுவதும் பலரால் அறியப்படக்கூடிய நடிகர். தமிழிலும் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரிடமும், பழமையான ஃபியட் 1100 கார் உள்ளது. சில காலம் கழித்து, அந்த காரை ஜாக்கி ஷெரூஃப் ரீ-ஸ்டோர் செய்தார். அதாவது, புதுமையான தோற்றத்திற்கு காரை மாற்றினார்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு கூட அந்த புதிய ஃபியட் 1100 காரில் ஜாக்கி ஷெரூஃப் வந்திருந்தார். ஆனால் அப்போது, அந்த காரை இவர் ஓட்டவில்லை. அந்த சமயத்தில் பார்க்கும்போது, இவரது ஃபியட் 1100 கார் நன்கு புத்துணர்ச்சியான தோற்றத்தில் இருந்தது. அப்போது காரின் உட்பக்க கேபினை பார்க்க முடியவில்லை என்றாலும், காரில் பல புதிய மாடர்ன் வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கலாம்.

தர்மேந்திரா: பாலிவுட் சினிமாவின் மற்றொரு தவிர்க்க முடியாத டாப் ஸ்டார். இவரது முதல் காரும் ஃபியட் 1100 ஆகும். இதனை தர்மேந்திரா 1960ஆம் காலக்கட்டத்தில் வாங்கினார். இந்த வகையில், ஃபியட் 1100 கார் தன்னிடம் கடந்த 60 வருடங்களாக இருப்பதாகவும், இந்த காரை அந்த சமயத்தில் வெறும் ரூ.18,000க்கு வாங்கியதாகவும் தர்மேந்திராவே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
ஃபியட் 1100 காரை வாங்கிய சமயத்தில் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக தர்மேந்திரா இருந்தார். ஒருவேளை சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த காரை நிச்சயமாக விற்பனை செய்திருக்க மாட்டேன்; அதற்கு பதிலாக இந்த காரை வைத்து டாக்ஸி தொழில் பார்த்திருப்பேன் என்றும் அந்த பேட்டியில் தர்மேந்திரா தெரிவித்திருந்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார், ஓர் மெக்கானிக்கல் இயந்திரம் தான். என்றாலும், சிலர் தங்களது கார் உடன் நெருங்கிய பிணைப்புடன் இருப்பர். அதிலிலும், தான் வாங்கிய முதல் கார் என்றால், வாழ்க்கையில் என்ன கஷ்டம் வந்தாலும் சரி அந்த காரை விற்க மாட்டார்கள். அத்தகையவர்களுள் ஒருவர்களாகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 நடிகர் சிகரங்களை நாங்கள் பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









