அந்த பிரபல நடிகையின் தங்கை தானே இவர்? முகம் மட்டுமில்ல, யூஸ் பண்ணுற பென்ஸ் காரும் ஒரே மாதிரி இருக்கு!!

பாலிவுட் (Bollywood) சினிமா பிரபலங்களையும் சொகுசு கார்களையும் பிரிக்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு வாரமும் எதாவது ஒரு பாலிவுட் பிரபலம் புதியதாக ஒரு விலையுயர்ந்த காரை வாங்குகின்றனர். இந்தியாவின் எல்லா சினிமா வட்டாரங்களிலும் அவ்வப்போது சொகுசு கார்களை வாங்குவது வாடிக்கையானதாக உள்ளது என்றாலும், பாலிவுட் துறையில் இது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

தங்களை எப்போதும் அப்டேட்டாக காட்டிக் கொள்வதற்காக அவர்கள் செய்யும் வேலை இதுவாகும். இதனாலேயே, எந்தவொரு பாலிவுட் பிரபலத்தை பொது வெளியில் பார்க்கும்போதும் அவருடன் புத்தம் புதிய சொகுசு கார் உள்ளது. அந்த வகையில் தற்போது, நடிகை ஆயிஷா சர்மா (Aisha Sharma) தனது விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார் உடன் காட்சி தந்துள்ளார்.

actress aisha sharma s mercedes-benz gle luxury car

பீகார் மாநிலத்தில் பிறந்தவரான 33 வயதான நடிகை ஆயிஷா சர்மா பெரும்பாலான நடிகைகளை போல் இளம் வயதில் இருந்தே மாடலிங் (Modeling) துறையில் ஈடுப்பட ஆரம்பித்து, அதன் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தவர். 2016ஆம் ஆண்டில் வெளியான இசை ஆல்பம் வீடியோ ஒன்றில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதை அடுத்து இதன்பின் பட வாய்ப்புகள் குவியும் என ஆயிஷா சர்மா நினைத்தார்.

ஆனால், நடந்ததோ வேறு ஆகும். 2016இல் வெளியான பிரபல நடிகரும், பாடகருமான ஆயுஷ்மான் குர்ரானா (Ayushmann Kurrana)-இன் இசை ஆல்பத்தில் நடித்து ஓரளவுக்கு கவனத்தை பெற்றததன் மூலம் 'சத்யமெவா ஜெயதே' (Satyameva Jayate) என்கிற நடிகர் ஜான் ஆபிரகாமின் இந்தி திரைப்படத்தில் கதாநாயாகி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படம் 2018இல் திரைக்கு வந்தது.

actress aisha sharma s mercedes-benz gle luxury car

ஆனால், நடிகை ஆயிஷா சர்மா நடித்து தற்போதுவரையில் திரைக்கு வந்துள்ள ஒரே திரைப்படம் இது மட்டுமே ஆகும். அதன்பின் கொரோனா காலக்கட்டத்தில் மொத்தமாக முடங்கி போன ஆயிஷா சர்மாவின் நடிப்பில் 2022இல் வெப் சீரிஸ் (Web Series) ஒன்று வெளிவந்தது. அதன்பின், சில இசை ஆல்பம் வீடியோக்களில் இடம்பெற்றாலும், திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இதுவரையில் இவருக்கு கிடைக்கவில்லை.

ஆனால், இவரது அக்கா நேகா சர்மா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், நடிகை ஆயிஷா சர்மா மும்பையின் பந்த்ரா பகுதியில் தனது விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ (GLE) கார் உடன் காட்சி தந்துள்ளார். இவர் வைத்திருப்பது முற்றிலும் கருப்பு நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கார் ஆகும்.

actress aisha sharma s mercedes-benz gle luxury car

அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்களுக்காகவும், சிறந்த பாதுகாப்பு வசதிகளுக்காகவும் பிரபலமான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.99 லட்சத்தில் இருந்து ரூ.1.17 கோடி வரையில் உள்ளன. 300டி ஏஎம்ஜி லைன், 450 மற்றும் 450டி என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பென்ஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் தரமான கார்களுள் ஒன்று, ஜிஎல்இ ஆகும். இது நன்கு உயரமான எஸ்யூவி கார் ஆகும். ஆதலால், கேபினுக்குள் நன்கு அதிக இடவசதி கிடைப்பதுடன், மிகவும் சவுகரியமான பயணத்தையும் இந்த காரில் பெற முடிகிறது. இத்தகைய பென்ஸ் காரை தான் நடிகை ஆயிஷா சர்மா வைத்துள்ளார். ஆனால், இந்த காரை இவர் வாங்கினாரா அல்லது இவரது சகோதரி நடிகை நேகா சர்மா வாங்கினாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, July 11, 2025, 23:59 [IST]
English summary
Actress aisha sharma spotted with her mercedes benz gle luxury car in mumbai bandra
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X