திருமணத்துக்கு வந்தவங்க வாயடைத்து போய் நின்னாங்க... 30 லட்ச ரூபா எலக்ட்ரிக் காரில் டிவி சீரியல் நடிகை!
நயானா ஜோசன் (Nayana Josan), மலையாள நடிகை. ஒரு சிலர் டிவி சீரியல், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என சின்னத்திரையில் தோன்றி தற்போதுவரையில் அங்கேயே இருப்பதை பார்க்க முடியும். ஆனால், அந்த குறிப்பிட்ட துறையில் மிக பிரபலமானவர்களாக இருப்பர். அதேநேரம், அரிதாக கிடைக்கக்கூடிய திரைப்பட வாய்ப்புகளை பயன்படுத்தி அவ்வப்போது வெள்ளி திரையிலும் காட்சித் தருவர். தமிழ் சினிமா வட்டாரத்தில் அத்தகைய பிரபலங்களாக பலரை சொல்ல முடியும். அதேபோல் மலையாள சினிமா வட்டாரத்தில் ஒருவராக இருப்பவர்தான், நயானா ஜோசன் ஆவார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமா உலகிற்குள் அறிமுகமாகியவர், அதன்பின் டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்போதும் மலையாள டிவி சீரியல்களில் நடித்துவரும் நயானா ஜோசன், அவ்வப்போது டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் காட்சி தருகிறார். இதற்கிடையில், இரு மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அந்த இரு மலையாள படங்களில் ஒன்று மெகா ஸ்டார் மம்முட்டியின் பால்யகலாசகி, மற்றொன்று கடந்த 2020இல் வெளியான நடிகர் பகத் பாசிலின் டிரான்ஸ் திரைப்படங்கள் ஆகும். ஆனால், இரண்டிலுமே துணை நடிகையாகவே நயானா ஜோசன் நடித்திருப்பார். இந்த நிலையில், நயானா ஜோசன் தனது நீண்ட நாள் காதலரான கோகுல் என்பவரை மே 18ஆம் தேதி கரம் பிடித்துள்ளார்.
நயானா ஜோசன் நடிகை மட்டுமல்ல சிறந்த நடனமாடுபவரும் ஆவார். டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி போட்டிகளில் டேன்சராக கலந்துக் கொண்ட நயானா ஜோசன் உடன் மற்றொரு டேன்சராக அறிமுகமாகியவர் தான் கோகுல் ஆவார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
33 வயதான நயானா ஜோசன்- கோகுல் இடையேயான திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரம்மாண்ட திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மலையாள சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக் கொண்ட இந்த திருமணத்தில் மணமக்களுக்கு அவர்களது பெற்றோர் சார்பில் விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் (Mahindra Electric Car) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த பின் மணமக்கள் இருவரும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அந்த காரில்தான் வீட்டிற்கு சென்றனர். இன்னும் சொல்லப்போனால், மணப்பெண் முன் இருக்கையில் அமர, மணமகன் கோகுல் தான் காரை ஓட்டி சென்றார். இது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. நயானா ஜோசன்- கோகுல் தம்பதிக்கு அவர்களது பெற்றோர் கருப்பு நிறத்திலான மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்கியுள்ளனர்.
இந்த கருப்பு நிறத்தை 'ஸ்டீல்த் பிளாக்' என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், நெபுலா நீலம், டீப் ஃபாரஸ்ட், ரப்பி வெல்வெட், டெசர்ட் மிஸ்ட் டாங்கோ சிவப்பு மற்றும் எவரெஸ்ட் வெள்ளை கலர் ஆப்ஷன்களிலும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது. பேக் ஒன், பேக் டூ, பேக் த்ரீ செலெக்ட் மற்றும் பேக் த்ரீ என 4 விதமான வேரியண்ட்களில் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.21.90 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையில் உள்ளன. இதில் ரூ.30.50 லட்சம் மதிப்பிலான பேக் 3 வேரியண்ட்டின் டெலிவிரி மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளது. வேரியண்ட்டை பொறுத்து இந்த காரை 59kWh அல்லது 79kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் கடந்த மார்ச் மாதத்தில்தான் துவங்கப்பட்டன. முதற்கட்டமாக விலையுயர்ந்த எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் வேரியண்ட்டின் டெலிவிரிகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் வருகிற ஜூன் மாதத்திற்கு பிறகே துவங்கப்பட உள்ளன. ஆதலால், நயானா ஜோசன்- கோகுல் தம்பதிக்கு கிடைத்திருப்பது விலைமிக்க எக்ஸ்இவி 9இ பேக் 3 கார் ஆகும்.


Click it and Unblock the Notifications








