45 வயதில் இந்த நடிகை எத்தனை சொகுசு கார்களை பார்த்திருப்பாரு.. ஒரே கார் மூலம் மொத்தமா வசீகரித்துவிட்ட மஹிந்திரா
19 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் பட்டம் பெற்று பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் குல் பனாக் (Gul Panag). நடிகையாக, அதேநேரம் கார்களையும் விரும்பக்கூடியவரான குல் பனாக்கிடம் ஏகப்பட்ட விலையுயர்ந்த கார்கள் உள்ளன. பாலிவுட் நடிகர், நடிகையினரிடம் இருக்கும் லக்சரி கார்களை பற்றி சொல்லவே வேண்டும். இருப்பினும், மார்க்கெட்டில் அனைவரும் வாங்குவதை பார்த்து விலை குறைவான பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (Mahindra XUV 3XO) காரை வாங்கினார் குல் பனாக். இந்த நிலையில், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் தனக்கு எந்த அளவிற்கு பிடித்துள்ளது என்பதை வீடியோ வாயிலாக நடிகை குல் பனாக் தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மார்க்கெட்டிற்கு ஏற்ப எஸ்யூவி கார்களை அதிகளவில் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்வதாகும். குறிப்பாக, மஹிந்திராவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் ஆனது கஸ்டமர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பலரும் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் தோற்றத்தால் கவரப்பட்டு, இந்த காரை போட்டிப் போட்டு வாங்கி வருகின்றனர். இந்த புதிய மஹிந்திரா கார் கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து பலரும் இந்த காரை அதிகளவில் புக் செய்து வருகின்றனர். இதனையடுத்து, எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளையும் மஹிந்திரா துவங்கியது.
தற்போதைய நிலவரப்படி, 10,000க்கும் மேற்பட்டோர் இந்த புத்தம் புதிய காரை டெலிவிரி பெற்றுள்ளனர். இந்த வகையில், பாலிவுட் நடிகையும், மாடலிங் கலைஞருமான குல் பனாக் அவர்களும் புத்தம் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை டெலிவிரி பெற்றார். இந்த நிலையில், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் தனக்கு எந்த அளவிற்கு பிடித்துள்ளது என்பதை வீடியோ மூலமாக இன்ஸ்டாகிராமில் குல் பனாக் தெரிவித்துள்ளார்.

குல் பனாக் இதற்கு முன்பும் நிறைய கார்களை பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவுகளை பதிவிட்டுள்ளார். இந்த வரிசையில், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் குறித்து தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் வசதிகளை பற்றி குல் பனாக் புகழ்ந்து பேசியுள்ளார். காரின் ஹெட்லேம்ப்களில் இருந்து பெயிண்ட் ஆப்ஷன்கள் வரையில் என அனைத்தையும் குல் பனாக் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் C வடிவிலான எல்இடி டி.ஆர்.எல்-கள் பொருத்தப்படுகின்றன. எல்இடி டி.ஆர்.எல்-கள் பகல் நேரத்திலும் எரிவது மட்டுமின்றி, தேவைப்படும்போது டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படும். டாடா மோட்டார்ஸில் கார் வடிவமைப்பாளராக பணியாற்றிய பிரதாப் போஸ் மஹிந்திராவுக்கு மாறிய பின்னர் உருவாக்கிய முதல் கார் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ ஆகும்.

டாடா நெக்ஸான், டாடா பஞ்ச் போன்ற அருமையான கார்களை உருவாக்கியவர், இந்த மஹிந்திரா காரையும் ஸ்டைலிஷாக வடிவமைத்துள்ளார். இதற்கு எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் ஹெட்லைட் டிசைன் சாட்சியாகும். இந்த காரில் ஹெட்லைட்களை போலவே, டெயில்லைட்களும் சூப்பராக வடிவமைக்கப்பட்டுள்ளன. டெயில்லைட்கள் இரண்டும் இந்த காரில் ஒன்றோடு ஒன்று இணைத்து வழங்கப்படுகின்றன.
மொத்தம் 8 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் கிடைப்பதை அறிந்து நடிகை குல் பனாக் மிகவும் ஆச்சிரியப்பட்டுள்ளார். அதேபோல், காருக்கு உள்ளே 10.25 இன்ச்சில் அளவில் பெரியதாக வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் மற்ற தொழிற்நுட்ப வசதிகளை கண்டும் குல் பனாக் பூரிப்படைந்துள்ளார். மேலும், இந்த காரின் செயல்படுதிறனிலும் எந்த குறையையும் மஹிந்திரா வைக்கவில்லை எனவும் இவர் கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தத்தில் "நீங்கள் விரும்பும் அனைத்தையும் மற்றும் அதற்கு மேலும் எக்ஸ்யூவி300 வழங்குகிறது" என ஒரே வரியாக கூறி வீடியோவை நடிகை குல் பனாக் முடித்துள்ளார். இதில் இருந்து இந்த நடிகையை மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் வெகுவாக கவர்ந்திருப்பதை அறிய முடிகிறது. பல்வேறு விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தியவரிடம் இருந்து இவ்வாறான வார்த்தைகள் வெளிவருவது ஆச்சிரியமளிக்கிறது.


Click it and Unblock the Notifications









