இந்தியாவின் காமெடி குயின் இவர்தான்னு சொல்றாங்க! 15 வருட சினிமா வாழ்க்கையில் 3 லக்சரி கார்கள்

நகைச்சுவை நடிகர்களை அதிக எண்ணிக்கையில் பார்த்திருப்பீர்கள். ஆனால், நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதுமே சற்று குறைவுதான். தமிழில், மனோரம்மா, கோவை சரளா என விரல்விட்டு எண்ணிவிடலாம். இருப்பினும், புதியது புதியதாக நகைச்சுவை நடிகைகள் அவ்வப்போது சினிமாவிற்குள் எண்ட்ரீ கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், பாலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட கடந்த 15 வருடங்களாக நகைச்சுவை நடிகையாக ஜொலித்து வருபவர், பார்தி சிங் (Bharti Singh) ஆவார். 2008ஆம் ஆண்டிலேயே திரைத்துறையை நோக்கிய இவரது பயணம் துவங்கிவிட்டது.

நம்ம ஊரில் கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற டிவி காமெடி ரியாலிட்டி ஷோக்கள் இருப்பதுபோல, இந்தி மொழியிலும் 'தி கிரேட் இந்தியன் லாஃப்பர் சேலஞ்ச்' (The Great Indian Laughter Challenge) நிகழ்ச்சி 2008இல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இறுதியில் 2வது இடத்தை பிடித்தவர் தான், பார்தி சிங் ஆவார்.

bharti singh luxury car collections

அதன்பின் பல்வேறு காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு ஆண் காமெடி நடிகர்களுக்கு சரிக்கு சமமாக பார்தி சிங் சவாலாக இருந்தார். அதன் மூலமாக, எதிர்பார்த்ததை போல் 2011இல் பார்த் சிங்கை தேடி பாலிவுட் திரைப்பட வாய்ப்பு வந்தது. அதன்பின் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக இந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்தார்.

இதற்கிடையில், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பார்தி சிங்கிற்கு 2016க்கு பின் பெரியதாக திரைப்பட வாய்ப்பு வரவில்லை. அந்த நேரங்களில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிசியாக இருந்த நடிகை பார்தி சிங்கின் நடிப்பில் கடைசியாக 2023இல் ஒரு இந்தி திரைப்படம் திரைக்கு வந்தது. இந்தி பிக்பாஸில் ஒவ்வொரு சீசனிலும் தவறாமல் தலையை காட்டிவிடும் பார்தி சிங், தனது கடின உழைப்புக்கு ஏற்ப செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறது.

bharti singh luxury car collections

கடந்த 2024ஆம் ஆண்டின் நிலவரப்படி, இவரிடம் சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. விலையுயர்ந்த கார்கள் என்று பார்த்தால், ஆடி க்யூ5 (Audi Q5), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்350 (Mercedes-Benz GL350), பி.எம்.டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) உள்ளிட்டவற்றை நகைச்சுவை நடிகை பார்தி சிங் சொந்தமாக வைத்துள்ளார்.

இந்த கார்கள் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் கிடைக்க பெறுகின்றன. இவரிடம் உள்ள ஆடி க்யூ5 காரை பற்றி பார்த்தோமேயானால், இது ஆடி நிறுவனத்தின் லக்சரி எஸ்யூவி காராக விளங்குகிறது. பிரீமியம் பிளஸ், டெக்னாலஜி மற்றும் போல்ட் எடிசன் என 3 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த ஆடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.66.99 லட்சத்தில் இருந்து ரூ.73.79 லட்சம் வரையில் உள்ளன.

bharti singh luxury car collections

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்350 கார் ஆனது இப்போது விற்பனையில் இல்லாத பென்ஸ் கார் ஆகும். டீசல் என்ஜின் உடன் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை கடைசியாக ரூ.77.68 லட்சமாக இருந்தது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரும் ஓர் விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி கார் ஆகும். நடிகை பார்தி சிங்கிடம் இருப்பதிலேயே விலையுயர்ந்த காராக விளங்கும் எக்ஸ்7 -இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.31 கோடியில் இருந்து ரூ.1.35 கோடி வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தி நகைச்சுவை நடிகை பார்தி சிங் ஓர் எஸ்யூவி கார் பிரியர் என்பது அவரது கார் கலெக்‌ஷனை பார்த்தாலே தெரிகிறது. விலை குறைவான எஸ்யூவி கார்களில் கூட உட்புறத்தில் அதிக இடவசதி கிடைக்கும் நிலையில், இவ்வாறான விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி கார்களில் எல்லாம் சொல்லவே வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 22, 2025, 23:59 [IST]
English summary
Actress bharti singh luxury car collections audi q5 to bmw x7
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X