பள்ளி மாணவியாக நடித்த நடிகை தானே இது? இவர்கிட்ட இருக்கும் பணத்துக்கு பென்ஸ் காரை கூட வாங்கி இருக்கலாமே!!
மகிமா நம்பியார் (Mahima Nambiar), மலையாள நடிகையாக இருப்பினும், தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். இன்னும் சொல்லப்போனால், மலையாளத்தை காட்டிலும் தமிழில் தான் அதிக திரைப்படங்களில் நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
நடிகர் சமுத்ரகனியின் 'சாட்டை' (Sattai) திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டிற்குள் எண்ட்ரீ ஆனவர், அதன்பின் தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் கடைசியாக மகிமா நம்பியாரின் நடிப்பில் 2023இல் 'நாடு' என்கிற திரைப்படம் திரைக்குவந்தது. கடந்த 2 வருடங்களாக மலையாள திரைப்படங்களில் மட்டுமே நடித்துவரும் மகிமா நம்பியார், புதியதாக மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை தற்போது வாங்கியுள்ளார்.

வெள்ளை நிற தார் ராக்ஸ் வாகனத்தை நடிகை மகிமா நம்பியார் குடும்பத்துடன் ஷோரூமில் டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷோரூமில் கேக் வெட்டி கொண்டாடிய பின், மகிமா நம்பியார் தனது புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பார்க்கும் காட்சிகளை வீடியோவில் காண முடிகிறது.
மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் ஆனது கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் வாகனங்களுள் ஒன்றாக உள்ளது. மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான இது, 5 கதவுகள் உடன் உருவாக்கப்படுகிறது. தார் ராக்ஸ் இல்லாமல், 3 கதவுகளை மட்டுமே கொண்ட தார் வாகனமும் விற்பனையில் உள்ளது. தார் ராக்ஸ் வாகனத்தை கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்தது.

இந்த வாகனத்தை முற்றிலும் வெள்ளை நிறத்தில் நடிகை மகிமா நம்பியார் வாங்கியுள்ளார் என்று கூறினோம் அல்லவா... இந்த வெள்ளை நிறத்தை 'எவரெஸ்ட் வெள்ளை' (Everest White) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. பெரும்பாலும், பலர் இந்த வெள்ளை நிறத்தில் தார் ராக்ஸ் வாகனத்தை வாங்குவதில்லை. இதனாலேயே நடிகை மகிமா நம்பியாரின் தார் ராக்ஸ் வாகனம் ஸ்பெஷலானதாக தெரிகிறது.
இது இல்லாமல், நெபுலா நீலம், ஸ்டீல்த் பிளாக், டீப் ஃபாரெஸ்ட், பர்ண்ட் சியன்னா, பேட்டில்ஷிப் கிரே, டாங்கோ சிவப்பு என்கிற கலர் ஆப்ஷன்களிலும் தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா விற்பனை செய்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.23.09 லட்சம் வரையில் உள்ளன.
இந்த மஹிந்திரா வாகனத்தில் வழங்கப்படும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 160 எச்பி மற்றும் 330 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 177 எச்பி மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
தார் ராக்ஸ் வாகனத்தின் விலை குறைவான வேரியண்ட்களில் இந்த டீசல் என்ஜின் சற்று குறைவான இயக்க ஆற்றலையே வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. விலைமிக்க டாப் வேரியண்ட்களில் 4x4 டிரைவ் சிஸ்டம் கூட வழங்கப்படுகிறது. கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதான தார் ராக்ஸ் வாகனத்தில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டபுள்-விஷ்போன் செட்-அப்பும், பின்பக்கத்தில் பெண்டா-லிங்க் சிஸ்டமும் வழங்கப்படுகிறது.
பிரேக் பணியை கவனித்துக் கொள்ள அனைத்து நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பு 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏறுமுகமான சாலைகளில் ஏறும்போதும்/ இறங்கும்போதும் தேவையான கண்ட்ரோல் மற்றும் டயர்களில் உள்ள காற்றழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் ஆனது சிறப்பான மற்றும் தரமான வாகனம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நடிகை மகிமா நம்பியார் வசிக்கும் கேரளா போன்ற மலைப்பிரதேச மாநிலத்தில் போக்குவரத்துக்கு தார் ராக்ஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும். இத்தகைய வாகனத்தை அதிகமாக யாரும் வாங்காத வெள்ளை நிறத்தில் வாங்கியிருப்பதன் மூலம், எவ்வளவு நெரிசல் மிகுந்த சாலையிலும் மகிமா நம்பியாரின் வாகனம் மட்டும் தனியாக தெரியும்.


Click it and Unblock the Notifications








