விஜயோட ரோல்ஸ் ராய்ஸ் காருல போனாங்களே அந்த நடிகைதானே இவங்க.. புதுசா இந்த காரை வாங்கிட்டாங்களா!..

இந்தியாவின் வளர்ந்து வரும் நடிகையாக அறியப்படுகின்றார் அபர்ணா தாஸ். இவரே புதிதாக டாடா (Tata) கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்-இன் 'பீஸ்ட்' மற்றும் 'டாடா' போன்ற தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களில் நடித்தவரே இந்த அபர்ணா தாஸ். இதுதவிர, மலையாள படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார். இந்த நடிகையே தற்போது டாடா காரை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது நெக்ஸான் (Nexon) கார் மாடல் ஆகும்.

இந்தியர்களின் பிரியமான மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel), சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் (EV) ஆகிய அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய காரையே அபர்ணா தாஸ் தற்போது வாங்கி இருக்கின்றார்.

Aparna das buys tata nexon

அபர்ணா தாஸ், தமிழில் இதுவரை இரண்டே படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார். பீஸ்ட் படம் வாயிலாகவே இவர் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகினார். இந்த படம் சக்சஸ் மீட்டிற்கு பின்னரே நடிகர் விஜய் உடன் அபர்ணா தாஸ் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரில் பயணித்திருந்தார்.

அப்போது, அவர்களுடன் இயக்குநர் நெல்சன், பூஜா ஹெக்டே, மனோஜ் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரும் அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்தனர். இந்த வீடியோ அப்போது மிகப் பெரிய அளவில் வைரலாகியது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நடிகையே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு தரம்மிக்க டாடா நெக்ஸான் காரை வாங்கி இருக்கின்றார்.

அவர் நெக்ஸானின் எந்த வேரியண்டை வாங்கி இருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும் வீடியோவை வைத்து பார்க்கையில் அவர் வாங்கி இருப்பது நெக்ஸானின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அல்ல அது ஐசிஇ வெர்ஷன் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. இந்தியர்கள் மத்தியில் இதன் ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் இரண்டிற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

சமீபத்தில்கூட இந்த கார் 8 லட்சம் யூனிட் விற்பனை எனும் மாபெரும் சாதனை மைல் கல்லை எட்டியது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவின் சப் 4 மீட்டர் எஸ்யூவி (Sub-4 Meter SUV) கார் பிரிவிலேயே இந்த சாதனையை அது படைத்தது. போட்டி நிறைந்த ஓர் பிரிவு இது ஆகும்.

Aparna das tata nexon

மேலும், இந்தியாவில் 8 லட்சம் யூனிட்டுகளைக் கடந்து விற்பனையில் இருக்கும் முதல் டாடா எஸ்யூவி ரக கார் இதுவே ஆகும். இத்தகைய சிறப்புமிக்க காரையே அபர்ணா தாஸ் தற்போது வாங்கி இருக்கின்றார். இவருக்கு சமீபத்திலேயே நடிகர் தீபக் பரம்போலுடன் திருமணம் நடைபெற்றது.

இதற்கு பின்னர் அவர் குறிப்பிடத்தக்க மைல்கற்களை தன்னுடைய வாழ்க்கையில் எட்டி வருகின்றார். சமீபத்தில் வீடு ஒன்றை அவர் வாங்கியது பலரின் கவனத்தை ஈர்ந்தது. இந்த நிலையிலேயே தற்போது அவர் டாடா காரை வாங்கி மீண்டும் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்து உள்ளார்.

Aparna das and his hubby buys tata nexon

இந்தியாவில் ஐசிஇ வெர்ஷனில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோடார்க் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றது. இதில், பெட்ரோல் மோட்டார் 5,500 ஆர்பிஎம் இல் 86.7 பிஎச்பி பவரையும், 1,750-4,000 ஆர்பிஎம்மில் 170 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

அதேசமயம் நெக்ஸான் டீசல் எஞ்சினோ 3,750 ஆர்பிஎம்மில் 83.3 பிஎச்பியையும், 1,500 - 2,750 ஆர்பிஎம்மில் 260 என்எம் டார்க்கையும் உருவாக்கும். இதுபோன்று ஆற்றலை உருவாக்குவதில் மட்டுமல்ல அதிக சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் நெக்ஸான் எஸ்யூவி கார் மாடல் ஆக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, காஸ்ட்லியான கார்களில் கிடைக்கக் கூடிய அம்சங்களான ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் வசதிக் கொண்ட ஃப்ளிப் சாவி, எலெக்ட்ரிக்கலாக செயல்படுத்தும் வசதிக் கொண்ட பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், 17.78 செமீ அளவில் ஹர்மேன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையே டாடா மோட்டார்ஸ் இந்த நெக்ஸானில் காரில் வழங்கி இருக்கின்றது.

அதுமட்டுமல்ல, ஆட்டோ ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியும் வழங்கப்பட்டு இருக்கும். இந்த அம்சங்களை நெக்ஸானின் ஆரம்ப நிலை வேரியண்டிலேயே பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இவை மட்டுமின்றி, பவர் வசதிக் கொண்ட ஜன்னல்கள், செல்போனை சார்ஜ் செய்ய ஏதுவாக யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஃபாலோ மீ ஹோம் லைட், வீல் கவர்கள், இ-ஷிஃப்டர் மற்றும் பேடில் ஷிஃப்டர் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் நெக்ஸான் எஸ்யூவி காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல மைலேஜ் தருவதிலும் நெக்ஸான் ஓர் சிறந்த வாகனமாக காட்சியளிக்கின்றது. பெட்ரோல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 17 கிமீ முதல் 18 கிமீ வரையிலும், டீசல் நெக்ஸான் லிட்டர் ஒன்றிற்கு 22.3 கிமீ வரையிலும் மைலேஜ் தரும். இதேபோல், சிஎன்ஜி ஆப்ஷன் நெக்ஸான் ஒரு கிலோவிற்கே 18 கிமீ முதல் 20 கிமீ வரையிலும் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மைலேஜ் தருவதில் மட்டுமில்லைங்க பாதுகாப்பு தருவதிலும் இந்த கார் மாடல் தலை சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையே இந்த விஷயத்தில் நெக்ஸான் பெற்றிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிஜ வாழ்க்கையில் எண்ணற்ற உயிர்களை இந்த கார் மாடல் காப்பாற்றி இருக்கின்றது. காப்பாற்றிக் கொண்டும் இருக்கின்றது.

டாடா நெக்ஸான் இந்தியாவில் ரூ. 8.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது பெட்ரோல் ஆப்ஷனின் ஆரம்ப விலை ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், டீசல் மோட்டார் 9,99,990 ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. நெக்ஸான்.இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ. 12.49 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய காஸ்ட்லியான காரையே பீஸ்ட் மற்றும் டாடா போன்ற முன்னணி தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் அபர்ணா தாஸ் வாங்கி உள்ளார். பெரும்பாலும் நடிகைகள் பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பென்ஸ் என ஆடம்பர கார்களை வாங்கிக் கொண்டிருக்கையில் அபர்ணா தாஸ் டாடா நெக்ஸான் காரை தேர்வு செய்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2025, 14:39 [IST]
English summary
Actress aparna das recently acquired brand new tata nexon suv
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X