போலி முகவரி கொடுத்து பென்ஸ் காரை பதிவு செய்து ரூ.20 லட்சம் மோசடி: நடிகை அமலாபால் மீது புகார்
போலி முகவரி கொடுத்து நடிகை அமலாபால் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரி ஏய்ப்பு செய்வதற்காக, போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கியதாக நடிகை அமலாபால் மீது புகார் எழுந்துள்ளது. கேரளாவை சேர்ந்த மாத்ரூபூமி பத்திரிக்கையில் இந்த மோசடி குறித்து செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழ், மலையாள திரை உலகில் பிரபலமான நடிகை அமலா பால். தமிழிலில் இவர் நடித்த மைனா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்தன. இதனால், தமிழக ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் சொகுசு காரை வாங்கி இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 4ந் தேதி சென்னையிலுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான ட்ரான்ஸ் கார் ஷோரூமிலிருந்து இந்த காரை வாங்கி இருக்கிறார்.
Recommended Video


அதன் பின்னர், இந்த கார் ஆகஸ்ட் 9ந் தேதி புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இந்த காரை கேரளா எடுத்து சென்று பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், அமலாபால் கேரள அரசுக்கு வரி செலுத்தாமல், இது போன்று புதிய சொகுசு காரை வாங்கி பயன்படுத்தி வருவது குறித்து அம்மாநில போக்குவரத்து துறைக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த எர்ணாகுளம் போக்குவரத்து துறையினர் விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். விசாரணையில் அமலா பாலின் கில்லாடித்தனங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி போக்குவரத்து துறை சட்டத்தின்படி, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவரின் முகவரியில் மட்டுமே பதிவு செய்ய முடியும். அதன்படி, புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவரின் பெயரில் இந்த புதிய சொகுசு கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதில், வேடிக்கை என்னவெனில், சம்பந்தப்பட்ட முகவரியில் வசிக்கும் பொறியியல் மாணவருக்கு இந்த விஷயம் தெரியாதாம். நடிகை அமலாபாலுக்கு தனக்கும் அறிமுகம் இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். அவருக்கு தெரியாமலேயே, அவரது பெயரில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதர தொடர்புடைய செய்திகள்:

மேலும், கேரளாவை சேர்ந்த அமலாபால் புதுச்சேரியில் அந்த சொகுசு காரை வாங்கியதால், கேரள அரசிடம் ரூ.20 லட்சம் வரை நடிகை அமலாபால் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இதனால், நடிகை அமலாபால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். கேரள போக்குவரத்து விதிப்படி, இதுபோன்ற சொகுசு கார்களுக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

ஆனால், புதுச்சேரியில் வரி குறைவு. கேரளாவில் ரூ.20 லட்சம் செலுத்த வேண்டிய நிலையில், புதுச்சேரியில் ரூ.1.50 லட்சம் மட்டுமே வரியாக செலுத்த வேண்டும். எனவே, கேரளாவில் பதிவு செய்யாமல், புதுச்சேரியில் பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால் செய்த மோசடி நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கடைகிக் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மலையாளம் மற்றும் தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை அமலாபால் வாங்கியிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் உலகின் மிகச் சிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்று. இந்த காரில் ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மிக தாராளமான இடவசதி கொண்ட இந்த காரில் 255 பிஎச்பி பவரையும்,, 620 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த கார் ரூ.1.14 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்ரோடு விலை ரூ.1.35 கோடியாகும். ஆனால், புதுச்சேரியில் மாநில அரசு வரி குறைவு என்பதால், அங்கு அமலாபால் தனது காரை பதிவு செய்துள்ளார் என்பது புகார்.

பிற மாநிலங்களைவிட புதுச்சேரியில் வரி குறைவு என்பதால், அங்கு சொகுசு கார்களை வாங்குவதை பலர் புத்திசாலித்தனமாக கருதுகின்றனர். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் தங்கள் மாநிலங்களில் அதிக வரி செலுத்த வேண்டி இருப்பதை கருதி, புதுச்சேரியில் வாங்குகின்றனர்.

இதுபோன்று பெங்களூரை சேர்ந்த பல கோடீஸ்வரர்கள் புதுச்சேரியில் சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்தியதால், அம்மாநில போக்குவரத்து துறை புதுச்சேரி பதிவு எண் கொண்ட சொகுசு கார்களை பொறி வைத்து பிடித்து பறிமுதல் செய்தது. இந்த நிலையில், கேரளாவிலும் புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது பிடி இறுகி உள்ளது.
இதர தொடர்புடைய செய்திகள்:


Click it and Unblock the Notifications








