டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

Written By:

சினிமா நட்சத்திரங்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவது குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சில சினிமா நட்சத்திரங்கள் தன்னுடன் பணியாற்றும் இயக்குனர், பணியாளர்களுக்கு கார் பரிசு வழங்கும் கலாச்சாரமும் இப்போது பரவி வருகிறது.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

மேலும், சிலர் தங்களது பிறந்தநாளுக்கு தனக்குத் தானே விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி பரிசளித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகும். இந்த வழக்கமான நடைமுறைகளிலிருந்து நடிகை அனுஷ்கா மாறுபட்டு செய்த காரியம் குறித்த செய்தி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

தென் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அனுஷ்கா அண்மையில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். தன்னுடைய பிறந்தநாள் அன்று தன்னிடம் கார் டிரைவராக பணியாற்றி வருபவருக்கு புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

ரூ.12 லட்சம் மதிப்புடைய அந்த காரை தனது பிறந்தநாள் அன்று டிரைவருக்கு பரிசு கொடுத்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

படப்பிடிப்புகளின்போது இரவு, பகல் பாராமல் தன்னை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வரும் அவரது உழைப்பையும், நேர்மையையும் பாராட்டும் விதமாக இந்த காரை பரிசு கொடுத்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

கார் பரிசு கொடுத்திருப்பது மனதுக்கு மிகுந்த சந்தோஷம் அளிப்பதாகவும் நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளாராம்.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

பாகுபலி படம் மூலமாக இந்திய அளவில் பிரபல நடிகையாகி இருக்கும் நடிகை அனுஷ்கா ஒரு திரைப்படத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.140 கோடியாக தெரிவிக்கப்படுகிறது. டிரைவருக்கு கார் பரிசளித்திருக்கும் நடிகை அனுஷ்காவிடம் பல சொகுசு கார்கள் உள்ளன.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் மற்றும் ஆடி ஏ6 உள்ளிட்ட சொகுசு கார் மாடல்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார். அவர் விலை உயர்ந்த கார்கள் வாங்கியபோது எந்த செய்தியும் வெளியாகவில்லை.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

ஆனால், அவர் தனது கார் டிரைவருக்கு கார் பரிசளித்திருப்பது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இதுதொடர்பாக, படம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா?

இதேபோன்று, கடந்த 2012ம் ஆண்டில் கார் டிரைவருக்கு நடிகை அனுஷ்கா கார் பரிசளித்ததாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actress Anushka Shetty has gifted brand new car to her driver.
Story first published: Wednesday, November 8, 2017, 16:37 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark