டாடா நானோ கார் வாங்கிய நடிகை ஹேமா மாலினி!

By Saravana

நடிகையும், மதுரா மக்களவை தொகுதியின் பாஜக., எம்பி.,யுமான ஹேமாமாலினி டாடா நானோ கார் வாங்கியிருக்கிறார்.

தனது தொகுதியில் சிறப்பான களப்பணி ஆற்றுவதற்காக, இந்த காரை வாங்கியிருப்பதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர்

மக்களவை உறுப்பினர்

பாலிவுட்டில் கலக்கிய முன்னணி நடிகையான ஹேமாமாலினி தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மக்களவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

களப்பணி

களப்பணி

மதுரா தொகுதியில் உள்ள விருந்தாவன் நகரில் சிறப்பான முறையில் களப்பணி ஆற்றுவதற்காகவே இந்த காரை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது, விருந்தாவன் நகரில் உள்ள குறுகலான சாலைகளில் செல்வதற்கு நானோ கார் சிறப்பாக இருக்குமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டிரைவருக்கு நோ...

டிரைவருக்கு நோ...

புதிதாக வாங்கியிருக்கும் டாடா நானோ காரை அவரே ஓட்டிச் செல்வதற்கும் முடிவு செய்துள்ளாராம். இந்த காரை நானே சிறப்பாக ஓட்ட முடியும் என்று நம்புகிறேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

டுவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த செய்திக்கு அவரது ரசிகர்களும், பாஜக ஆதரவாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நானோ பெஸ்ட்

நானோ பெஸ்ட்

பெண்களுக்கு சிறப்பான கார் மாடல்களில் ஒன்று நானோ. தற்போது பவர் ஸ்டீயரிங், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைப்பதும் கூடுதல் சிறப்பு. குறுகலான சாலைகள், போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்டிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

பட்ஜெட்

பட்ஜெட்

அதிக எரிபொருள் சிக்கனம் தருவதுடன், குறைவான பட்ஜெட்டில் கிடைப்பதும், வீட்டில் ஏற்கனவே கார் இருந்தாலும், கூடுதலாக நானோ காரை வாங்குவதற்கு பலர் முக்கியத்துவம் தருகின்றனர்.

விபத்து

விபத்து

கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில், ஹேமாமாலினியின் மெர்சிடிஸ் பென்ஸ் கார், மாருதி ஆல்ட்டோ காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹேமாமாலினி காயமடைந்தார். அத்துடன், ஆல்ட்டோ காரில் வந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Actress cum politician Hema Malini has bought a Nano car, and hopes she gets to drive it herself.
Story first published: Wednesday, March 9, 2016, 9:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X