சென்னை பீச்சுக்கு காரில் வந்த நடிகை இவரா? கேரளா நம்பர் பிளேட் வண்டில சைலண்ட்டா வந்துட்டு போயிருக்காரு!

நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் கடற்கரையில் மஹிந்திரா தார் வாகனத்தில் டிரைவிங்கில் மாஸ் காட்டியுள்ளார். மணல் மிகுந்த கடற்கரை பகுதியில் தாரில் பின்னி பெடல் எடுக்கும் கீர்த்தி சுரேஷின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி முழுமையாக இனி பார்க்கலாம்.

சினிமா நடிகர், நடிகைகள் பொதுவாகவே ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது கூடுதல் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஏனெனில், பிடித்த வாகனங்கள் மற்றும் மார்க்கெட்டிற்கு வரும் புத்தம் புதிய வாகனங்களை உடனடியாக வாங்கிப் போடும் அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்கும். வாங்கும் அந்த வாகனங்களை வைத்து சில பல இன்ஸ்டா போஸ்ட்களை தெறிக்க விடுவார்கள்.

keerthy suresh drives mahindra thar

அதாவது, புதியதாக வாங்கும் வாகனங்களையும் தங்களது பிரபலத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதேநேரம், சில நடிகர், நடிகைகள் வேறொரு ஒருவரின் வாகனத்தை வைத்து சீன் காட்டி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற முயற்சிப்பதும் உண்டு. அவ்வாறே, நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் கடற்கரை ஒன்றில் மணல் பரப்பில் மஹிந்திரா தார் வாகனத்தை ஓட்டி அசத்தியுள்ளார்.

மேலும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் அந்த இன்ஸ்டா பதிவில், "நம்ம சென்னையில் ஆஃப் ரோடிங்" என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன், சண்டே சில்லிங் ஹேஷ்டேக்கையும் இந்த இன்ஸ்டா பதிவில் அவர் பயன்படுத்தி உள்ளார்.

keerthy suresh drives mahindra thar

கீர்த்தி சுரேஷின் இந்த பதிவுக்கு நடிகை மாளவிகா மோகனன் உள்பட சினிமா நட்சத்திரங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தியது யாருடைய மஹிந்திரா தார் என்பது தெரியவில்லை. அவருடைய சொந்தமான தார் வாகனமாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது. இந்த குறிப்பிட்ட தார் முழுவதுமாக கருப்பு நிறத்தில், பார்ப்பதற்கே ரண கொடூரமாக உள்ளது.

அதாவது, கீர்த்தி சுரேஷின் ஸ்டைலுக்கும், பீச் மணலுக்கு ஏற்ப ரக்டான தோற்றத்தில் தார் வாகனம் உள்ளது. இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருப்பது 2ஆம் தலைமுறை மஹிந்திரா தார் ஆகும். இதனை கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் தார் தற்சமயம் கிடைக்கிறது.

keerthy suresh drives mahindra thar

தார் வாகனத்தில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், தாரில் 3-கதவுகள் மட்டுமே தற்போதைக்கு கொடுக்கப்படுகின்றன. ஆனால், இதற்கு விற்பனையில் போட்டியாக உள்ள மாருதி சுஸுகி ஜிம்னி 5-கதவுகளுடன் கிடைக்கிறது. இதன் காரணமாக, 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் 5-கதவு தார் வாகனத்தை அறிமுகப்படுத்த மஹிந்திரா தயாராகி வருகிறது. முன்னதாக இதன் அறிமுகம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக விளங்கும் ஒருவரிடமும் மஹிந்திரா தார் வாகனம் இருப்பது என்று பெரிய விஷயமல்ல. ரூ.15 இலட்சம் இருந்தாலே போதும் தார் வாகனத்தை வாங்கிவிடலாம். ஆனால், இத்தகைய ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை ஓட்டுவதற்கு ஓர் தனி திறமை வேண்டும். அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டிரைவிங் ஸ்டைல் மூலமாக மஹிந்திரா தாரை கிழித்து தொங்கவிட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 6, 2023, 14:10 [IST]
English summary
Actress keerthy suresh drives mahindra thar in chennai beach
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X