நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா புதிய ஜாகுவார் கார் வாங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பரபரக்கின்றன. சென்னையில் நடைபெறும் ஷூட்டிங் செல்வதற்கும் ஷாப்பிங் ம

லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா புதிய ஜாகுவார் கார் வாங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

கதாநாயகிகளுக்கு வயசு ஏறினால், பவுசு போய்விடும் என்ற எழுதப்படாத விதியை மாற்றிக் காட்டி, கோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. தனிப்பட்ட வாழ்க்கையில் இறக்கங்களை சந்தித்தாலும், சினிமாவில் ஏற்றத்திலேயே இருந்து வருகிறது நயன்தாராவின் மார்க்கெட்.

நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் நயன்தாரா, ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளமாக பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், புதிய காதலன் விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாராவுக்கு தனிப்பட்ட முறையிலும், சினிமா துறையிலும் பக்கபலமாக துணை நிற்கிறார்.

நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

இதனால், பழைய உற்சாகத்துடன் நயன்தாராவை பார்க்க முடிவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த தகவலை உண்மையாக்கும் விதத்தில், விலை மதிப்புடைய ஜாகுவார் சொகுசு காரை நயன்தாரா அண்மையில் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

சென்னையில் நடைபெறும் ஷூட்டிங் செல்வதற்கும் ஷாப்பிங் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கும் இந்த புத்தம் புதிய சொகுசு காரில்தான் செல்கிறாராம். இந்த கார் மிக நெருக்கமானதாக அமைவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

அதாவது, நயன்தாராவின் புதிய காதலர் விக்னேஷ் சிவன்தான் இந்த காரை ஓட்டுகிறாராம். நயன்தாரா மீதுள்ள அளப்பரிய பிரியத்தின் காரணமாக, இந்த வேலையையும் விக்னேஷ் சிவன் சேர்த்தே பார்க்கிறாராம்.

நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

சென்னை மட்டுமல்ல, வெளியூர் ஷூட்டிங் செல்லும்போது நயன்தாராவின் ஆஸ்தான ஓட்டுனராக விக்னேஷ் சிவன் மாறிவிடுகிறாராம். அதாவது, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தனிமையில் காதலை வளர்ப்பதற்கும், ஷூட்டிங் சமயங்களில் பாதுகாப்பாகவும் இப்போது நயன்தாராவிற்கு உறுதுணையாக நிற்பது விக்னேஷ் சிவன்தானாம்.

நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

வெளியூர் செல்லும்போது பிஎம்டபிள்யூ காரை பயன்படுத்துகிறார் நயன்தாரா. இந்த காரும் இருவருக்கும் இடையிலான காதலை வளர்ப்பதற்கு முக்கிய கருவியாக மாறி இருக்கிறது.

நயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்!!

கார் ஓட்டுவது மட்டுமல்ல, புதிய படத்திற்கான கதை கேட்டு தேர்வு செய்வதிலும் விக்னேஷ் சிவன் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இதனால், இருவருக்கும் இடையிலான காதல் விரைவில் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண பரிசாக அடுத்து ஒரு புதிய சொகுசு காரை நயன்தாரா வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, December 3, 2018, 18:00 [IST]
English summary
Actress Nayanthara Buys Brand New Jaguar Car.
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+