மலையாள நடிகை மம்தா வாங்கிய கார் இவ்ளோ ஸ்பீடா போகுமா! இந்த ஊரு-காரவங்களே கொஞ்சம் வித்தியாசமாதான் இருப்பாங்கபோல!

பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் தங்களுடைய பயணம் சொகுசானதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இதற்கேற்பவே தங்களுக்கான வாகனங்களையும் அவர்கள் தேர்வு செய்கின்றனர். அந்தவகையில், அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய வாகனமாக எஸ்யூவி ரக கார்கள் (SUV Car) இருக்கின்றன.

இதனால்தான், இந்த ரக சொகுசு கார்களுக்கு பெரும் செல்வந்தர்களைப் போலவே நடிகர்கள் மற்றும் நடிகைகள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியானோருக்கு மத்தியில் பிரபல மலையாள திரைப்பட நடிகை ஒருவர் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Bmw z4 m40i

அதிக சொகுசு வசதிகள் நிரம்பிய கார்களை வாங்கிக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு நடிகையா என்றே அவரின் அந்த செயல் எழும்பி இருக்கின்றது. அவர் வேறு யாருமல்ல பிரபல மலையாள நடிகை மம்தாவே அவர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நடிகர் விஷால் உடன் இணைந்து அவருக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் திரைப்படத்தில் அவர் நடித்திருக்கின்றார். இதுவே அவருக்கு தமிழில் முதல் திரைப்படம் ஆகும். இந்த நடிகையே தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்கின்ற வகையில் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி இருக்கின்றார்.

Mamta mohandas bmw z4 m40i

விஷால் போன்ற சில முன்னணி ஹீரோக்களிடம்கூட இந்த மாதிரியான ஓர் கார் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. அப்படி என்ன ஸ்போர்ட்ஸ் காரை அவர் வாங்கி இருக்கின்றார்? அதன் சிறப்புகள் என்ன? என்ன மாதிரியான வேகத்தில் செல்லும்? இதில் என்ன மாதிரியான எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது? மற்றும் காரின் விலை எவ்வளவு? இதுபோன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

மலையாள நடிகை மம்தா தற்போது பிஎம்டபிள்யூ இசட்4 ஸ்போர்ட்ஸ் காரை (BMW Z4 Sports Car)யே வாங்கி இருக்கின்றார். இதன் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகம் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 90.90 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய காஸ்ட்லியான காரையே நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார்.

Mamta mohandas

இந்த காரில் இரண்டு பேருக்கு மேல் ஒருத்தரால்கூட போக முடியாது. ஆமாங்க, இது ஓர் 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். முழுக்க முழுக்க ரைடர் மட்டுமே என்ஜாய் செய்து பயணிக்கும் பொருட்டே இந்த வாகனத்தை பிஎம்டபிள்யூ வடிவமைத்திருக்கின்றது. இதனையே மம்தா சமீபத்தில் டெலிவரி பெற்றிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

காரை டெலிவரி எடுக்கும் முன்னர் கேக் வெட்டி கொண்டாடிய அவர், தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளும் விதமாக, கேக் துண்டுகளை அவரே அவரது கைகளால் ஷோரூம் ஊழியர்களுக்கு ஊட்டிவிட்டு பின்னர் காரை டெலிவரி எடுத்துச் சென்றார். அப்போது அவருடன் அவரது செல்லப் பிராணி நாய் குட்டியும் வந்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

மம்தா வழக்கமான நடிகர்களிடம் இருந்து பலமடங்கு மாறுபட்ட நபராக காட்சியளிக்கின்றார். குறிப்பாக வாகனங்கள் விஷயத்தில் அவரிடம் இந்த தன்மையை பார்க்க முடிகின்றது. ஏனெனில் அவர் இதுபோன்று ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு காரை வாங்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஓர் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை மம்தா வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

போர்ஷே 911 கர்ரேரா எஸ் ஸ்போர்ட்ஸ் காரை (Porsche 911 Carrera S sports car)யே அவர் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது மற்றுமொரு ஸ்போர்ட்ஸ் காரையும் அவர் வாங்கி இருக்கின்றார். மம்தா தற்போது வாங்கியிருக்கும் ஸ்போர்ட்ஸ் காரானது சென்ற ஆண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த காரின் மேற்கூரையை தேவைப்படும் எனில் விரித்துக் கொள்ள முடியும், தேவையில்லை என்றால் மடித்துக் கொள்ளவும் முடியும். ஒரே ஒரு ஸ்விட்சை தட்டினால் போதும் இந்த வேலையை அதுவாகவே செய்துக் கொள்ளும். மேலும், அதிக நேரத்தையும் அது எடுத்துக் கொள்ளாது. 10 செகண்டுகளே போதும் என்று கூறப்படுகின்றது.

இதன் மேற்கூரை ஓர் சாஃப்டான துணியால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது வெயில் மற்றும் மழை உள்ளிட்டவற்றை தாங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இதுதவிர இதனால் வெறும் பூஜ்ஜியம் செகண்டிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட காரையே மம்தா தற்போது வாங்கி அசத்தியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மம்தாவின் இந்த செயல் அதிக வேகத்தை விரும்பக் கூடியவர் என்பதை தெளிவாகக் காட்டுகின்றது. அதேவேளையில், மம்தா தற்போது வாங்கியிருக்கும் இந்த காரை இந்தியாவில் ஒரு சிலரே பயன்படுத்தி வருகின்றனர். சொல்லப்போனால் அதிக வேகமாக பயணிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்களே இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 10, 2024, 5:00 [IST]
English summary
Actress mamta mohandas buys bmw z4 sports car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X