பிரபல நடிகையின் மகனா இது? பிஎம்டபிள்யூ காரை ஓட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டாரே...
நடிகர், நடிகைகளின் வீட்டில் பிறக்கும் குழந்தைகள் செல்வ, செழிப்பில் வளர்வர் என்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு கிடைக்கும் கார், பைக்குகள் எல்லாம் பார்த்தால், பல இலட்ச ரூபாய் மதிப்பிலானதாக இருக்கும். இந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையின் மகன் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசாக பெற்றுள்ளார். யார் அந்த பிரபல நடிகை என்பதையும், பெற்றோர்களிடம் இருந்து அவரது மகன் பரிசாக பெற்றுள்ள விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
பிஎம்டபிள்யூ கார்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. குறிப்பாக, சினிமா நடிகர், நடிகையர்களும் பிஎம்டபிள்யூ கார்களை விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில், தனது மகனுக்கு இங்கு ஒரு சினிமா நட்சத்திர தம்பதியினர் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை வாங்கி கொடுத்துள்ளனர்.

அந்த சினிமா நட்சத்திர தம்பதி வேறு யாரும் இல்லை, பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோரா மற்றும் அவரது கணவர் அர்பாஸ் கான் ஆகும். இவர்கள் தங்களது மகன் அர்ஹான் கானுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான லக்சரியான பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை பரிசாக வழங்கியுள்ளனர். மும்பையில் அந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் அர்ஹான் கான் பயணம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில், நட்சத்திர தம்பதியின் மகனான அர்ஹான் கானின் மேட் கருப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை பார்க்கலாம். காரின் சக்கரங்கள் கூட கருப்பு நிறத்தில் உள்ளன. வீடியோவில், அர்ஹான் கான் காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அதாவது, அவர் காரை ஓட்டவில்லை. இவருக்கு பெற்றோரிடம் இருந்து பரிசாக கிடைத்திருப்பது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் எக்ஸ்டிரைவ் 40ஐ எக்ஸ் லைன் வேரியண்ட் ஆகும்.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.96 லட்சமாக உள்ளது. இந்த பிஎம்டபிள்யூ காரின் உட்பக்கத்தையும் மேட் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் பெற முடியும். அர்ஹான் கானிடம் இருப்பது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ஆகும். இது இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் முற்றிலும் புதுமையான முன்பக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி, ரீடிசைனிலான முன்பக்க பம்பரை எக்ஸ்5 காரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், முன்பக்க கிரில் பகுதியை ஒளிரக்கூடியதாகவும் விருப்பப்படுவர்கள் பெற முடியும். எல்இடி ஹெட்லைட்களின் வடிவம் முன்பை காட்டிலும் மெல்லியதானதாக மாற்றப்பட்டுள்ளது. 2023இல் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்5 காரில் புதிய டிசைனில் 21-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

பின்பக்க எல்இடி டெயில்லைட்களின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டது. காருக்கு உள்ளே டேஸ்போர்டில் இரட்டை திரை செட்-அப் வழங்கப்படுகிறது. இதில், 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது பிஎம்டபிள்யூவின் ஐடிரைவ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை கொண்டதாக உள்ளது. இதனுடன், 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் இந்த காரில் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் பெட்ரோல் & டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 3.0 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 381 பிஎச்பி மற்றும் 520 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் 286 பிஎச்பி மற்றும் 650 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் சினிமாக்காரர்களுக்கு புதியதாக விலையுயர்ந்த கார் வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. அதிலிலும், சினிமா ஸ்டார்கள் அவர்களது மகன்/ மகள்களுக்கு புதியதாக கார் வாங்கிக் கொடுக்கும்போது இன்னும் கூடுதலாக கவனம் செலுத்துவர். ஆதலால், அர்ஹான் கான் புதியதாக பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை பரிசாக பெற்றிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஆனால், எதற்காக இவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்கள் இல்லை.


Click it and Unblock the Notifications









