34 வயது நடிகைக்கு இதுதான் முதல்முறையாம்! மஹிந்திரா வாகனம் மட்டும் இல்லைனா இது சாத்தியமாகி இருக்காது!!

மஹிந்திரா தார் (Mahindra Thar), இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம். தாரின் விற்பனையை முறியடிக்க மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஜிம்னி (Jimny) வாகனத்தை அறிமுகம் செய்த போதிலும், தார் வாகனத்தை விற்பனையில் முந்த முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், மஹிந்திரா தார் வாகனத்தின் சிறந்த ஆஃப்-ரோடு திறன் ஆகும். அதாவது, கரடு முரடான பாதைகளுக்கும் தைரியமாக கொண்டு செல்லக்கூடியதாக தார் விளங்குகிறது.

ஆஃப்-ரோடு பயணங்களை அதிகமாக மேற்கொள்ளாதவர்களுக்கு கூட மஹிந்திரா தார் வாகனம் கரடு, முரடான ஆஃப்-ரோடு பயணங்களின் போது சிறந்த கண்ட்ரோலையும், ஹேண்ட்லிங்கையும் வழங்குகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், சினிமா நடிகை (Cinema Actress) ஒருவர் முதல்முறையாக ஆஃப்-ரோடு பயணத்தையும் மஹிந்திரா தார் வாகனத்தில் மேற்கொண்டுள்ளார்.

actress anusree nair off-road driving

இந்த நடிகை வேறு யாருமில்லை... முன்னணி மலையாள திரைப்பட நடிகைகளுள் ஒருவரான அனுஸ்ரீ நாயர் (Anusree Nair) ஆவார். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பிறந்த 34 வயதான அனுஸ்ரீ, முன்னணி மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டில் சினிமா துறைக்குள் நடிகையாக கால் பதித்தவர், தற்போதுவரையில் 30க்கும் அதிகமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தை தாண்டி வேறெந்த மொழி படங்களிலும் நடிகை அனுஸ்ரீ நடித்தது இல்லை. திரைப்படங்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சி தொடர்களிலும் அனுஸ்ரீ நடித்துள்ளார். மேலும், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதையும், நடுவராக தீர்ப்பு வழங்கும் பணிகளையும் கூட நடிகை அனுஸ்ரீ மேற்கொண்டுள்ளார். இவ்வாறு, புது புது விஷயங்களை செய்து பார்ப்பதில் ஆர்வமிக்கவராக விளங்கும் அனுஸ்ரீ அதே ஆர்வத்துடன் முதல்முறையாக ஆஃப்-ரோடு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

actress anusree nair off-road driving

மேலும், இந்த ஆஃப்-ரோடு பயணம் தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் அனுஸ்ரீ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், "ஒரு புதிய ஓட்டுனரின் முதல் ஆஃப்-ரோடிங் அனுபவம்... மனதை மயக்கும் பயணம்... இதை சாத்தியமாக்கியதற்கு 4பை4டேஸ் (4by4days) குழுவுக்கு மிக்க நன்றி. எனக்கு பிடித்தமான தார் வாகனத்தை ஓட்டும்போது உண்மையிலேயே சக்திவாய்ந்த அனுபவமாக இருந்தது.

எளிதாகக் கட்டுப்படுத்தக்கூடிய இவ்வளவு சக்தியை அனுபவிக்க விரும்பும் எவருக்கும் நான் இதை பரிந்துரைக்கிறேன். பயண அனுபவம் மிகவும் பிடித்திருந்தது" என நடிகை அனுஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். இதில், அனுஸ்ரீ குறிப்பிட்டுள்ள 4பை4டேஸ் குழு ஆனது, இவ்வாறு விருப்பப்படுவர்களுக்கு ஆஃப்-ரோடு வாகனங்களை கரடு முரடான ஆஃப்-ரோடு பாதை உடன் வழங்கும் நிறுவனமாக செயல்படுகிறது.

ஆஃப்-ரோடு பயணங்கள் நாம் நினைப்பதை காட்டிலும் ஆபத்தானவை ஆகும். ஏற்ற, இறக்கமான மலைப்பாதைகளில் ஆஃப்-ரோடு பயணங்களை எந்தவொரு வாகனத்தில் மேற்கொண்டாலும் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், நம்மில் நிறைய பேருக்கு சகதி மற்றும் பாறை கற்கள் மிகுந்த பாதையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இந்த ஆசை தான் 4பை4டேஸ் போன்ற நிறுவனங்களுக்கு மூலத்தனம் ஆகும்.

ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து, உதவிக்கு பலரை கொண்டுள்ள நிறுவனமாக 4பை4டேஸ் விளங்குகிறது. தேவைப்பட்டால், வாகனத்திற்குள் கூட ஒருவர் தொடர்ந்து உங்களுக்கு வழிக்காட்டுதல்களை வழங்குவார். தற்போது நடிகை அனுஸ்ரீ மேற்கொண்ட ஆஃப்-ரோடு பயணத்தின் போதும் கூடவே ஒருவர் முன் இருக்கையில் அமர்ந்திருப்பதை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்ற வாகனம், மஹிந்திரா தார் ஆகும். 4-வீல்-டிரைவ் சிஸ்டம் மற்றும் தரையில் இருந்து நன்கு உயரத்தில் அமைக்கப்பட்ட அடிப்பகுதி உடன் எந்தவொரு சாலையிலும் இயங்கக்கூடியதாக மஹிந்திரா தார் விளங்குகிறது. இவற்றின் உதவியுடன், முதல்முறையாக ஆஃப்-ரோடு பயணத்தை மேற்கொள்வோர் கூட இந்த மஹிந்திரா வாகனத்தை எளிதாக கண்ட்ரோல் செய்ய முடியும் என்பதற்கு நடிகை அனுஸ்ரீ தான் சாட்சி ஆவார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 14, 2025, 13:31 [IST]
English summary
Actress anusree nair did off road driving in mahindra thar check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+