இவங்களுக்கு மட்டும்தான் கனவு காண்பதெல்லாம் உடனே நடக்குது! கடவுள் இவங்களை மட்டும்தான் ஆசிர்வதிக்கிறாங்களோ!
தன்னுடைய கனவு வாகனத்தை வாங்கி இருப்பதாக பிரபல நடிகை ஒருவர் அறிவித்திருக்கின்றார். அத்துடன், தான் வாங்கிய கார் மாடலுடன், அவர் நிற்கும் படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கின்றார், அந்த நடிகை. கொஞ்சம் நாட்களாகவே பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் விலை உயர்ந்த காரை வாங்கும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், புதிய நபராக விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கியதன் வாயிலாக, அண்மையில் சொகுசு காரை வாங்கிய நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார், பவிகா ஷர்மா.
அவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 6 சீரிஸ் கிராண் லிமோசைன் (BMW 3 Series Gran Limousine) கார் மாடலையே வாங்கியிருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 70 லட்சம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர வகை காரையே அவர் வாங்கியிருக்கின்றார்.

இந்த கார் தன்னுடைய நீண்ட நாள் கனவு, தற்போது அது நிறைவேறியிருக்கின்றது என்றே அவர் பெருமிதம் தெரிவித்திருக்கின்றார். சொகுசு கார் வாங்குவது என்பது பலருக்கு கனவாக இருக்கின்றது. அந்தவகையில், பவிகா ஷர்மாவும் இந்த காரை வாங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டிருக்கின்றார்.
இந்த நிலையிலேயே அது அவருக்கு கை கூடி வந்திருக்கின்றது. பாலிவுட்டின் சின்ன திரை மற்றும் திரை உலகம் என இரண்டிலும் வலம் வந்துக் கொண்டிருக்கும் ஓர் நபரே பவிகா ஷர்மா ஆவார். குறிப்பாக, இவர் 'கம் ஹாய் கிசி கே ப்யார் மெயின்' எனும் ஷோ வாயிலாக அறியப்படுகின்றார்.
இவரே பலரின் கனவு வாகனமாக இருக்கும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிராண் லிமோசைன் ஆடம்பர காரை வாங்கி இருக்கின்றார். அவர் இந்த கார் மாடலின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிசனையே வாங்கியிருக்கின்றார். 3 சீரிஸில் விற்பனைக்குக் கிடைக்கும் உயர்நிலை தேர்வு இதுவாகும்.
இதனால்தான் வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் கூடுதல் அழகாக அது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, கருப்பு நிற கிட்னி கிரில், அடாப்டீவ் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ளாஸ்ஸி கருப்பு பின் பக்க டிஃப்யூசர் உள்ளிட்டவற்றால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இதுதவிர, இந்த காரின் முன் பக்க பம்பர் டார்க் ஷேடோவ் மெட்டாலிக் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுபோன்று ஏகப்பட்ட கவர்ச்சிக்கான வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும். இதுமட்டுமில்லைங்க, சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் மிகவும் அசத்தலானதாகவே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், வளைவான திரை, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கைகள், அதிக சொகுசான இருக்கைகள், பிஎம்டபிள்யூ 8.5 ஓஎஸ், வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுதவிர, பார்க் அசிஸ்ட், 3 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள் மற்றும் ஆம்பியன்ட் லைட் போன்ற வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 254 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர்களால் மட்டுமல்ல நம்மாலும் இதுபோன்ற கார்களை வாங்க முடியும். ஆனால், அதற்கு கனவு காண்பது மட்டுமல்ல கடினமாக உழைக்கவும் வேண்டும். அதை செய்தால் இதைவிட பெரிய மற்றும் விலை உயர்ந்த கார்களையும் நம்மால் வாங்க முடியும். இதற்கு தீராத உழைப்பும், நம்பிக்கையும் வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications








