முதல் தமிழ் படமா கங்குவாவில் நடிச்சாரு, இன்னோவா கார் லெவலுக்கு வந்துட்டார்! நடிகையின் தந்தை இதை எதிர்பார்க்கல!
திஷா பதானி (Disha Patani), பிரபலமான பாலிவுட் நடிகை (Bollywood Actress). இந்தி மொழி திரைப்படங்கள் தான் திஷா பதானியின் முதன்மையான தேர்வு என்றாலும், அவ்வப்போது தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், 2015ஆம் ஆண்டில் 'லோஃபர்' (Loafer) என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாகவே உத்தர பிரதேசத்தில் பிறந்த திஷா பதானி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். முதல் படம் பெரியதாக போகவில்லை என்றாலும், 2வது திரைப்படமான கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் நாடு தழுவிய பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
அதன் மூலம் அடுத்ததாக சீன திரைப்படம் ஒன்றில் நடிகர் ஜாக்கி ஜான் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை கூட திஷா பதானி பெற்றார். அதன்பின் சீன பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்த திஷா பதானியின் நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டில் இரு தென்னிந்திய மொழி படங்கள் திரைக்கு வந்தன.

இதில், நடிகர் பிரபாஸின் 'கல்கி 2898AD' திரைப்படம் ஓரளவிற்கு கவனத்தை பெற்றாலும், மற்றொரு தென்னிந்திய படமான நடிகர் சூர்யாவின் 'கங்குவா' பெரிய தோல்வி படமாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால், கங்குவா தான் நடிகை திஷா பதானியின் முதல் தமிழ் திரைப்படம் ஆகும். ஆனால், கங்குவா பெரிய தோல்வியாக அமைந்ததால், இனி திஷா பதானி கோலிவுட்டிற்கு மீண்டும் வருவாரா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.
ஆனால், கங்குவா பட தோல்வியை பற்றி எல்லாம் திஷா பதானி பெரியதாக கவலைப்பட மாட்டார். ஏனெனில், அடுத்ததாக நடிகர் அக்சய் குமார் உடன் இவர் நடித்த 'வெல்கம் டூ தி ஜங்கிள்' திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு பாலிவுட்டில் திஷா பதானியின் மார்க்கெட் மேலும் பெரியதாகும் என கூறப்படுவதால் செம்ம ஜாலியாக இருக்கும் இந்த நடிகை அதே சந்தோஷத்தில் தனது தந்தைக்கு ஒரு பிரம்மாண்டமான பரிசை வழங்கி உள்ளார்.

அதுதான், பிராண்ட்-நியூ டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் ஆகும். வெள்ளை நிறத்திலான புத்தம் புதிய இன்னோவா கிரிஸ்ட்டா காரை தந்தைக்கு பரிசாக தனது வீட்டிற்கு நடிகை திஷா பதானி அனுப்பி வைத்துள்ளார். அதனை திஷா பதானியின் தாய் பத்மா பதானி, தந்தை ஜக்தீஷ் சிங் பதானி மற்றும் அக்கா குஷ்பூ பதானி ஆகியோர் இன்முகத்துடன் இந்து முறைப்படி பூஜை செய்து வீட்டிற்கு வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தற்காலிக நம்பர் பிளேட் (Number Plate) கூட பொருத்தப்படாத புத்தம் புதிய இன்னோவா கிரிஸ்ட்டா காரையும், இதனை நடிகை திஷா பதானி அவரது தந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளதையும் காணலாம். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதால் மும்பையில் தங்கியிருக்கும் நடிகை திஷா பதானி இந்த பிராண்ட்-நியூ காரை உத்தர பிரதேசத்தின் பரேயிலியில் சொந்த ஊரில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு பரேயிலியில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம் உதவியுள்ளது. தந்தைக்கு திஷா பதானி வழங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான இன்னோவா கிரிஸ்ட்டா கார் என ஏற்கனவே கூறினோம் அல்லவா... இந்த வெள்ளை நிறத்தை 'பிளாட்டினம் வெள்ளை பேர்ல்' என டொயோட்டா நிறுவனம் அழைக்கிறது. இந்தியாவில் இன்னோவா கிரிஸ்ட்டா கார் விற்பனை செய்யப்படும் 5 கலர் ஆப்ஷன்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் இன்னோவா காரின் 3ஆம் தலைமுறை மாடலை கடந்த சில வருடங்களாக இன்னோவா ஹைகிராஸ் என்கிற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இன்னோவா ஹைகிராஸ் ஆனது ஹைப்ரீட் (Hybrid) கார் ஆகும். அதேநேரம், பழைய 2ஆம் தலைமுறை இன்னோவா கிரிஸ்ட்டா காரும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. இந்த இன்னோவா கிரிஸ்ட்டா காரை தான் தந்தைக்கு நடிகை திஷா பதானி பரிசாக வழங்கியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ளார் என்றாலும், நடித்தவை எல்லாம் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என்பதால் நடிகை திஷா பதானிக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. அப்படியிருக்கையில், தந்தைக்கு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிக் கொடுக்காமல் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா போன்ற விலை குறைவான காரை வாங்கிக் கொடுத்துள்ளார். குறைந்தது, இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் காரை ஆவது வழங்கியிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








