அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

'96' குட்டி ஜானு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

தென் இந்திய திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து வருபவர் கௌரி கிஷன் (Gouri Kishan). தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கௌரி கிஷன் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் உருவான '96' திரைப்படத்தில் இளம் வயது த்ரிஷாவாக (ஜானு) கௌரி கிஷன் நடித்திருந்தார்.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த இளம் வயது ஜானு கேரக்டர்தான் ரசிகர்கள் மத்தியில் கௌரி கிஷனை பிரபலமாக்கியது. இந்த சூழலில் கௌரி கிஷன் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கௌரி கிஷன் வாங்கியிருப்பது ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) கார் ஆகும். இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிட்டு வருகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் காரில் மொத்தம் 2 டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை வழங்கியுள்ளது. இதில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர் இன்ஜின் ஒன்றாகும்.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர் இன்ஜினையும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த 2 இன்ஜின்களுடனும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதுதவிர 1.0 லிட்டர் இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தேர்வும், 1.5 லிட்டர் இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது. டைகுன் காரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏராளமான வசதிகளையும் வழங்கியுள்ளது. இதில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் கூடிய 10 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மேலும் மை ஃபோக்ஸ்வேகன் கனெக்ட் செயலி, 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியண்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங், கூல்டு க்ளவ் பாக்ஸ், சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில், 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

முன் பகுதியில் பகல் நேர விளக்குகளுடன் பெரிய எல்இடி ஹெட்லைட்களை ஃபோக்ஸ்வேகன் டைகுன் பெற்றுள்ளது. வைல்டு செர்ரி ரெட் (சிகப்பு), கர்குமா யெல்லோ (மஞ்சள்), கேண்டி ஒயிட் (வெள்ளை), ரெஃப்லெக்ஸ் சில்வர் (சில்வர்), கார்பன் ஸ்டீல் க்ரே (க்ரே) ஆகிய வண்ண தேர்வுகளில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் கிடைக்கிறது.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் தற்போதைய நிலையில் இந்த காரின் டாப் வேரியண்ட் 17.99 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்ததாக விர்டுஸ் (Volkswagen Virtus) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார், வரும் மார்ச் 8ம் தேதி பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதன் பின் வரும் மே மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையில் கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான் டைகுன் காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

அவங்களை மாதிரியே அழகா இருக்கு... புதிய கார் வாங்கிய '96' குட்டி ஜானு... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதற்கு அடுத்தபடியாக விர்டுஸ் காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்கவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதை போலவே விர்டுஸ் காரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயம் சரியாக இருந்தால், நிச்சயமாக இந்த கார் வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறும்.

Article Published On: Friday, February 25, 2022, 14:52 [IST]
English summary
Actress gouri kishan buys volkswagen taigun suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+