கல்யாணம் பண்ணாமலேயே ஒன்னா வீடு வாங்கிட்டாங்க! இப்ப புதுசா காஸ்ட்லி காரையும் சேர்த்தே வாங்கிட்டாங்க!
மலையாள சீரியல் நடிகை அனு ஜோசப் மற்றும் அவரது நண்பர் அஸி ராக்கி ஆகியோர் இணைந்து மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ காரை சொந்தமாக வாங்கியுள்ளனர். இந்த கார் ரூ33 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த நடிகைக்கும் அவரது நண்பருக்கும் என்ன சம்மந்தம்? இவர்கள் இருவரும் யார்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மலையாள உலகில் பிரபலமானவர் அஸி ராக்கி. இவர் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மலையாள பிக்பாஸ் 6வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர். அங்கு ஏற்பட்ட பிரச்சனையில் இவர் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எவ்வளவு செல்வ செழிப்பாக வாழ்ந்தார் என இவர் பேசியது வைரலாகிறது.

இந்நிலையில் மலையாள சிரீயல்களில் நடிகையாக நடித்து வருபவர் அனு ஜோசப். இவரும் பிக்பாஸ் 5வது சீசனில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் தான். இந்நிலையில் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இருவரும் இணைந்து தொழில் செய்கின்றனர். இவர்கள் கேரளாவில் ஒரு சொகுசு வீட்டை வாங்கினார்கள். அப்பொழுது இவர்கள் காதலர்களா? ஒரே வீட்டில் வாழப்போகிறார்களா என்ற பேச்சு எல்லாம் எழுந்தது.
ஆனால் அதற்கு அவர்கள் நண்பர்கள் தான் எனவும் தாங்கள் சேர்ந்து வாங்கிய வீட்டில் தாங்கள் வாழவில்லை அதற்கு பதிலாக சினிமா சூட்டிங்கிற்காக அந்த வீட்டை வாடகைக்கு விடப்போகிறோம் என்று கூட ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாக பரவும் இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கார் வாங்கும் வீடியோவை SS மஹிந்திரா வீல்ஸ் என்ற யூடியூப் பக்கம் எடுத்து வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவில் அஸிராக்கி, அனு ஜோசப் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காரை பொருத்தவரை இந்தியாவில் ரோ23.20 லட்சம் முதல் டாப் மாடல் கார் 33.32 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தற்போது டாப் மாடல் காரின்டெலிவரி மட்டுமே நடந்து வருவதால் இவர்கள் வாங்கியது டாப் மாடல் காராக தான் இருக்கும். இந்த கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காராக இருக்கிறது.

இந்த காரை மஹிந்திரா நிறுவனம் இன்குளோவ் பிளாட்ஃபார்மில் உருவாக்கியுள்ளது. இ்நத காரில் சிங்கிள் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு பவரை வழங்க 59kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது 228 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.7 நொடியில் பிக்கப் செய்து விடும் இந்த கார் முழு சார்ஜில் 656 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காிரன் விலை ரூ33.32 லட்சம் ஆகும். இவர்கள் இருவரும் காதலர்கள் இல்லை , திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. ஆனால் காஸ்ட்லியான வீடு, கார்களை எல்லாம் இருவரும் சேர்ந்து வாங்கி வருகின்றனர். இது பல்வேறு விதமான பேச்சுகளை தற்போது எழுப்பியுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை அனு ஜோசப் மற்றும் அஸி ராக்கி ஆகியோர் தற்போது மலையாள உலகில் பிரபலமாக இருக்கின்றனர். இருவம் இணைந்து காஸ்ட்லியான கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த செய்தி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த கார் டெலிவரி வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









