விஜய் கூட நடிச்ச பிறகு தமிழ்நாட்ல இருந்தே காணாம போன நடிகையா இது! சொகுசு கார்ல நடந்ததை பாத்ததும் ஷாக் ஆயிருச்சு

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள், எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அப்படி திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றுதான் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX).

இந்தியாவில் தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 1.41 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 1.70 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இந்த எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது 111.5 kWh பேட்டரி (Battery) ஆகும்.

Actress Genelia Escaped From BMW iX Accident

இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 635 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதுடன், ஏராளமான சொகுசு மற்றும் அதிநவீன வசதிகளையும் (Features) பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

இதில், அடாஸ் (Advanced Driver Assistance Systems - ADAS) பாதுகாப்பு தொகுப்பு, 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 18 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Actress Genelia

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளையும், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் கொண்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் பிரபல நடிகை ஒருவர் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, ஜெனிலியா (Genelia) ஆவார். தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம், ஜெனிலியா புகழின் உச்சத்தை அடைந்தவர். இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மேற்கண்ட 2 திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

இவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் வேலாயுதம் ஆகும். கடந்த 2011ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் தற்போது தவெக என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழக (TVK - Tamilaga Vettri Kazhagam) கட்சியின் தலைவராக உள்ள விஜய் (Vijay) உடன் இணைந்து, ஜெனிலியா நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 14 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஜெனிலியா அதற்கு பிறகு இன்னும் ஒரு தமிழ் திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை. எனினும் ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் கன்னடா போன்ற மற்ற மொழி திரைப்படங்களில் தற்போதும் ஜெனிலியா நடித்து கொண்டுதான் உள்ளார்.

ஜெனிலியாவின் தற்போதைய வீடியோ வைரல் ஆகி கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அவர் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பினார் என்பதுதான் அந்த காரணம். ஆம், ஜெனிலியா காரில் ஏறி கொண்டிருந்த சமயத்திலேயே டிரைவர் காரை எடுத்து விட்டார். இதனால் ஜெனிலியா நிலைதடுமாறி விட்டார்.

இருப்பினும் நல்ல வேளையாக அவர் கீழே விழுந்து காயங்கள் ஏற்படவில்லை. ஜெனிலியா பயன்படுத்திய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார், அவருக்கு சொந்தமானதுதான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் இந்த காரை வாங்கினார். ஜெனிலியா எலெக்ட்ரிக் கார்களில் அதிக ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது.

ஏனெனில் அவரிடம் டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) எலெக்ட்ரிக் கார் ஒன்றும் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் கார்களை, பிரபலங்கள் அதிகளவில் பயன்படுத்துவது ஒரு வகையில் மிகவும் நல்லதுதான். இது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களை பிரபலமாக்க உதவி செய்யும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜெனிலியா விஷயத்தில் நல்ல வேளையாக விபத்து நடைபெறவில்லை. டிரைவர் இருக்கையில் இருப்பவர்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுத்து காட்டுகிறது. அவர்களது சிறிய கவன சிதறல் கூட, பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தி விடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2025, 17:56 [IST]
English summary
Actress genelia escaped from bmw ix accident viral video check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+