'ஹீரோ' பட ஹீரோயின் இவ்ளோ காஸ்ட்லியான கார வாங்கிட்டாங்களா! கதவ திறக்க ஒரு ஆளு வேற! முகத்தை மூடிட்டு வந்தாங்க!

மலையாள திரை உலகைச் சேர்ந்த இளம் நடிகைகளில் கல்யாணி பிரியதர்ஷன்-ம் ஒருவர் ஆவார். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார். 'ஹீரோ', 'புத்தம் புது காலை' மற்றும் 'மாநாடு' உள்ளிட்ட படங்களிலேயே அவர் நடித்திருக்கின்றார். இந்த நடிகையே காஸ்ட்லியான சொகுசு கார் மாடலை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் அந்த காரில் வலம் வரும் வீடியோவும் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஆனால், இந்த கார் அவருடையதுதான் என்பதற்கான எந்த ஆவணும் இதுவரை கிடைக்கவில்லை.

வாஹன் தளத்தில் வாகனத்தின் பதிவெண்ணை வைத்து ஆராய்ந்ததில் அந்த வாகனம் பிரியதர்ஷன் எனும் பெயரில் பதிவு செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், அதில் பெயரும் முழுமையாக இடம் பெறாத காரணத்தினால் இதையும் உறுதியாக கூற முடியவில்லை. இருப்பினும், அந்த சொகுசு கார் அவருடைய அப்பா பெயரில் வாங்கப்பட்டதுதான் என தகவல்கள் சில தெரிவிக்கின்றன.

Actress kalyani priyadarshan bmw x7 car

நடிகை பயன்படுத்தியது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) சொகுசு எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மிக அதிக சொகுசு மற்றும் இட வசதியைக் கொண்ட ஓர் கார் மாடலே இதுவாகும். இந்திய பணக்காரர்களின் பிரியமான பிஎம்டபிள்யூ சொகுசு கார் மாடல் இதுவாகும்.

இந்த கார் மாடலை பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்-ம் பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்து. இவர் மட்டுமல்ல இவரை முன்னணி திரைநட்சத்திரங்கள் பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு கார் ரூ. 1.18 கோடி தொடங்கி ரூ. 1.78 கோடி வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சொகுசு வசதியில் மட்டும் அல்ல பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மாடல் தலைசிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலிலேயே கல்யாணி பிரியதர்ஷன் வலம் வர தொடங்கி இருக்கின்றார்.

தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் அவர் முக மூடி (மாஸ்க்) அணிந்து பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரில் பயணிக்கும் காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன. அவர் காருக்குள் ஏற, அவருடன் வந்தவர் கார் கதவைத் திறந்து உதவி செய்யும் காட்சிகளையும் நம்மால் காண முடிகின்றது.

Actress kalyani priyadarsha

கவர்ச்சிக்கும், நவீன தொழில்நுட்ப அம்சங்களுக்கும் பெயர்போன கார் மாடலாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காட்சியளிக்கின்றது. அந்தவகையில், காரின் பயன்பாட்டை சிறப்பானதாக மற்றும் விதமாக லேசர் ரக ஹெட்லேம்ப், பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 5 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், தானாகவே பார்க்கிங் செய்யும் வசதி மற்றும் மூன்று வரிசையில் உள்ள இருக்கைகளை சாய்ந்துக் கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

இதுமட்டுமல்ல, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஐ-டிரைவ் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், கிரிஸ்டல் எஃபெக்ட் கியர் லிவர் மற்றும் குரல் கட்டளையை ஏற்கும் வசதி உள்ளிட்டவையும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்ஜினை பொருத்தவரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல், 3.0 லிட்டர் இன்-லைன் ஆறு சிலிண்டர் ட்வின்-டர்போ டீசல் மோட்டார் ஆகியவையே அந்த ஆப்ஷன்கள் ஆகும். ஒன்று 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். மற்றொன்று 260 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார் மாடல்களில் கல்யாணி பிரியதர்ஷன் வாங்கியிருப்பதும் ஒன்றாகும். அதிக ஆடம்பர அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை இது தன்னுள் தாங்கியிருக்கும். இத்தகைய காரிலேயே அவர் வலம் வர தொடங்கி இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அழர் முகத்தை மூடி கொண்டு அந்த கருப்பு நிற காரிலிருந்து இறங்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2025, 5:00 [IST]
English summary
Actress kalyani priyadarshans bmw x7 spotted at kochi
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+