நடிச்சது ஒரே படம் தான்... ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இனி இந்த காரில் தான்! 7-சீட்டர் காரின் விலை இவ்வளவு கம்மியாவா?

டிவி சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நடிகை, தியா தீபன் (Diya Deepan) ஆவார். நான் தினமும் டிவி சீரியல்களை பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறேன், ஆனால் இவரை பார்த்தது இல்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. தியா தீபன், மலையாள டிவி சீரியல்களில் நடிப்பவர் ஆவார். டிவி சீரியல்கள் மூலமாக சினிமா துறைக்குள் நுழைந்தவர்கள் பலர் உள்ளனர். சில சீரியல் தொடர்களில் கதாநாயகி வேடத்தை காட்டிலும், வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரபலமாகுவது உண்டு. அவ்வாறு, வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மத்தியில் நடிகை தியா தீபன் கவனம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போகும் விதமாக தனது பயன்பாட்டிற்கு பிராண்ட்-நியூ ரெனால்ட் டிரைபர் (Renault Triper) காரை வாங்கியுள்ளார். இந்த ரெனால்ட் காரை பற்றி பின்னர் பார்க்கலாம். முதலில் தியா தீபனை பற்றி பார்ப்போம். கேரளாவின் தலைநகர் திருவனந்தப்புரத்தை சேர்ந்தவரான தியா தீபன், நன்கு படித்த பட்டதாரி ஆவார்.

actress diya deepan s renault triber

இருப்பினும், கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் ஈர்ப்பு அதிகமாக இருந்ததால், மாடலிங்கில் ஈடுப்பட்டு கொண்டே சினிமாவிலும் வாய்ப்பு தேட ஆரம்பித்தார். அதற்கு பலனாக, 2023ஆம் ஆண்டில் மலையாள முன்னணி நடிகர் திலீப்பின் நடிப்பில் வெளியான 'பந்த்ரா' (Bandra) திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்துவிட்டாலே மெல்ல மெல்ல மேலேறி விடலாம் என்பதுபோல, அடுத்த 1 வருடத்தில் 'சிநேகாக்கூட்டு' என்கிற மலையாள டிவி சீரியலில் ஸ்வாதி என்கிற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்க நடிகை தியா தீபன் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்டு, மக்கள் மத்தியில் தனது முகத்தை நன்கு பதிய வைத்துவிட்ட இவர், அதன் மூலமாக விளம்பரங்களிலும் நடித்து வருவாயை ஈட்டி வருகிறார்.

actress diya deepan s renault triber

நடிகை தியா தீபனுக்கு எந்த அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருப்பது, அவர் புதியதாக வாங்கி இருக்கும் ரெனால்ட் டிரைபர் கார் ஆகும். முற்றிலும் பளபளப்பான கருப்பு நிறத்திலான ரெனால்ட் டிரைபர் காரை வாங்கி இருப்பதை படங்கள் உடன் தியா தீபன் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கருப்பு நிறத்தை 'ஸ்டீல்த் பிளாக்' (Stealth Black) என ரெனால்ட் நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், மூன்லைட் சில்வர், ஐஸ் கூல் வெள்ளை, மெட்டல் மஸ்டர்ட், செடார் பிரவுன் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் டிரைபர் கிடைக்கிறது. மேலும், மேற்கூரை ஒரு கலரிலும், கீழ் உடல்பகுதி வேறொரு நிறத்திலும் வாங்கும் வசதியும் டிரைபரில் வழங்கப்படுகிறது.

actress diya deepan s renault triber

ஆர்.எக்ஸ்.இ (RXE), ஆர்.எக்ஸ்.எல் (RXL), ஆர்.எக்ஸ்.டி (RXT), ஆர்.எக்ஸ்.இசட் (RXZ) என நான்கு விதமான வேரியண்ட்களில் ரெனால்ட் டிரைபர் விற்பனை செய்யப்படும் நிலையில், இதில் எந்த வேரியண்ட்டை தியா தீபன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. 7 இருக்கைகள் உடன் உருவாக்கப்படும் டிரைபர் காரில் 1 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.35 லட்சத்தில் இருந்து ரூ.10.64 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் கார்கள் விற்பனை மிகவும் குறைந்துவிட்டது. வாங்கும் சிலரும் நடிகை தியா தீபன் போன்று ரெனால்ட் டிரைபர் காரை தான் வாங்குகின்றனர். அந்த அளவிற்கு ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியர்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒரே மாடலாக டிரைபர் உள்ளது. தியா தீபனை பார்த்து அவரது ரசிகர்களும் டிரைபர் காரை வாங்கி இந்த காரின் விற்பனையை அதிகரிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2025, 16:41 [IST]
English summary
Actress diya deepan bought renault triber car check price features all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X