கழஞ்ச சேலைய சரி பண்ண கூட 2 ஆள் இருக்காங்க! ரெண்டரை கோடி ரூபா கார்ல வந்து இறங்கிய தேவதை! அவங்களா இது!
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) காருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) முதல் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) வரை இந்தியாவின் ஆளுமை மிக்க மனிதர்கள் பலரும், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களை பயன்படுத்தியுள்ளனர். நரேந்திர மோடி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவரும், இந்தியாவின் மிக முக்கியமான மனிதர்கள் ஆவர். எனவே உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களை கடந்த காலங்களில் அவர்கள் பயன்படுத்தினர்.
அதே நேரத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் ரெகுலர் வெர்ஷனை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இதில், ஷாருக்கான் (Shah Rukh Khan), சயிஃப் அலி கான் (Saif Ali Khan) மற்றும் சஞ்சய் தத் (Sanjay Dutt) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இவர்கள் எல்லாம் இந்தியாவின் பிரபலமான பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் உரிமையாளர்களில் ஒரு சிலர் மட்டுமே. இன்னும் பல்வேறு பிரபலங்களும், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வைத்துள்ளனர். இதில், திஷா படானியும் (Disha Patani) ஒருவர் ஆவார். இவர் இந்தியாவின் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர்.
தமிழில் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா (Kanguva) திரைப்படத்தில் திஷா படானி நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. திஷா படானியை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில், கடந்த காலங்களில் பல முறை பார்க்க முடிந்துள்ளது. இந்த வரிசையில் மீண்டும் ஒரு முறை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை திஷா படானி பயன்படுத்தியுள்ளார்.

அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், திஷா படானி சேலை கட்டி கொண்டு, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் கீழே இறங்கியவுடன், சேலை மற்றும் தலை முடியை 2 பெண்கள் 'அட்ஜெஸ்ட்' செய்து விடுகின்றனர்.
இதன் பின்னர் திஷா படானி அங்கிருந்து சென்று விடுகிறார். அனேகமாக ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திஷா படானி வந்தபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திஷா படானி வந்து இறங்கிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், அவரது சொந்த கார் ஆகும்.
அந்த காரின் பதிவு எண்ணை வைத்து தேடி பார்த்ததில், அவரது பெயரில்தான் கார் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740டி எம் ஸ்போர்ட் (740d M Sport) வேரியண்ட் ஆகும்.
இந்த காரின் டாப் வேரியண்ட் இதுதான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் 1.87 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740டி எம் ஸ்போர்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) தோராயமாக 2.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.
திஷா படானியின் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில், அதிகபட்சமாக 286 பிஎஸ் பவர் மற்றும் 650 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் தவிர, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஹெச்எஸ்இ (Range Rover Sport HSE) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்450 (Mercedes Benz S450) ஆகிய சொகுசு கார்களையும் (Luxury Cars) திஷா படானி வைத்துள்ளார். கூடவே ஹோண்டா சிவிக் (Honda Civic) மற்றும் செவர்லே க்ரூஸ் (Chevrolet Cruze) ஆகிய கார்களும், அவரது கார் கலெக்ஸனை (Car Collection) அலங்கரிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசான பயணத்தை உறுதி செய்வதால்தான், பிரபலங்கள் பலரும் அதன் விலையை பொருட்படுத்தாமல், வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் (Electric Version) கூட இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) என்ற பெயரில் அந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றுதான். ரேகா (Rekha) மற்றும் அஜய் தேவ்கன் (Ajay Devgn) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களிடம் எல்லாம் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








