நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

லடாக் பகுதியில் நடிகர் அஜித்குமார், நடிகை மஞ்சு வாரியர் மேலும் சில ரைடர்களுடன் பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான படங்கள் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதனை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் புதியதொரு திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். போனி கபூரின் தயாரிப்பில் உருவாகிவரும் இது அஜித்தின் 61வது படமாகும். இதனாலேயே தற்போதைக்கு இந்த படம் 'ஏ.கே.61' என அழைக்கப்பட்டு வருகிறது.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மற்றப்படி இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் எதுவும் பெரியதாக வெளிவரவில்லை எனினும், இந்த படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

இத்தனைக்கும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கூட தற்போதுவரையில் எந்தவொரு புகைப்படமும் வெளிவரவில்லை. இருந்தாலும், சமூக வலைத்தள பக்கங்களில் அஜித் பற்றிய விஷயங்கள் ட்ரெண்ட்டாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவ்வப்போது வெளியாகும் அவரது பைக் ட்ரிப் படங்களே ஆகும். நடிகர் அஜித் மோட்டார்சைக்கிள் பயணங்களை மேற்கொள்வதை விரும்பக்கூடியவர் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

கடந்த 2021இல் இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித்குமார், அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பைக் பயணத்தை துவங்கினார். அதுதொடர்பான படங்கள் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகி இருந்தன. அதேபோன்று தற்போது, லடாக்கில் அஜித் மேற்கொண்டுவரும் பைக் பயண தொடர்பான படங்களும் ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளன.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக, பைக் பயணங்களை சில சமயங்களில் ஓர் குழுவுடன் அஜித் மேற்கொள்வார். இந்த லடாக் பயணத்தையும் அவ்வாறுதான் அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியா என்ற பைக் குழுவுடன் அஜித் தொடர்ந்துள்ளார். ஆனால் இம்முறை அஜித்குமாரின் பைக் பயணத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து கொண்டுள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

இதுகுறித்து மஞ்சு வாரியர் தனது டுவிட்டர் பக்கத்தில், "எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் இருசக்கர வாகன பயணத்திற்காக அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன்" என குறிப்பிட்டு பயணத்தின் போது நடிகர் அஜித் & குழு உடன் எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

இந்தியாவில் பைக் பயணத்தை கடந்த ஆண்டில் அஜித் மேற்கொண்ட போது, உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கு பைக்கில் சுற்றிவர வேண்டும் என்பது அஜித்தின் கனவாக உள்ளதாக அவரது மேனேஜர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதன்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பைக் சுற்றுப்பயணத்தை துவங்கியதால், உலகம் முழுவதையும் பைக்கில் அஜித் சுற்றிவர துவங்கிவிட்டாரா என்கிற கேள்வி எழுந்தது.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

சினிமா துறையை விட்டுவிட்டு அவ்வாறு எல்லாம் உடனடியாக அஜித் உலக சுற்றுப்பயணத்தை துவங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே என அப்போதே நமது செய்திதளத்தில் கூறியிருந்தோம். அதற்கேற்ப, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஏகே61 படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. விசாகப்பட்டினத்தில் சில வாரங்களாக நடைபெற்றுவந்த இந்த ஷூட்டிங் நிறைவு பெற்றதை அடுத்து, மீண்டும் பைக் ட்ரிப்பை அஜித் மேற்கொள்ள துவங்கியுள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

அஜித் இங்கிலாந்தில் மேற்கொண்ட பயணத்திலும் சரி, தற்போது லடாக் பயணத்திலும் சரி அவர் பயன்படுத்தி வருவது பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் என்ற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை ஆகும். அதிக இயக்க ஆற்றலை வழங்கக்கூடிய அதிக சிசி கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டிருப்பது மட்டுமின்றி, அட்வென்ச்சர் பைக் என்பதால் ஆஃப்-ரோடுகளுக்கும் ஏற்ற எண்ணற்ற தொழிற்நுட்பங்களும் வழங்கப்படுவதால், இந்த பிஎம்டபிள்யூ பைக்கை தைரியமாக எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்ல முடியும்.

நடிகை மஞ்சு வாரியர் உடன் லடாக்கில் நடிகர் அஜித் பைக் ட்ரிப்!! படங்கள் இணையத்தில் வைரல்

கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தில் கூட நடிகர் அஜித் இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கை தான் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ரூ.20.55 லட்சம் என்கிற விலையில் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஆர்1250 ஜிஎஸ் பைக்கில் 1,254சிசி, 2-சிலிண்டர், பாக்ஸர் என்ஜின் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஷிஃப்ட்காம் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 3, 2022, 17:17 [IST]
English summary
Actress manju warrier joins ajith kumr for bike trip in ladakh
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+