76 வயசுனு சொன்னா சத்தியமா நம்பவே முடியல... அவரை போலவே அழகான எலக்ட்ரிக் காரை வாங்கிய பழம்பெரும் நடிகை!
ஹேம மாலினி (Hema Malini), 1970/ 80களில் பாலிவுட் சினிமா (Bollywood Cinema) வட்டாரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விரைவில் 76 வயதை நிறைவு செய்து 77வது வயதில் அடியெடுத்து வைக்க போகிறோர் என்பதை சுத்தமாக நம்பவே முடியவில்லை. ஏனெனில், இப்போதும் ஹேம மாலினியின் முகத்தில் இளமை ஜொலிக்கிறது.
அதுவும் தற்போது புதியதாக விலையுயர்ந்த பிராண்ட்-நியூ எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளதால், நடிகை ஹேம மாலினி தற்சமயம் செம்ம ஹாப்பி ஆக உள்ளார். முன்பு, எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் ஹெக்டர் (Hector) காரை ஹேம மாலினி பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விலையுயர்ந்த எம்9 (M9) என்கிற எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், ராஜேஷ் கன்னா, சஞ்சீவ் குமார் போன்ற பழம்பெரும் இந்தி நடிகர்கள் உடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பினும், நடிகை ஹேம மாலினி சினிமாவிற்குள் அறிமுகமாகியது 1963இல் வெளிவந்த 'இது சத்தியம்' என்கிற தமிழ் படத்தில் ஆகும். நடன கலைஞராக அறிமுகமாகியவருக்கு பின்னர் 2 வருடங்கள் கழித்து தெலுங்கில் என்.டி.ஆரின் திரைப்படம் ஒன்றில் மீண்டும் நடன கலைஞராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் ஹேம மாலினி நடித்தது மொத்தமும் இந்தி திரைப்படங்கள் தான், இடையிடையே ஓரிரு தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்திருப்பினும், ஹேம மாலினியின் கவனம் மொத்தமும் பாலிவுட்டில் தான் இருந்தது. கடைசியாக இவர் நடித்த தமிழ் திரைப்படம் என்றால், அது நடிகர் கமலின் நடிப்பில் 2000ஆம் ஆண்டில் வெளியான் 'ஹே ராம்' (Hey Ram) திரைப்படம் ஆகும்.

அதன்பின் தமிழில் எந்த படத்திலும் நடிக்காதவர், 2020க்கு பின் வயது மூப்பின் காரணமாக மொத்தமாகவே சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். இருப்பினும், இப்போதும் ஹேம மாலினியின் முகத்தை அவ்வப்போது டிவி விளம்பரங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக, நீர் சுத்திகரிப்பு மிஷின் ஒன்றின் விளம்பரத்தில் ஹேம மாலினி வருவதை நம்மில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, சில இந்தி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ள நடிகை ஹேம மாலினி, ஆச்சிரியப்படுத்தும் விதமாக இரு இந்தி திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இப்படிப்பட்டவர் சமீப காலமாக பரவலாக பொது வெளியில் காட்சி தந்தது அவரது எம்ஜி ஹெக்டர் காரில் ஆகும். இந்த நிலையில், ஹெக்டருக்கு பதிலாக எம்ஜியின் சமீபத்திய அறிமுகமான எம்9 எலக்ட்ரிக் காரை தனது அன்றாட போக்குவரத்து வாகனமாக நடிகை ஹேம மாலினி மாற்றிக் கொண்டுள்ளார்.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi) பண்டிகையை முன்னிட்டு ஹேம மாலினி புத்தம் புதிய எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். கார் ஹேம மாலினியின் வீட்டிற்கே வந்து டெலிவிரி (Delivery) செய்யப்பட்டு உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படங்களை சம்பந்தப்பட்ட மும்பை எம்ஜி ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
எம்9 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே கூறியதுபோல் இது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட லேட்டஸ்ட் எலக்ட்ரிக் எம்பிவி (MPV) ரக கார் ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சொகுசு எலக்ட்ரிக் காரில் 2வது வரிசையில் அட்வான்ஸ்டு வசதிகள் கொண்ட கேப்டன் இருக்கைகள் (Captain Seats) வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. விலை குறைவான எம்ஜி எலக்ட்ரிக் கார்களை BaaS (Battery-as-a-Service) முறையில் வாங்கவே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்று பார்த்தால், விலைமிக்க எம்ஜி எலக்ட்ரிக் கார்களை கூட நடிகை ஹேம மாலினி போன்ற செல்வந்தர்கள் வாங்க ஆரம்பித்துள்ளனர். அதுவும், மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் எம்ஜி எம்9 காரை ஹேம மாலினி வாங்கி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.


Click it and Unblock the Notifications









