அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருக்காங்க! வெள்ளை கலர் காரில் வந்து இறங்கிய தேவதையை பார்த்து கிறங்கி போன இளசுகள்!
இந்தியாவில் திரையுலக நடிகைகள் என்றால், விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் விதிவிலக்காக ஒரு சில நடிகைகள் மட்டும் எளிமையான கார்களில் பயணிக்கின்றனர். ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor), சாரா அலி கான் (Sara Ali Khan) போன்ற நடிகைகளை, இதற்கு உதாரணமாக கூறலாம். இவர்களில் ஷ்ரத்தா கபூர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரில் அடிக்கடி பயணிக்கிறார். மறுபக்கம் சாரா அலி கானை, மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரில் அடிக்கடி பார்க்க முடிகிறது.
இன்னும் ஒரு சில நடிகைகளோ, எம்ஜி ஹெக்டர் (MG Hector) காரை பயன்படுத்தி கொண்டுள்ளனர். இதற்கு பலக் திவாரி (Palak Tiwari) ஒரு உதாரணம். இந்த வரிசையில் மற்றொரு இளம் நடிகை ஒருவர் தற்போது எம்ஜி ஹெக்டர் காரில் நமது கண்களில் தென்பட்டுள்ளார்.

அவர் ஜனத் ஜூபைர் ரஹ்மானி (Jannat Zubair Rahmani) ஆவார். ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து கொண்டுள்ள இவருக்கு, 23 வயது மட்டுமே ஆகிறது. இவர் வெள்ளை நிற எம்ஜி ஹெக்டர் காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
உண்மையில் எம்ஜி ஹெக்டர் சற்று விலை உயர்ந்த கார்தான். தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 14 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் எம்ஜி ஹெக்டர் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 22.89 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இது சற்று அதிகமான விலை என்றாலும் கூட, நடிகைகளை பொறுத்தவரையில், மிகவும் எளிமையான ஒரு காராகவே எம்ஜி ஹெக்டர் கருதப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும்.
இந்த 4 சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன், 2.0 லிட்டர் டீசல் ஆகும்.
டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களிலும் இதே இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எம்ஜி ஹெக்டர் காரில், அதிகபட்சமாக 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் ஒரே ஒரு கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 6 ஸ்பீடு மேனுவல் ஆகும். வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால், இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹெக்டர்தான் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் களமிறக்கிய முதல் கார் ஆகும். உண்மையில் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தை வாடிக்கையாளர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்த கார்களில் ஹெக்டர் மிகவும் முக்கியமானது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் டாடா ஹாரியர் (Tata Harrier) போன்ற கார்களுக்கு எல்லாம் ஹெக்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.


Click it and Unblock the Notifications








