ஒரு சிலர் கிட்ட மட்டும்தான் இருக்கு... மிகவும் விலை உயர்ந்த பென்ஸ் காரை வாங்கிய பிரபலம்... எவ்ளோனு தெரியுமா?
மிகவும் விலை உயர்ந்த பென்ஸ் காரை பிரபலம் ஒருவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அங்கிதா லோகண்டே (Ankita Lokhande). தொலைக்காட்சி சீரியல்கள் மட்டுமல்லாது, பாலிவுட் திரைப்படங்களிலும் அங்கிதா லோகண்டே முகம் காட்டியுள்ளார். எனவே இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

நடிப்பு தவிர, கார்கள் மீதும் அங்கிலதா லோகண்டேவிற்கு ஆர்வம் அதிகம். இந்த சூழலில் மேலும் ஒரு காரை அங்கிதா லோகண்டே தனது கார் கலெக்ஸனில் சேர்த்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes-Benz V-Class) காரைதான் அங்கிதா லோகண்டே சமீபத்தில் வாங்கியுள்ளார். இது சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

பிக் பாய் டாய்ஸ் இந்தியா (Big Boy Toyz India) நிறுவனத்திடம் இருந்து அங்கிதா லோகண்டே இந்த காரை வாங்கியுள்ளார். சொகுசு மற்றும் செயல்திறன் மிக்க கார்களை விற்பனை செய்வதில் பிக் பாய் டாய்ஸ் இந்தியா நிறுவனம் தனி கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு பிராண்டுகளை சேர்ந்த கார்களையும் பிக் பாய் டாய்ஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

அங்கிதா லோகண்டே தனது கணவருடன் சென்று, மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரை டெலிவரி எடுத்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரின் எக்ஸ்க்ளூசிவ் எல்டபிள்யூபி (Mercedes-Benz V-Class Exclusive LWB) வேரியண்ட்டை, அவர் வாங்கியுள்ளார். இந்த காரை டெலிவரி எடுத்தபோது, அங்கிதா லோகண்டே மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததை நம்மால் புகைப்படங்களில் காண முடிகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் கார் உருவத்தில் மிகவும் பெரியது. இந்த காரின் எடை 2,500 கிலோவிற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஹெச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு 9ஜி-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தியானது, பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே தனது பல்வேறு மாடல்களை உற்பத்தி மற்றும் அசெம்பிள் செய்து வருகிறது. ஆனால் அந்த கார்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் இல்லை.

மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் கார் சிபியூ (CBU - Completely Built Unit) வழியில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் சொகுசு எம்பிவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்பெயின் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் கார்கள்தான் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சிபியூ வழியில் விற்பனை செய்யப்படுவதால், மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரின் விலை மிகவும் அதிகம். ஆனால் வாடிக்கையாளர்களிடம் அமோக ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், இந்தியாவிலேயே வி-க்ளாஸ் காரை அசெம்பிள் செய்வது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பரிசீலிக்கும்.

தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரின் ஆரம்ப விலை 71.10 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.46 கோடி ரூபாயாக உள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த காரின் ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும் என்பதால், இது மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அங்கிதா லோகண்டே வாங்கியுள்ள எக்ஸ்க்ளூசிவ் எல்டபிள்யூபி வேரியண்ட்டின் ஆன் ரோடு விலை தோராயமாக 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரும். ஆனால் அங்கிதா லோகண்டே வாங்கியுள்ள காரின் துல்லியமான விலை எவ்வளவு? என்பது உறுதியாக தெரியவில்லை. கடந்த காலங்களில் இந்தியாவின் பிரபல மனிதர்கள் பலர் மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மிகவும் முக்கியமானவர். அதேபோல் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் கூட மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரை வாங்கியுள்ளார். இது இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எம்பிவி கார்களில் ஒன்றாகும். அதிக விலை காரணமாக இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மட்டுமே மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் கார் உள்ளது.


Click it and Unblock the Notifications








