இளம் நடிகையாக இருந்தாலும் இத்தனை லக்சரி கார்களுக்கு ஓனரா!! நடிகை திஷா படானியும், சொகுசு கார்களும்...
பாலிவுட் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் இளம் நடிகை திஷா படானி. இவருக்கு திரைப்படங்களில் நடிப்பது எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவிற்கு கார்களையும், பைக்குகளையும் ஓட்டுவதும் பிடித்த விஷயமாகும். இதற்கு சாட்சியாக, நடிகை திஷா படானி வாகனங்களை இயக்கும் வீடியோக்களையும், படங்களையும் பலமுறை இணையத்தில் பார்த்துள்ளோம். அத்தகைய, இந்த இளம் நடிகையிடம் உள்ள கார்கள்...
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எச்.எஸ்.இ ஸ்போர்ட்
ரேஞ்ச் ரோவர் கார்கள் சினிமா நட்சத்திரங்களுக்கு இடையே பிரபலமானது என்பது நமக்கு தெரிந்த விஷயமே. இதனாலேயே புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் கார்கள் கிட்டத்தட்ட அனைத்து சினிமா ஸ்டார்களின் வீடுகளிலும் உள்ளன. திஷா படானி வைத்துள்ள ஒரேயொரு லக்சரி எஸ்யூவி கார் இதுவாகும். சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததற்கு பிறகே இந்த ரேஞ்ச் ரோவர் காரை இவர் வாங்கினார்.

பிரபலமான ரேஞ்ச் ரோவர் கார்கள் வரிசையில் எச்.எஸ்.இ ஸ்போர்ட் ஆனது சற்று பழமையான மாடல் ஆகும். விற்பனையில் இருந்த சமயத்தில் இதன் ஆன்ரோடு விலை ரூ.1.8 கோடி என்ற அளவில் இருந்தது. இந்த ரேஞ்ச் ரோவர் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 296 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ்
நடிகை திஷா படானியிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்450 லக்சரி செடான் காரும் உள்ளது. திஷாவிடம் இருப்பது மேட் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட எஸ்450 செடன் கார் ஆகும். இந்த காரில் க்ரோம் ஹைலைட்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இவரிடம் இருப்பது முந்தைய தலைமுறை மெர்சிடிஸ் எஸ்450 கார் தான். இருப்பினும் லக்சரி அம்சங்களும், சவுகரியத்திலும் எந்தவொரு குறையும் இல்லை.

திஷா படானி வைத்திருப்பது ப்ரீ-ஓவ்ண்டு எஸ்450 கார் என கூறப்படுகிறது. அதாவது இந்த கார் டீலர்ஷிப் மையம் அல்லது மெர்சிடிஸ் நிறுவனத்தால் வேறொரு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது ஆகும். மேலும் இது 2018இல் தயாரிக்கப்பட்ட கார் ஆகும். மெர்சிடிஸ்-பென்ஸின் லக்சரி செடான் காரான எஸ்-கிளாஸில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்-கள், பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள், பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஹோண்டா சிவிக்
ஹோண்டா சிவிக் கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. அதிலிலும் திஷா படானி வைத்திருக்கும் ஹோண்டா சிவிக் கார் ஆனது பல வருடங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்த முதல் தலைமுறை சிவிக் மாடல் ஆகும். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலக்கட்டத்தில் இந்த ஹோண்டா செடான் காரை தான் இவர் பயன்படுத்தி வந்தார். இன்னும் சொல்லப்போனால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திஷா படானியே இந்த காரை ஓட்டி வந்துள்ளார்.
செவ்ரோலெட் க்ரூஸ்
திஷா படானியிடம் உள்ள மற்றொரு பட்ஜெட் விலை கார், செவ்ரோலெட் க்ரூஸ் ஆகும். இந்த காரையும் சினிமாவிற்கு வந்த புதியதிலேயே திஷா படானி பரவலாக பயன்படுத்தினார். மேலும் இந்த காரையும் நிகழ்ச்சிகளுக்கு கொண்டுவந்து இருக்கிறார். அமெரிக்க கார் நிறுவனமான செவ்ரோலெட் தற்சமயம் இந்தியாவில் செயல்பாட்டில் இல்லை. ஆதலால் க்ரூஸ் காரும் விற்பனையில் இல்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
பாலிவுட் நடிகை திஷா படானியிடம் தற்சமயம் இருக்கும் கார்களில் பெரும்பாலானவை செடான் கார்களாகும். இதில் இருந்து அவர் செடான் கார் பிரியர் என்பதை அறிய முடிகிறது. மேலும் அவரிடம் கார்கள் அனைத்தும் சற்று பழமையானவை ஆக உள்ளன. இதனால் சந்தையில் புத்தம் புதிய காரை விரைவில் திஷா படானி வாங்கினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications








