தமிழில் 2 படங்களில் நடித்து, தெலுங்கு பக்கம் ஒதுங்கியவருக்கு வந்த வாழ்வு! மஹிந்திரா விற்பதிலேயே விலைமிக்க கார்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களுள் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஒன்றாகும். இதனை காட்டிலும் குறைந்த விலையில் பிஇ 6 (BE 6) எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், விலைமிக்க எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தான் நிறைய பேர் வாங்குவதாக புள்ளி விபரங்களும் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில், சினிமா நடிகை (Cinema Actress) ஒருவர் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். இந்தி நடிகையாக இருப்பினும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ள அவரையும், அவர் வாங்கியுள்ள எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பிரபல பாலிவுட் நடிகர் (Bollywood Actor) வருண் தவானின் 'பத்ரிநாத் கி துல்ஹானியா' என்கிற 2017ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தி திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானவர், நடிகை அகன்க்சா சிங் (Aakanksha Singh) ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் பிறந்தவரான அகன்க்‌சா சிங்கிற்கு 34 வயதாகிறது.

aakanksha singh buys mahindra xev9e

முதல் திரைப்படம் இந்தி மொழி படமாக இருப்பினும், அடுத்த இரு படங்கள் தெலுங்கு சினிமா படங்களாக அகன்க்சா சிங்கிற்கு கிடைத்தன. அதன்பின், இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தவருக்கு 2022ஆம் ஆண்டு ஓர் முக்கியமான ஆண்டாகும். ஏனெனில், அந்த வருடத்தில் மட்டும் 5 திரைப்படங்கள் அகன்க்சா சிங்கின் நடிப்பில் வெளிவந்தன.

ஆனால், அவை எல்லாவற்றிலும் துணை நடிகை கதாபாத்திரமே ஆகும். 2022ஆம் ஆண்டில் 'க்ளாப்', 'வீரபாண்டியபுரம்' என்கிற இரு தமிழ் திரைப்படங்களில் அகன்க்சா சிங் நடித்திருந்தார். ஆனால், இந்த இரு திரைப்படமும் திரைக்கு வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இத்தனைக்கும் இந்த திரைப்படங்களில் பிரபல தமிழ் நடிகர்கள் ஜெய் மற்றும் ஆதி நடித்திருந்தனர்.

aakanksha singh buys mahindra xev9e

2022 காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 5 படங்களில் நடித்திருந்த அகன்க்சா சிங்கின் நடிப்பில் 2023ஆம் ஆண்டில் ஒரு திரைப்படம் கூட வெளிவரவில்லை. இதனால் டிவி சீரியல் பக்கம் சென்ற அகன்க்சா சிங், சிறிய இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் நடித்த 'ஷஷ்திபூர்தி' திரைப்படம் இன்று (மே 30) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தெலுங்கில் மட்டுமே உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நடித்த திரைப்படம் திரைக்குவரும் வேளையில், இரட்டிப்பு சந்தோஷமாக பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை நடிகை அகன்க்சா சிங் டெலிவிரி பெற்றுள்ளார். முற்றிலும் கருப்பு நிறத்திலான எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை அகன்க்சா சிங் ஷோரூமில் டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

நடிகை அகன்க்சா சிங் வாங்கியிருக்கும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் கருப்பு நிறத்தை மஹிந்திரா நிறுவனம் 'ஸ்டீல்த் பிளாக்' (Stealth Black) என அழைக்கிறது. இது இல்லாமல், டெசர்ட் மிஸ்ட், டாங்கோ சிவப்பு, எவரெஸ்ட் வெள்ளை, நெபுலா நீலம், டீப் ஃபாரஸ்ட், ரப்பி வெல்வெட் நிறங்களிலும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை மஹிந்திரா விற்பனை செய்கிறது.

பேக் ஒன், பேக் டூ, பேக் த்ரீ செலெக்ட் மற்றும் பேக் த்ரீ என்கிற 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் பேக் த்ரீ வேரியண்ட்டை மட்டுமே தற்போதைக்கு மஹிந்திரா டெலிவிரி செய்து வருகிறது. ஆதலால், நடிகை அகன்க்சா சிங் வாங்கியிருப்பதும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் பேக் த்ரீ வேரியண்ட் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் விலைமிக்க எலக்ட்ரிக் கார் மட்டுமில்லை, மஹிந்திரா விற்பனை செய்வதிலேயே விலைமிக்க கார், எக்ஸ்இவி 9இ ஆகும். இதன் பேக் த்ரீ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.32.54 லட்சத்தில் இருந்து ரூ.33.32 லட்சம் வரையில் உள்ளன. இவ்வளவு விலை கொண்ட மஹிந்திரா எலக்ட்ரிக் காரை தான் நடிகை அகன்க்சா சிங் வாங்கியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, May 30, 2025, 19:46 [IST]
English summary
Actress aakanksha singh takes delivery of mahindra xev 9e electric car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+