காஸ்ட்லியான காரில் ஏறி போனது அந்த நடிகர் பெத்த பொண்ணா! சினிமால பெரிய நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிட போறாங்க!

இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 (Land Rover Freelander 2). இந்த கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 காரின் விற்பனை கடந்த சில வருடங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. விற்பனையில் இருந்து விலக்கப்பட்டாலும் கூட, இந்திய சாலைகளை விட்டு இந்த கார் இன்னும் அகலவில்லை. லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 உரிமையாளர்கள் ஒரு சிலர் இன்னமும் அந்த காரை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர்.

இதற்கு சித்தார்த் தவான் (Siddharth Dhawan) குடும்பம் ஒரு உதாரணம். இவர் மிகவும் பிரபலமாக உள்ள பாலிவுட் நடிகர் ஆவார். இவரது மகள் அன்ஜினி தவானும் (Anjini Dhawan) பாலிவுட்டில் தற்போது பிரபலமான முகமாக மாறி கொண்டுள்ளார். வளர்ந்து வரும் நடிகையாக உள்ள அன்ஜினி தவானுக்கு என ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கியுள்ளது.

Actress Anjini Dhawan Spotted In Land Rover Freelander 2

எனவே எதிர்காலத்தில் திரைத்துறையில் சாதிப்பார் என கருதப்படும் இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் அன்ஜினி தவான் கார் ஒன்றில் ஏறி பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. அது இந்த செய்தியின் தொடக்கத்தில் நாங்கள் குறிப்பிட்ட லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 கார் ஆகும்.

இந்திய சந்தையில் கடைசியாக 54.31 லட்ச ரூபாய் முதல் 66.49 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மொத்தம் 5 பேர் பயணம் செய்ய கூடிய வகையில், லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Land Rover Freelander 2

இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில், குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்றாகும். சித்தார்த் தவான் குடும்பம் தவிர்த்து, பாலிவுட் நடிகையான ஹீமா குரேஷி (Huma Qureshi) உள்பட பலரும் லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 காரை வைத்துள்ளனர்.

ஹீமா குரேஷி, தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமானவர்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தில் ஹீமா குரேஷி நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இப்படி பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து கொண்டுள்ள லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 420 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். எனவே மிகவும் சவால் நிறைந்த ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற கார்களில் ஒன்றாகவும், லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 கார் திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 காரில் அன்ஜினி தவான் பொது இடங்களுக்கு வருவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் பொது இடங்களில் அவரை லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 காருடன் பார்க்க முடிந்துள்ளது. எனவே இது அவருக்கு மிகவும் விருப்பமான காராக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2025, 17:13 [IST]
English summary
Actress anjini dhawan spotted in land rover freelander 2 viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+