3.5 கோடி ரூபாய் காரில் இருந்து இறங்கிவந்த அழகு தேவதை!! ஏர்போர்ட்டில் எல்லார் கண்களும் அவர் மீதுதான்!
கங்கனா ரனோட் (Kangana Ranaut), பிரபல இந்திய நடிகையான இவர் புதியதாக ரூ.3.5 கோடி மதிப்பில் மெர்சிடிஸ் மேபக் எஸ்680 காரை வாங்கி அசத்தியுள்ளார். கங்கனா இந்த புதிய மெர்சிடிஸ் காரில் இருந்து இறங்கி நடந்து செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
பாலிவுட் நடிகை கங்கனா ரனோட்டை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். பாலிவுட் நடிகையாக இருப்பினும், நம் தமிழ்நாட்டிலும் இவருக்கு கணிசமான எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, சில வருடங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பாஜக கட்சிக்கு ஆதரவாக கங்கனா எழுப்பிய குரல் தமிழ்நாடு வரையில் கவனத்தையும், அவருக்கு ஆதரவாளர்களையும் உருவாக்கியது.

2006இல் இருந்து பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவரும் கங்கனா ரனோட்டின் நடிப்பில் தமிழில் தாம் தூம் திரைப்படம் வெளியானது. நடிகர் ஜெயம் ரவி நடித்திருந்த இந்த திரைப்படத்தை பலர் பார்த்திருப்பீர்கள். பின்னர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நடிகை கங்கனா ரனோட் தனது புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்680 காரில் காட்சி தந்துள்ளார். அப்போது காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மும்பை விமான நிலையத்திற்கு தனது புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்680 காரில் கங்கனா ரனோட் வருகை தந்துள்ளார்.

காரில் இருந்து இறங்கிய பின்னர் விமான நிலையத்திற்குள் செல்ல முயற்சித்த கங்கனாவை கேமராக்களுடன் இருந்த யூடியுப் வாசிகள் புகைப்படத்திற்கு ஒரு போஸ் கொடுக்குமாறு கேட்க, அவர் ஒன்றுக்கு 2, 3 போஸ்களை கொடுத்து விட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். கண்ணை கவரக்கூடிய கங்கனாவின் அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
நடிகை கங்கனா ரனோட்டின் எஸ்680 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் விலையுயர்ந்த மேபக் கார்களில் ஒன்று மேபக் எஸ்680 ஆகும். பொதுவாகவே, மெர்சிடிஸின் மேபக் கார்களில் லக்சரியான அம்சங்களுக்கு எந்தவொரு குறையும் இருக்காது. அதாவது, மெர்சிடிஸ் காரை இன்னும் சொகுசு வசதிகளுடன் எதிர்பார்ப்பவர்களின் தேர்வு மேபக் மீதே இருக்கும்.

அப்படியென்றால், விலையுயர்ந்த மெர்சிடிஸ் மேபக் காரான எஸ்680-இல் எந்த அளவிற்கான சொகுசு வசதிகள் கிடைக்கும் என்பதை கூற வேண்டியதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இருக்கைகளை ஒரு பொத்தான் மூலமாக எளிதாக, சவுகரியத்திற்கேற்ப சாய்த்துக் கொள்ளலாம். தடையற்ற ஸ்மார்ட்போன் இணைப்பு வசதிக்காக கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பம் இந்த காரில் உள்ளது.
பயணிகளின் பொழுதுப்போக்கிற்காகவும், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கவும் காருக்குள் ஏகப்பட்ட திரைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த திரைகளில் இருந்து வரும் ஒலியை வழங்குவதற்காக பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் காருக்குள் உள்ளது. காரின் கதவுகளை திறக்கும்போதும், மூடும்போதும் ஒரு சிறு இரைச்சல் கூட ஏற்படுவதில்லை. அத்துடன், பல்வேறு நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல்களையும் மெர்சிடிஸ் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கங்கனா ரனோட் போன்ற பல வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் ஒருவரால் இந்த அளவிற்கான காரை வாங்க முடியவில்லை என்றால் தான் ஆச்சிரியம். வைத்திருப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. இந்த காரின் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் சில கோடிகளுக்கு வந்துவிடும். எந்தவொரு அசவுகரியமும் இன்றி, சொகுசாக பயணிக்க நினைப்பவர்கள், இந்த விலையை கொடுத்துதான் ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications
