2கே கிட் நடிகை வாங்கிய சூப்பரான கார்.. நடிகை வாங்கிய காராச்சேனு நினைக்காதீங்க நம்மாலும் வாங்க முடியும்!

மலையாள திரையுலகைச் சேர்ந்த இளம் வயது நடிகை அனுநயா அனூப். மீனாட்சி அனூப் எனும் பெயரில் இவர் அறியப்படுகின்றார். 2005 ஆம் ஆண்டில் பிறந்த 2கே கிட் நடிகை இவர் ஆவார். மலையாள திரையுலகைச் சேர்ந்த ஜாம்பவான் நடிகர்கள் பலருடன் இணைந்து இவர் நடித்திருக்கின்றார்.

ஒன்-பை 2 படத்தின் வாயிலாகவே மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 14 படங்கள் இவர் நடித்திருக்கினஅறார். இதில் கன்னடா மற்றும் இந்தி படங்களும் அடங்கும். இதுதவிர, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அவர் பணியாற்றி இருக்கின்றார். இத்தகைய நடிகையே தற்போது அவரைப் போலவே மிகவும் குட்டியான ஓர் கார் மாடலை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actress buys comet ev

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக கோமெட் இவி காட்சியளிக்கின்றது. 6 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்சிகியூட்டிவ், எக்சைட் எஃப்சி, எக்சைட், எக்ஸ்க்ளூசீவ் எஃப்சி, எக்ஸ்க்ளூசீவ் ஆகியவையே அவை ஆகும். இரண்டு கதவுகள் மட்டுமே இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும்.

முன்னால் இருவரும், பின்னால் மூவரும் அமர்ந்துக் கொள்ள முடியும். ஆனால், உடல் பருமன் அதிகம் கொண்டவர்களாக இருப்பின் இந்த காரில் நான்கு பேர் வரை மட்டுமே பயணிக்க முடியும். அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த கார் மாடலாகவும் கோமெட் இவி காட்சியளிக்கின்றது. இதன் ஸ்டியரிங் வீல் லெதரால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், 10.25 அங்குல மிதக்கின்ற ஸ்டைலிலான இரண்டு திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், 55-க்கும் மேற்பட்ட கார் இணைப்பு தொழில்நுட்ப வசதியையும் இந்த காரில் எம்ஜி வழங்கி இருக்கின்றது.

பாதுகாப்பிற்கான அம்சங்களும் இந்த காரில் தாராளமாக வழங்கி இருக்கின்றது, எம்ஜி. அந்தவகையில், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன் மற்றும் பின் பக்க ரியர் பிரேக்குகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 230 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இதற்காக 17.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஐபி67 ரேட்டட் பேட்டரி பேக் ஆகும். இந்த பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.2 லட்சம் கிமீ வாரண்டியை எம்ஜி வழங்குகின்றது.

இது ஓர் குட்டியான உருவம் கொண்ட கார் மாடல் என்பதால் இதை பார்க் செய்ய பெரிய இடம் தேவைப்படாது. ஓர் ஆட்டோவைப் பார்க் செய்வதற்கான இடமே போதுமானது. இதுமாதிரியான அடக்கமான தோற்றம் கொண்ட கார் மாடல் இது என்பதாலேயே பலர் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையிலேயே இந்த மலையாள நடிகையும் கோமெட் இவியை வாங்கி இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் இந்த கார் மாடலே இந்தியாவின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் நெக்ஸான் இவி என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, May 6, 2024, 5:00 [IST]
English summary
Actress meenakshi anoop purchased indias low cost electric car comet ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+