அதிக வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்தியது அவங்களா? பாவம் 2 உசுரு போயிருச்சு! ஆபத்தை உணரவே மாட்டேங்கிறாங்க!
இந்தி நடிகை காயத்ரி ஜோஷ் மற்றும் அவரது கணவர் விகாஷ் ஓபராய் பெரும் விபத்தில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயத்தில், பெரும் விபத்தில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த கார் மாடல் எது? இந்த விபத்து யாருடைய தவறினால் அரங்கேறியது? குறிப்பாக இந்த விபத்து எங்கு நடைபெற்றது என்பது போன்ற முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகைகளில் காயத்ரி ஜோஷ்-ம் ஒருவர் ஆவார். இவருடைய கணவர் பெரும் பணக்காரரான விகாஷ் ஓபாராய் ஆவார். இவர்கள் இருவரும் கார் விபத்து ஒன்றில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவர்களின் கார் விபத்தில் சிக்கும் காட்சிகளும் தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகி இருக்கின்றன.
இந்த விபத்து இந்தியாவில் அரங்கேறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. சமீபத்தில் காயத்ரி ஜோஷ் மற்றும் விகாஷ் ஆகியோர் இத்தாலி நாட்டிற்கு சென்றனர். அங்கேயே அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி இருக்கின்றது. இருவருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் இருவரும் தப்பி இருக்கின்றனர். ஆனால், அவர்கள் சந்தித்த விபத்தானது மிக மோசமானதாக இருக்கின்றது. பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் வகையிலேயே அவர்கள் சந்தித்த விபத்து உள்ளது. விபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த இடத்தில் காயத்ரி மற்றும் விகாஷ் ஓபராயின் கார்கள் மட்டுமே இல்லை.
இன்னும் சிலரின் சூப்பர் கார்களும் இருந்தன. சொல்லப்போனால் அடுத்தடுத்து வந்த சீறி பாய்ந்து வந்த விலை உயர்ந்த சூப்பர் கார்களினாலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மிகவும் குறுகலான பாதையில், முன் சென்ற கேம்பர் வகை மினி வேனை ஓவர்டேக் செய்ய முயன்றபோதே இந்த விபத்து அரங்கேறியது.
இதில், அப்பாவியான கேம்பர் வேன் மிகக் கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. பாதை கிடைக்கும் வரை சூப்பர் கார்கள் பொறுமையாக சென்றிருந்தால் இந்த விபத்துக் கட்டாயம் அரங்கேறி இருக்காது. அதேநேரத்தில் ஒருவர் பின் ஒருவர் என பொறுமையாக மினி வேனை கடக்க முயற்சி செய்திருந்தாலும் இந்த விபத்து அரங்கேறி இருக்காது.
மாறாக அவர்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து என அந்த வேனை ஓவர்டேக் செய்ய முயற்சித்திருக்கின்றனர். இந்த நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்த வெள்ளை நிற சூப்பர் கார், சாலையோரத்தில் மோதி, பின்னர் மீண்டும் கேம்பர் வேனின் மீது மோதியது. அதோடு இல்லாமல் காயத்ரி கோஷ் மற்றும் விகாஷ் ஓபராய் ஆகியோர் பயணித்த சூப்பர் காரின் மீதும் அந்த வாகனம் மோதியது.
இந்த மோதலில் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட கேம்பர், பின்னர் மீண்டும் தரையில் மோதி குப்புற விழுந்தது. இந்த கொடுமையான விபத்தில் இருவரின் உயிர் பறிபோயிருக்கின்றது. சூப்பர் கார்கள் கூட்டத்தில் வந்துக் கொண்டிருந்த ஃபெர்ராரி காரில் பயணித்த ஜோடிகளுக்கே அந்த சோகம் அரங்கேறி இருக்கின்றது.
மெலிஷா ரவுத்லி (63) மற்றும் மார்கஸ் ரவுத்லி (67) ஆகியோர் இறந்திருக்கின்றனர். இவர்கள் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேம்பர் வேனில் பணித்த இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி போலீஸார் அனைத்து சூப்பர் கார்களையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விபத்து முழுக்க முழுக்க சூப்பர் கார்களின் தவறினாலேயே ஏற்பட்டு இருக்கின்றது. இதையே தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவும் நமக்கு தெரியப்படுத்துகின்றது. ஆகையால், இந்த சூப்பர் கார் உரிமையாளர்கள் மீது இத்தாலி காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்தின் வாயிலாக பல்வேறு பாடங்கள் நமக்கு கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, அதி வேகம் கூடாது. சிங்கிள் லேனில் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனத்தை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் ஈடுபடக் கூடாது மற்றும் பயணங்களின்போது அதிக கவனம் தேவை போன்ற பாடங்களையே அது நமக்கு கற்பித்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications