ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

பிரபல நடிகை ஒருவர் ஜாவா பைக்கை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் குல் பனாக் (Gul Panag). தொழில்முறை விமான பைலட், மாடல், மராத்தான் ஓட்ட பந்தய வீராங்கனை, விலங்குகள் நல ஆர்வலர் என குல் பனாக்கிற்கு ஏராளமான முகங்கள் உள்ளன. அத்துடன் பைக் பயணங்களை மேற்கொள்வதிலும் குல் பனாக்கிற்கு ஆர்வம் அதிகம்.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

இதை நிரூபிக்கும் வகையில் ஜாவா 42 (Jawa 42) பைக்கை அவர் சமீபத்தில் புதிதாக வாங்கியுள்ளார். இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ரெட்ரோ மோட்டார்சைக்கிள் ஆகும். குல் பனாக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக அவர் புதிய ஜாவா 42 ரெட்ரோ பைக்கை வாங்கியிருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

குல் பனாக் இந்த ஜாவா 42 பைக்கை தனது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் மற்றும் சைடு பேனல்களில் இந்தியாவின் மூவர்ண கொடியை காண முடிகிறது. அத்துடன் எரிபொருள் டேங்க்கில், குல் பனாக்கின் பெயர் மற்றும் அவர் பிறந்த ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

மேலும் ஜாவாவின் அதிகாரப்பூர்வ ஆக்ஸஸெரீஸ்கள் சிலவற்றையும் குல் பனாக் தேர்வு செய்திருப்பதை போல் தெரிகிறது. ஜாவா 42 பைக்கில், 293 சிசி, ஃப்யூயல்-இன்ஜெக்டட், லிக்யூட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27.3 பிஎஸ் பவரையும், 27.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 1.69 லட்ச ரூபாய் முதல் 1.83 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ஜாவா 42 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஜாவா 42 பைக்கை வாங்குவதற்கு முன்பாக, ஜாவா பெராக் (Jawa Perak) பைக் குறித்தும் குல் பனாக் பரிசீலனை செய்துள்ளார்.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

இது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான விலை பாபர் வகை பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக்கில் ஒரே ஒரு இருக்கை மட்டும்தான் இருக்கும். அத்துடன் இதன் டிசைன் கவர்ச்சிகரமாகவும் இருக்கும். ஜாவா பெராக் பைக்கில், 334 சிசி, லிக்யூட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 30.64 பிஎஸ் பவரையும், 32.74 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

இந்த பைக்கிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது. ஜாவா பைக்குகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜாவா மிகவும் கடுமையான போட்டியை வழங்கும் என்றுதான் ஆரம்பத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

ஆனால் பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் தாமதம் போன்ற காரணங்களால், ஜாவா அதிருப்தியை சந்திக்க நேரிட்டது. எனவே எதிர்பார்த்த அளவிற்கு ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜாவாவால் போட்டி உருவாகவில்லை. தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனமே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

பொதுவாக நடிகைகள் என்றாலே பெரும்பாலும் சொகுசு கார்கள் மீதுதான் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்திய திரைப்பட துறையை சேர்ந்த நடிகைகள் பலர் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் குல் பனாக் சற்று வித்தியாசமானவர்.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

பெரும்பாலும் நடிகர்கள்தான் பைக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் ஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் பைக்குகள் மீது அதிக பிரியம் இருக்கிறது. ஹெல்மெட் மற்றும் பைக் ரைடிங் உடைகள் மூலம் அடையாளத்தை மறைத்து கொண்டு, பைக்குகளில் அவர்கள் தொலைதூர பயணங்களை அடிக்கடி மேற்கொள்கின்றனர்.

ரொம்ப வித்தியாசமா இருக்காங்கலே... ஜாவா பைக்கை வாங்கிய பிரபல நடிகை... இவங்களை யார்னு தெரியுதா?

ஆனால் குல் பனாக் சற்று வித்தியாசமாக பைக்குகள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார். அவரிடம் இன்னும் நிறைய பைக்குகள் இருப்பதே இதற்கு சாட்சி. இதேபோல் மாளவிகா மோகனனும் கூட பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உடையவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது ஜாவா 42 பைக்கை வாங்கியுள்ள குல் பனாக்கிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actress gul panag buys jawa 42 here are all the details
Story first published: Monday, September 13, 2021, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X