எல்லாமே அப்படியே தெரியுது! வீடியோவை திரும்ப திரும்ப பாக்கும் இளசுகள்! ஹாட் உடையில் காரில் வந்தது அவங்களா!
இந்திய சந்தையில் அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாய் ஆக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 25.89 லட்ச ரூபாயா மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். நடுத்தர வர்க்க மக்களுக்கு வேண்டுமானால், இது விலை உயர்ந்த காராக தெரியலாம்.
ஆனால் லட்சங்கள் மற்றும் கோடிகளில் சம்பளம் பெறும் திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிகவும் எளிமையான ஒரு காராகவே கருதப்படுகிறது. ஆனால் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் சமீப காலமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பயணம் செய்வதை அதிகமாக விரும்ப தொடங்கியுள்ளனர்.

முன்பெல்லாம் திரையுலக நட்சத்திரங்களை ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் சொகுசு கார்களில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் சமீப காலமாக இந்திய தயாரிப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரிலும் திரையுலக நட்சத்திரங்கள் வலம் வர தொடங்கியுள்ளனர்.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் என மொத்தம் 2 சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அத்துடன் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் இந்த கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் (Safety Rating) பெற்றுள்ளது.

மறுபக்கம் சொகுசு வசதிகளிலும் (Features), மஹிந்திரா எக்ஸ்யூவி700 அமர்க்களப்படுத்துகிறது. வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் பெரிய பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவை எல்லாம் தவிர, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் கூட மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் நீங்கள் பெற முடியும்.
இவற்றுடன் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு (ADAS - Advanced Driver Assistance Systems) வசதிகளும் வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. ஒட்டுமொத்தத்தில் சக்தி வாய்ந்த செயல்திறன், பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் சொகுசு வசதிகள் என வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய கூடிய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700 திகழ்கிறது.
எனவேதான் தற்போது திரையுலக நட்சத்திரங்களும் இந்த காரை அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பாலிவுட் நடிகையான கங்கனா ஷர்மா (Kangna Sharma) ஆவார். அங்கங்களை காட்டும் கவர்ச்சிகரமான உடையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வந்து இறங்கியதை இந்த வீடியோவில் நாம் காணலாம். இந்த வீடியோவில் மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரே (Ranvir Shorey) போன்ற பிரபலங்களிடம் ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் உள்ளது. அதே நேரத்தில் பிரகாஷ் ராஜ் (Prakash Raj) போன்ற பிரபலங்களிடம் மஹிந்திரா தார் (Mahindra Thar) உள்ளது. பிரபலங்கள் இந்திய தயாரிப்புகளுக்கு மாறி கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்பதுதான் எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








