நடிகை கஜோலுக்கு "மெர்சிடிஸ்" என பெயர்... சிறு வயதில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

பாலிவுட் நடிகை கஜோலுக்கு சிறு வயதில் அவரக்கு பெயர் வைக்கும் போது அவரது தந்தை மெர்சிடிஸ் என்ற பெயரை தான் வைக்க வேண்டும் என சொன்னாராம், அதனால் அவரது தந்தைக்கும் தாய்க்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அதனா

பாலிவுட் நடிகை கஜோலுக்கு சிறு வயதில் அவரக்கு பெயர் வைக்கும் போது அவரது தந்தை மெர்சிடிஸ் என்ற பெயரை தான் வைக்க வேண்டும் என சொன்னாராம், அதனால் அவரது தந்தைக்கும் தாய்க்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் இறுதியாக அவருக்கு அவருக்கு கஜோல் என்ற பெயரை வைத்தாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை இங்கே காணலாம் வாருங்கள்.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

பிரபல ஹாலிவுட் ஹீரோயில் கஜோல், இவர் நடித்த "தில்வாலோ துல்ஹானியே லே ஜெயேங்கே" "குச் குச் ஹோத்தா ஹே" உள்ளிட்ட இந்தி படங்கள் மெகா ஹிட்டாகியது. இந்த படங்கள் மூலம் சினிமாவில் உச்சத்திற்கே சென்றார்.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

அதன் பின்பு இவர் மின்சார கனவு என்ற தமிழ் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் படத்தில் சமீபத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

தற்போது அவர் ஹெலிகாப்டர் ஈலா என்ற இந்தி படத்தில் நடத்தி வருகிறார். அதன் படத்தின் விளம்பரத்திற்காக ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது அவரது குழந்தை பருவம் பற்றி பேசி கொண்டிருந்தார்.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

அப்பொழுது அவர் சிறுவயதில் தான் நல்ல பிள்ளையாக இருந்ததாகவும், பெற்றோருக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் இருந்தததாகவும் தெரிவித்தார். மேலும் தான் தவறு செய்தால் தன் அம்மா அடிப்பார் என்ற பயம் தனக்கு சிறுவயது முதலே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

கஜோலின் தாய் தானுஜா ஒரு பிரபல நடிகை ஆவார். அவரது தந்தை ராஜாத் சர்மா திரைப்பட இயக்குநர் ஆவார், தற்போது கஜோலுக்கு இந்தி நடிகர் அஜய் தேவ் கானுடன் திருமணமாகி அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கஜோலின் தாய் தானுஜா ஒரு பிரபல நடிகை ஆவார். அவரது தந்தை ராஜாத் சர்மா திரைப்பட இயக்குநர் ஆவார், தற்போது கஜோலுக்கு இந்தி நடிகர் அஜய் தேவ் கானுடன் திருமணமாகி அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

அவர் அளித்த பேட்டியில் தான் சிறுவயதில் இருந்த போது அவரது தந்தை கஜோலுக்கு முதலில் மெர்சிடிஸ் என்ற கார் நிறுவனத்தின் பெயரை தான் வைக்க வேண்டும் என சொன்னாராம், அந்த காரின் நிறுவனத்தின் ஓனரும் அவரது மகளுக்கு மெர்சிடிஸ் என்ற பெயரை தான் வைத்தாராம்.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

இதனால் அவரது தந்தையும் முதலில் கஜோலுக்கு மெர்சிடிஸ் என வைக்க வேண்டும் என சொல்லியுள்ளார். ஆனால் அந்த பெயரை வைக்க கஜோலின் தாய்க்கு விருப்பமில்லை. இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

பின்னர் அந்த பெயர் கைவிடப்பட்டு அவருக்கு கஜோல் என பெயர் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை அவர் அந்த பேட்டியின் போது தெரிவித்தார். கஜோல் கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு வெளியான தில்வாலே படத்தில் நடித்திருந்தார். தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் அவர் நடிக்கும் படம் ஹெலிகாப்டர் ஈலா படம் தான்.

நடிகை கஜோல் கடந்த 2017ம் ஆண்டு தான் முதன் முதலாக வாங்கிய மாருதி எஸ்டீம் கார் மீது அவர் அமர்ந்திருக்கும் மாதிரியான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் அவர் நடித்த தில்வாலோ துல்ஹானியே லே ஜெயேங்கே திரைப்படத்தின் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என பலரும் பேசினர்.

கஜோலுக்கு மெர்சிடிஸ் என பெயர்...!

மேலும் கஜோல் தற்போது பிஎம்டபிள்யூ இசட் 4 என்ற சுமார் 74 லட்சம் மதிப்பிலான காரையும், மசரட்டி நிறுவனத்தின் க்வாட்ரோப்ரோட்டே என்ற சுமார் ரூ 3 கோடி மதிப்பிலான காரையும் சொந்தமாக வைத்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Article Published On: Wednesday, August 29, 2018, 8:30 [IST]
English summary
kojal's name was discussed as mercedes in her childhood. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+