அந்த கதர் சட்டை அரசியல்வாதி பெத்த பொண்ணா இவங்க! பாத்தாலே பத்திக்கற மாதிரி டிரெஸ்ல சைக்கிள் ஓட்டிட்டு போறாங்க!

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னையால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5-ன் (National Family Health Survey-5) தரவுகளின்படி பார்த்தால், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், சுமார் 24 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றமே இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. அதாவது துணி துவைக்க வாஷிங் மெஷின் மற்றும் மாவு அரைக்க கிரைண்டர் என ஏராளமான அறிவியல் உபகரணங்கள் நமது வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்து விட்டன.

Actress Aisha Sharma Spotted Riding Bicycle

இவை நமது வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளன என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மறுபக்கம் உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கும் இவை காரணமாக மாறியுள்ளன. மேற்கண்ட அறிவியல் உபகரணங்களை போல், வாகனங்களும் கூட நமது வாழ்க்கையில் ஒரு சில தீமைகளுடன் சேர்த்தே நன்மைகளை செய்கின்றன.

முன்பெல்லாம் இந்திய சாலைகளை சைக்கிள்தான் ஆட்சி செய்து கொண்டிருந்தன. வீட்டிற்கு வீடு சைக்கிள் இருந்த காலம் ஒன்று இருந்தது. எங்கு செல்வதாக இருந்தாலும் சைக்கிள்தான். ஆனால் தற்போது மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. இந்தியா உடல் பருமன் பிரச்னையின் தாயகமாக மாறி கொண்டிருப்பதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று.

Actress Aisha Sharma

இதை ஒரு சிலர் தற்போது சற்று தாமதமாக உணர்ந்து கொண்டுள்ளனர். எனவே கார்களின் ஆக்ஸலரேட்டர் பெடல்களில் இருந்து காலை எடுத்து விட்டு மீண்டும் சைக்கிள் பெடல்களை மிதிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் போன்ற பிரபலங்கள் பலர் தற்போது சைக்கிள்களை ஓட்ட தொடங்கியுள்ளனர்.

இந்த வரிசையில் பிரபலமான நடிகை ஒருவர் சாலையில் சைக்கிள் ஓட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Viral Bhayani இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, அயிஷா ஷர்மா (Aisha Sharma) ஆவார்.

இவர் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். அத்துடன் மாடலிங்கும் செய்து வருகிறார். எனவே உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்காக, சைக்கிள் ஓட்டுவதை அயிஷா ஷர்மா வழக்கமாக வைத்துள்ளார். அப்படி சமீபத்தில் அவர் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி மேற்கொண்டபோதுதான், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அயிஷா ஷர்மா மட்டுமல்லாது, பாலிவுட் திரையுலகை சேர்ந்த இன்னும் பல்வேறு பிரபலங்களும், அடிக்கடி சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில், சல்மான் கான் (Salman Khan), அக்ஸய் குமார் (Akshay Kumar), ஷாகிக் கபூர் (Shahid Kapoor), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), ஜான்வி கபூர் (Janhvi Kapoor) மற்றும் சாரா அலி கான் (Sara Ali Khan) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK - Tamilaga Vettri Kazhagam) தலைவருமான விஜய் (Vijay) கூட, கடந்த காலங்களில் சைக்கிள் ஓட்டியதை நாம் பார்த்துள்ளோம். கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது, வாக்களிப்பதற்காக விஜய் சைக்கிள் ஓட்டியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பிரபலங்கள் சைக்கிள் ஓட்டுவது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். இது சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும். இன்றைய பரபரப்பான காலகட்டத்தில், மோட்டார் வாகனங்கள் இன்றியமையாத ஒன்றுதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவ்வப்போது சைக்கிள்களையும் ஓட்டுவது நம் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் அயிஷா ஷர்மா, உடற்பயிற்சிக்காக சைக்கிள்களை ஓட்டினாலும், விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதையும் விரும்ப கூடியவர்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) கார் ஒன்றை அயிஷா ஷர்மா வாங்கியிருந்தார்.

தனது சகோதரியும், பிரபல நடிகையுமான நேஹா ஷர்மாவுடன் (Neha Sharma) இணைந்து, இந்த காரை அவர் வாங்கியிருந்தார். இந்த காரின் விலை (Price) 1 கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த காரில் அயிஷா ஷர்மாவை அடிக்கடி காண முடியும். வெகு சமீபத்தில் கூட, அவர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

அயிஷா ஷர்மா மற்றும் நேஹா ஷர்மா ஆகியோரின் தந்தையான அஜீத் ஷர்மா (Ajit Sharma), பீஹார் மாநிலத்தில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி ஆவார். அங்கு காங்கிரஸ் (Congress) கட்சியின் முக்கியமான முகங்களில் ஒருவராக அஜீத் ஷர்மா உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Image Source: @Viral Bhayani via Instagram

More from DriveSpark

Article Published On: Wednesday, July 9, 2025, 15:33 [IST]
English summary
Actress aisha sharma spotted riding bicycle viral video full details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+