மெழுகு சிலை மாதிரி இருக்காங்க! அந்த படத்துல எல்லாம் நடிச்சிருக்காங்களா! அதுக்கு கெடச்ச பரிசுதான் இந்த கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes Benz C-Class). இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலர், மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரை வைத்துள்ளனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் ஆரம்ப விலை 61.85 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 69 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இந்த 3 இன்ஜின்கள் உடனும், 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

Actress Anju Kurian Buys Mercedes Benz C-Class

அத்துடன் இந்த 3 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், சொகுசு வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை. இதில், 11.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை எல்லாம் தவிர, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் யூஎஸ்பி போர்ட்கள், பனரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் அஸிஸ்ட் மற்றும் ஏர்பேக்குகள் உள்ளிட்ட வசதிகளும், மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரில் உள்ளன.

Actress Anju Kurian

இவ்வளவு சிறப்பம்சங்கள் நிரம்பிய காரை அஞ்சு குரியன் (Anju Kurian) தற்போது வாங்கியுள்ளார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு நடிகை (Actress) ஆவார். மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரை வாங்கியிருப்பது தொடர்பாக, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை அஞ்சு குரியன் வெளியிட்டுள்ளார்.

''மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்துள்ளேன். இதுதான் என்னுடைய முதல் கார். இது எனக்கு எவ்வளவு பெரிய விஷயம்? என்பதை என்னால், வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. கனவு நிறையவேறியதை உணர்கிறேன். என்னுடைய தியாகம், தூக்கம் இல்லாத இரவுகள் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்புதான் இது'' என அந்த பதிவில், அஞ்சு குரியன் கூறியுள்ளார்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அஞ்சு குரியன் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு நடிகை ஆவார். தமிழ் மொழியை பொறுத்தவரையில், நேரம், சென்னை 2 சிங்கப்பூர் மற்றும் ஜூலை காற்றில் உள்ளிட்ட திரைப்படங்களில் எல்லாம் அஞ்சு குரியன் நடித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வளர்ந்து வரும் நடிகைகள், கடின உழைப்பின் மூலம், மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். அதிலும் குறிப்பாக முதல் காரையே மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக வாங்கியிருப்பது, பாராட்டுக்குரியது. அஞ்சு குரியனுக்கு தற்போது 31 வயது மட்டுமே ஆகிறது. எனவே எதிர்காலத்தில் அவர் நிறைய சொகுசு கார்களை வாங்கலாம்.

அவர் தற்போது வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கார், இந்திய சந்தையில் ஆடி ஏ4 (Audi A4) மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இந்த கார்களுக்கு எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 13:07 [IST]
English summary
Actress anju kurian buys mercedes benz c class luxury sedan price features engine
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+