71 வயதில் பழம்பெரும் நடிகை வாங்கியுள்ள காஸ்ட்லீ பென்ஸ் கார்!! அட இவங்களா... ஆளே மொத்தமா மாறிட்டாங்களே!
கிர்ரோன் கெர் (Kirron Kher), இந்தியாவின் பழம்பெரும் நடிகை மற்றும் அரசியல்வாதி. இவர் புதியதாக வாங்கியிருக்கும் விலையுயர்ந்த காரை பற்றி தான் இவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே இப்போது பேச்சாக உள்ளது. அப்படி எந்த காரை இவர் வாங்கியுள்ளார்? அதன் விலை என்ன? என்பதை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
சினிமா நட்சத்திரம் என்றாலே பென்ஸ் கார் ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. சில சினிமா பிரபலங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல பென்ஸ் கார்களை வைத்திருக்கின்றனர். குறிப்பாக, பாலிவுட் சினிமா திரையினர் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் கார் எப்போதோ புதியதாக அறிமுகமாகும் என்று காத்திருப்பார்கள் போல...

ஏனெனில், இந்தியாவில் அறிமுகமாகும் புது மெர்சிடிஸ் கார்களை முதலாவதாக வாங்கி போடுவது பாலிவுட் சினிமாக்காரர்கள் தான். இளம் பாலிவுட் நட்சத்திரங்கள் தான் அவ்வாறு உள்ளனர் என்று பார்த்தால், 71 வயதான பழம்பெரும் நடிகை கிர்ரோன் கெர் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் காரை வாங்கி உள்ளார்.
கிர்ரோன் கெர்ருக்கு இந்த மெர்சிடிஸ் கார் அவரது வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. ஹை-டெக் சில்வர் நிறத்தில் இந்த காரை கிர்ரோன் கெர் வாங்கியுள்ளார். இவர் வாங்கியிருக்கும் ஜி.எல்.எஸ் சொகுசு காரின் மதிப்பு ஏறக்குறைய ரூ.1.30 கோடி என்கிற அளவில் இருக்கும். ஏற்கனவே கூறியதுபோல், ஜி.எல்.எஸ் காரை இந்த ஆண்டில்தான் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அப்டேட் செய்து இருந்தது.

இது மெர்சிடிஸின் லக்சரி எஸ்யூவி கார் ஆகும். அதாவது, தாழ்வாக இல்லாமல், மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ் கார் நன்கு உயரமாக, பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கக்கூடியது. இந்த காரின் நீளம் சுமார் 5.2 மீட்டர்கள் மற்றும் அகலம் 1.96 மீட்டர்கள் ஆகும். இதனால், சாலையில் மிதக்கும் கப்பல் போன்று இந்த கார் தோற்றமளிக்கக்கூடியது. இந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஜி.எல்.எஸ் கார் இன்னும் கம்பீரமானதாக, டிசைனில் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் வழங்கப்படுகின்ற க்ரில் பகுதியின் டிசைன் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், காரின் முன்பக்க பம்பரின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் காரினுள் சில கூடுதல் வசதிகளும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. காரின் உட்புற தோற்றத்தை கஸ்டமர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப 3 விதமான ஆப்ஷன்களில் தேர்வு செய்யலாம்.

இந்த லக்சரி மெர்சிடிஸ் காரில் 360-டிகிரி கேமரா, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஏர் சஸ்பென்ஷன், பாதுகாப்பான டிரைவிங்கிற்காக அடாஸ் வசதிகள் உள்பட ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. காரின் டேஸ்போர்டில் 11.6 இன்ச்சில் இரு டிஸ்பிளே கொடுக்கப்படுகின்றன. இவற்றுடன், ஹீட்டட் & கூல்டு இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதியும் இந்த காரில் இடம்பெறுகின்றன.
இந்தியாவில் டீசல் மற்றும் பெட்ரோல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதில் எந்த என்ஜின் உடன் நடிகை கிர்ரோன் கெர் ஜி.எல்.எஸ் காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. 3.0 லிட்டர், 6-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ் காரில் கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் நிறுவனத்தின் கார்களிலேயே குறிப்பாக ஜி.எல்.எஸ் பாலிவுட் சினிமா உலகில் மிக பிரபலமானதாக உள்ளது. இப்படிப்பட்ட காரை வாங்கிய மற்றொரு நடிகையாக கிர்ரோன் கெர் இணைகிறார். இவர் இந்த காரை வாங்கியுள்ளார் என்றாலும், யார் இதனை ஓட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை. கிர்ரோன் கெர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாராவது பயன்படுத்தலாம் அல்லது இதற்காக தனியாக டிரைவர் பணியமர்த்தப்படலாம்.


Click it and Unblock the Notifications









