நடுராத்திரியில் ஹெல்மெட் உடன் யாருக்கும் தெரியாமல் வந்தது அந்த பிரபல நடிகையா!! இணையத்தில் வீடியோ வைரலாகுது!

பிரபல நடிகை மஞ்சு வாரியர் அவரது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்கில் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சாலையில் பயணம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்தும், நடிகை மஞ்சு வாரியரிடம் உள்ள பிஎம்டபிள்யூ பைக் குறித்தும் இனி பார்க்கலாம்.

நடிகை மஞ்சு வாரியரை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். மலையாள நடிகையாக இருப்பினும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரீட்சையமான நடிகையாக மஞ்சு வாரியர் உள்ளார். குறிப்பாக, நடிகர் தனுஷ் உடன் இணைந்து அசூரன் படத்தில் நடித்த பின்பு தமிழ்நாட்டில் பிரபலமாகினார்.

manju warrier seen on bike

இருப்பினும், துணிவு படத்தில் நடிகர் அஜித் உடன் இணைந்து நடித்த பின்பே நடிகை மஞ்சு வாரியருக்கு பைக் டிராவல்கள் மீது ஈர்ப்பு அதிகமாகியது என சொல்ல வேண்டும். ஏனெனில், துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், நடிகர் அஜித்தை போல் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்கை மஞ்சு வாரியர் வாங்கினார். அதன்பின் அந்த பைக்கில் அஜித்துடன் இணைந்து இந்தியாவில் நிறைய இடங்களுக்கு மஞ்சு வாரியர் பைக் ட்ரிப் சென்றதை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள்.

இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் தனது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்கில் சாலையை கிழித்துக் கொண்டு வேகமாக செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. பிரம்மாண்டமாக இருக்கும் பிஎம்டபிள்யூ ஜி.எஸ் பைக்கில், ஹெல்மெட் அணிந்துக் கொண்டு நடிகை மஞ்சு வாரியர் செல்லும் காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.

manju warrier seen on bike

மஞ்சு வாரியரின் பிஎம்டபிள்யூ பைக்கிற்கு அருகே சென்ற மற்றொரு பைக்கில் இருந்து இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருப்பவர் வேறு யாருமில்லை, மஞ்சு வாரியர் தான். நடிகை மஞ்சு வாரியரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'உங்கள் அச்சத்தை நீங்கள் இன்னும் கேட்க முடிந்தால், ஒரு கியரை மாற்றவும்' என்கிற கேப்ஷன் உடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை மஞ்சு வாரியரிடம் இருக்கும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் பைக் ஆனது ஓர் அட்வென்ச்சர் ரக பைக் ஆகும். இந்தியாவில் இந்த பிஎம்டபிள்யூ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.20.79 லட்சமாக உள்ளது. இந்த பைக்கின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை மஞ்சு வாரியர் வைத்துள்ளார். அட்வென்ச்சர் வேரியண்ட்டின் விலை இன்னும் ரூ.2 லட்சம் வரையில் அதிகமாக உள்ளது.

manju warrier seen on bike

ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் 2021ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கில் 1,254சிசி, 2-சிலிண்டர், பாக்ஸர் என்ஜின் பொருத்தப்படுகின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஷிஃப்ட்கேம் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,750 ஆர்பிஎம்-இல் 134 பிஎச்பி மற்றும் 6,250 ஆர்பிஎம்-இல் 143 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அதிகப்பட்சமாக மணிக்கு 200கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த அட்வென்ச்சர் பைக்கின் எடை 249 கிலோ ஆகும். இந்த பைக்கின் டேங்கில் அதிகப்பட்சமாக 20 லிட்டர்களுக்கு பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம். விருப்பப்படுவோர் ஆர்1250 ஜிஎஸ் பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அபிஷியல் வெப்சைட் மூலமாகவும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ரூ.30,000இல் இருந்து இந்த பைக்கிற்கான மாதத்தவணை திட்டங்கள் துவங்குகின்றன.

manju warrier seen on bike

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு முன்னணி நடிகையாக இருந்தால் இவ்வளவு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்குவது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், சாதாரண மக்களை போல் அவர்களால் அந்த பைக்கை சாலையில் ஓட்ட முடியாது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவிலும், நடிகை மஞ்சு வாரியர் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட பின் காலி சாலையில், யாருக்கும் தெரியாமல் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 20:38 [IST]
English summary
Actress manju warrier seen on bmw r1250 gs adventure bike check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X