வளர்ப்பு மகளுடன் அட்டகாசமான காரை டெலிவிரி எடுத்த பிரபல நடிகை - எலக்ட்ரிக் கார்களை வாங்கி குவிக்கிறார்!!
நடிகர், நடிகைகள் புதிது, புதியதாக சொகுசு கார்களை வாங்குவதை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம். வீட்டில் எத்தனை கார் & பைக்குகள் இருந்தாலும் ஒரு சிலர் புதியதாக விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதை தொடர்கதையாக கொண்டுள்ளனர். அதேநேரம், ஒரு சில சினிமா ஸ்டார்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் ஏற்கனவே ஒரு எலக்ட்ரிக் காரை வைத்திருக்கும் நிலையில், புதியதாக மேலும் ஒரு எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். யார் அவர்? என்ன மாதிரியான எலக்ட்ரிக் காரை அவர் வாங்கியுள்ளார் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மற்ற நாடுகளை போன்று, இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். முறையான சார்ஜிங் வசதிகளை கொண்டுவந்தாலும் இவி கஸ்டமர்கள் இன்னும் அதிகரிப்பார்கள். இருப்பினும், சினிமா பிரபலங்களும், பணக்காரர்களும் தைரியமாக எலக்ட்ரிக் கார்களை வாங்குகின்றனர். இந்த வரிசையில், பிரபல இந்திய நடிகை மந்திரா பேடி புதியதாக விலையுயர்ந்த சொகுசான எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

மந்திரா பேடி, பிரபல பாலிவுட் நடிகைகளுள் ஒருவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட. பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் கவனத்தை பெற்ற நடிகை மந்திரா பேடி சில வருடங்களுக்கு முன்பே, அதாவது இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு பெரியதாக மார்க்கெட் இல்லாத சமயத்திலேயே டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை வாங்கி மீண்டும் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றார்.
ஆதலால், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு மந்திரா பேடியும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு எலக்ட்ரிக் காராக வால்வோ சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரை நடிகை மந்திரா பேடி வாங்கியுள்ளார். எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி காரான இதனை குழந்தைகள் உடன் சென்று டெலிவிரி பெறும் வீடியோவை இணையத்தில் மந்திரா பேடி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான நடிகை மந்திரா பேடியின் பதிவில், "சாலையில் பாதுகாப்பான கார்" என குறிப்பிட்டுள்ளார். பொதுவாகவே, வால்வோ கார்கள் பாதுகாப்பானவைகளாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. வால்வோ சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது வால்வோவின் மற்றொரு பிரபலமான எலக்ட்ரிக் காரான எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும்.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வால்வோ எலக்ட்ரிக் கார் எக்ஸ்சி40 ரீசார்ஜ் ஆகும். அதனை தொடர்ந்து சி40 ரீசார்ஜ் காரை வால்வோ நம் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த இரு வால்வோ எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான வித்தியாசம் என்னவென்றால், எக்ஸ்சி40 ரீசார்ஜ் கார் ஆனது ஒரு பக்காவான எஸ்யூவி கார் ஆகும். ஆனால், சி40 ரீசார்ஜ் ஆனது கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார் ஆகும். அதாவது, சி40 ரீசார்ஜில் மேற்கூரை பின்பக்கத்தில் சற்று கூடுதலாக சரிவாக கொடுக்கப்படுகிறது.

இத்தகைய எலக்ட்ரிக் காரை தான் நடிகை மந்திரா பேடி தற்போது வாங்கியுள்ளார். வால்வோ சி40 ரீசார்ஜ் காரில் மிக முக்கிய அம்சமாக அடாஸ் பேக்கேஜ் கொடுக்கப்படுகிறது. அதேபோல், பல்வேறு எண்ணிக்கைகளில் ஏர்பேக்குகளும் இந்த காரில் கிடைக்கின்றன. மேலும், 360-டிகிரி கேமராவையும் இந்த எலக்ட்ரிக் காரில் பெறலாம்.
78kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பை பெறும் வால்வோ சி40 ரீசார்ஜ் காரில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக அதிகப்பட்சமாக 402 பிஎச்பி மற்றும் 660 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரின் டாப்-ஸ்பீடு 180kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்களை நிறைய பேர் வாங்குவதற்கு காரணம், இவற்றின் ரேஞ்ச் அதிகமாக இருக்கும் என்பதினாலேயே ஆகும். இதனால், சார்ஜ் இல்லாமல் கார் நின்றுவிடுமோ என்கிற பயம் தேவை இருக்காது. டாடா நெக்ஸான் இவி காரை தொடர்ந்து, இந்த வால்வோ எலக்ட்ரிக் காரை வாங்கியிருப்பதில் இருந்து நடிகை மந்திரா பேடியின் எலக்ட்ரிக் கார்கள் மீதான ஆர்வத்தை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








