றெக்கை மட்டும் இருந்தா தேவதை சார்... ஹெல்மெட்டில் முகத்தை மறைத்தப்படி யாருக்கும் தெரியாமல் போனது இந்த நடிகையா!

நடிகை மஞ்சு வாரியர் (Manju Warrier) சாகசப் பயணங்களை விரும்பக்கூடியவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, நடிகர் அஜித்குமார் (Ajithkumar) உடன் இணைந்து துணிவு (Thunivu) திரைப்படத்தில் நடித்ததற்கு பின் மஞ்சு வாரியரின் மோட்டார்சைக்கிள் பயணங்கள் மிகவும் அதிகரித்துவிட்டன. ஏனெனில், நீண்ட தூர பைக் பயணங்களை மேற்கொள்ள விரும்புபவரான நடிகர் அஜித் உடன் இணைந்து துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே அவருடன் இணைந்து மஞ்சு வாரியர் பைக் பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

அதன்பின், தனியாகவும், நண்பர்களுடனும் மஞ்சு வாரியர் அவ்வப்போது பைக் பயணங்களை மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது இவர் பி.எம்.டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் (BMW R1250GS) என்கிற ஆற்றல்மிக்க அட்வென்ச்சர் பைக்கில் மழையில் நனைந்தப்படி தனுஷ்கோடி வழியாகப் பயணிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actress manju warrier s dhanushkodi trip

இந்தக் காணொளியில், அவர் அமர்ந்தும், ஆபத்தான முறையில் நின்றபடியும் பைக்கை ஓட்டி தனது சாகசப் பயணத்தை முழுமையாக அனுபவிப்பதைக் காணலாம். சமூக வலைத்தளங்களில் நடிகை மஞ்சு வாரியர் இதுகுறித்த பதிவை, "கடந்து போனவற்றிற்கும், நடந்து கொண்டிருப்பவற்றிற்கும், வரவிருக்கும் அனைத்திற்கும் நன்றி" என்ற மனதைத் தொடும் தலைப்புடன் வெளியிட்டுள்ளார்.

அவரது இந்த சாகசப் பயண வீடியோவுக்கு பிரபலங்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ, கார் ஒன்றில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை மஞ்சு வாரியர் ஓட்டும் பி.எம்.டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் ஆனது அட்வென்ச்சர் பைக் விரும்பிகளிடையே மிகவும் பிடித்தமான மாடலாகும்.

actress manju warrier s dhanushkodi trip

இந்தியாவில் சுமார் 20.55 லட்சம் ரூபாயில் இருந்து 21.96 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ்-ஷோரூம் விலை) விற்கப்படும் இந்த பைக்கின் விலை, அதன் சிறப்பம்சங்களுக்கு ஏற்ப மாறுபடும். 1254 சிசி என்ஜின் திறன் கொண்ட இந்த பைக், 136 பிஎச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. நீண்ட தூரப் பயணங்களுக்கும், ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் (Soubin Shahir) அவர்களும் இதே பிஎம்டபிள்யூ பைக்கை வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், மஞ்சு வாரியரும், சௌபின் ஷாஹிரும் தங்கள் ஆர்1250 ஜிஎஸ் பைக்குகளில் இதற்கு முன்னர் ஒருமுறை நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டு, அதுகுறித்த படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

actress manju warrier s dhanushkodi trip

நடிகை மஞ்சு வாரியர் தனக்கென சொந்த பைக் வாங்கி, அதற்கான ஓட்டுநர் உரிமம் பெற தமிழ் சூப்பர் ஸ்டார் அஜித் குமாருடனான பயணம் ஊக்கமளித்ததாக முன்பொருமுறை தெரிவித்திருந்தார். ஏற்கனவே கூறியதுபோல், அஜித்துடன் 'துணிவு' படத்தில் நடித்தபோது, இருவரும் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய பைக் பயணங்கள், மஞ்சு வாரியருக்குள் இருந்த சாகச பயண ஆர்வத்தைத் தூண்டியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 47 வயதில் நடிகை மஞ்சு வாரியரின் சாகச பயணங்களுக்கான இந்த மனப்பான்மையும், சுதந்திரமான பயணங்களும் பலருக்கு உத்வேகமளிக்கும் என்பது உறுதி. இருப்பினும், ஈரமான சாலைகளில் செல்லும்போது பைக்கை நின்றப்படி ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், சிறிய சறுக்கல் கூட பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 3, 2026, 11:30 [IST]
English summary
Actress manju warriers dhanushkodi trip on bmw r1250 gs motorcycle check all details here
மேலும்... #celebrity bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X