52 வயது நடிகைனு சொன்னா சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க! புதுசா எலக்ட்ரிக் கார் வாங்கியது இதுக்கு தானா?
காஷ்மேரா ஷா (Kashmera Shah), 1990களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை. குறிப்பாக, திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு நடிப்பதை காட்டிலும் குறிப்பிட்ட சில பாடல்களுக்கு நடனமாடவே காஷ்மேரா ஷா அதிகமாக அழைக்கப்பட்டார். இந்தி மொழி படங்கள் மட்டுமின்றி, மராத்தி, தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு கூட பாடலுக்கு நடனமாட நடிகை காஷ்மேரா ஷா அழைக்கப்பட்டார். ஆனால், கடந்த சில வருடங்களாக இவருக்கு திரைப்பட துறையில் பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், விருந்தினராகவும் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக, பிக்பாஸ் (Biggboss) சீசன்கள் பலவற்றில் விருந்தினராகவும், போட்டியாளராகவும் கலந்துக் கொண்டு அவ்வப்போது ரசிகர்களுக்கு தனது முகத்தை காட்டிக் கொண்டே இருப்பவராக நடிகை காஷ்மேரா ஷா விளங்குகிறார். இந்த வரிசையில் தற்போதும் இவரது முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு காரணம், திரைப்படங்களில், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டதினால் கிடையாது.

புதியதாக விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை வாங்கியதினால் ஆகும். இதைவிட சிறப்பான அம்சம் என்னவென்றால், புதிய எலக்ட்ரிக் காரை தனக்காக வாங்காமல், தனது கணவர் கிருஷ்ணா அபிஷேக்கிற்காக காஷ்மேரா ஷா வாங்கி கொடுத்துள்ளார். மும்பையில் கணவர் மற்றும் ஒன்றாக பிறந்த இரட்டை மகன்கள் உடன் குடும்பமாக ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ காரை நடிகை காஷ்மேரா ஷா வாங்கியுள்ளார்.
காஷ்மேரா ஷாவின் கணவர் கிருஷ்ணா அபிஷேக்கும் பிரபலமான பாலிவுட் நடிகர் மற்றும் காமெடியன் ஆவார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கணவருக்கு நடிகை காஷ்மேரா ஷா வாங்கி கொடுத்திருப்பது பிஒய்டி சீல் (BYD Seal) என்கிற மாடர்ன் எலக்ட்ரிக் கார் ஆகும். சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனத்தின் தாழ்வான உடலமைப்பை கொண்ட எலக்ட்ரிக் செடான் ரக காராக சீல் விளங்குகிறது.

இத்தகைய காரை மனைவி தனது பிறந்தநாளுக்காக வாங்கி கொடுத்ததை கிருஷ்ணா அபிஷேக்கால் நம்பவே முடியவில்லை. காரை டெலிவிரி எடுத்த பின் பேசிய நடிகர் கிருஷ்ணா அபிஷேக், "எலக்ட்ரிக் காரை கொடுத்து எனக்கு எலக்ட்ரிக் அதிர்ச்சியை கொடுத்துவிட்டனர்" என நகைச்சுவையாக தெரிவித்தார். பாலிவுட் சினிமா துறையினர் அவ்வப்போது விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்குவர் என்பதை பலமுறை பார்த்துள்ளோம்.
ஆனால், பாலிவுட் சினிமா வட்டாராத்திலேயே பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரை வாங்கிய முதல் பிரபலம் நடிகை காஷ்மேரா ஷா என கூறப்படுகிறது. ஷோரூமில் குடும்பத்துடன் கேக் வெட்டி காஷ்மேரா ஷா பிராண்ட்-நியூ பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றார். கேக் வெட்டிய பின்னர் புதிய காருக்கு இந்து முறைப்படி தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு, காரை டெலிவிரி பெறுவதற்கான ஆவண சரிபார்ப்புகள் முடிந்த பின் காஷ்மேரா ஷாவின் குடும்பம் புதிய சீல் காரில் வீட்டிற்கு புறப்பட்டது.
பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது இந்தியாவில் கடந்த 2024 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 61.44kWh மற்றும் 82.56kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் சீல் எலக்ட்ரிக் காரில் பின்பக்கத்தில் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. பேட்டரியை பொறுத்து, இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்சும் வேறுப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமாக இருப்பினும், பிஒய்டி நிறுவனத்தின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் வெளிப்பாடாகவே, சினிமா நடிகர், நடிகைகள் இந்த நிறுவனத்தில் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் கார்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். தற்போது முதல் பாலிவுட் பிரபலம் பிஒய்டி சீல் காரை வாங்கியுள்ளதால், வரும் காலங்களில் மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









