தந்தையை ஷோரூமுக்கு அழைத்து சென்று திக்கு முக்காட வைத்த நடிகை! வாங்கியிருக்கும் கார் அவ்வளவு ஸ்பெஷலானதா?

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் பலரால் விரும்பி வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம் ஆகும். அந்த அளவிற்கு சிறப்பான செயல்படுதிறன் மூலமாக எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய வாகனமாக தார் ராக்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில், இந்த வாகனத்தை நடிகை ஒருவர் தனது தந்தைக்கு பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.

சினிமா (Cinema) நடிகர், நடிகைகள் தங்களது பெற்றோருக்கு விலையுயர்ந்த கார்களை வாங்குவதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வகையில், தற்போது தனது தந்தைக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கி கொடுத்திருக்கும் நடிகையின் பெயர், நீனா மது (Neena Madhu) ஆகும்.

actress neena madhu bought mahindra thar roxx

கேரளாவை சேர்ந்தவரான நீனா மது நடிகை என்பதை தாண்டி, திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இதுவரையில் பெரியதாக எந்த படத்தையும் தயாரிக்கவில்லை என்றாலும், நிறைய குறும்படங்களை தயாரித்துள்ளார். இதற்கிடையில்தான், தனது தந்தைக்கு நீனா மது பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூமிற்குள் எடுத்துக் கொண்ட படங்களையும் நீனா மது தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படங்களில் தாய், தந்தை மற்றும் நண்பர்களுடன் ஷோரூமுக்கு சென்று நடிகை நீனா மது புத்தம் புதிய தார் ராக்ஸ் வாகனத்தை டெலிவிரி (Delivery) பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

actress neena madhu bought mahindra thar roxx

மேலும், இந்த படங்களில் டெலிவிரிக்கு முன்னதாக தகுந்த ஆவணங்களில் நீனா மது கையெழுத்திடுவதையும், அதன்பின் குடும்பத்துடன் சேர்ந்து கேக் வெட்டி வாகனத்தை டெலிவிரி பெறுவதையும் பார்க்கலாம். இதைவிட முக்கியமானது என்னவென்றால், என்ன மாதிரியான தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளோம் என்பதையும் நீனா மது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

அதில், அவர் கூறியுள்ள தகவல்களின்படி பார்க்கும்போது, தனது தந்தைக்காக இவர் வாங்கியிருக்கும் தார் ராக்ஸ் வாகனம் ஆனது டீசல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்ட விலைமிக்க ஏஎக்ஸ்7 எல் (AX7 L) வேரியண்ட் ஆகும். இதனை கருப்பு & மோச்சா பிரவுன் நிறத்தில் நீனா மது வாங்கி உள்ளார்.

actress neena madhu bought mahindra thar roxx

இவை மட்டுமின்றி, வாகனத்திற்கு எவ்வளவு ஆன்-ரோடு விலையாக செலுத்தினேன் என்பதையும் நடிகை நீனா மது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் மொத்தமாக இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்திற்கு ரூ.30 லட்சம் வரையில் செலவு செய்துள்ளார். "எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி எனது தந்தை எங்களுக்கு நிறைய செய்துள்ளார். இது (தார் ராக்ஸ்) எனது பாசத்தின் சிறிய வெளிப்பாடு" என நீனா மது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தைக்காக இவர் வாங்கியிருக்கும் தார் ராக்ஸ் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட வாகனம் ஆகும். 2020ஆம் ஆண்டில் இருந்து 3-கதவு தார் வாகனம் விற்பனையில் இருக்கும் நிலையில், 5-கதவு தார் வாகனமாக கடந்த 2024ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது தார் ராக்ஸை மஹிந்திரா அறிமுகம் செய்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு திருப்பி செய்வது எப்போதுமே சிறந்த அனுபவம் ஆகும். சினிமா நடிகையாக இருந்தாலும் சரி, தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அது தனி அனுபவம் ஆகும். அதைதான் தற்போது நடிகை நீனா மது அனுபவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கேரளா போன்ற ஏற்ற இறக்கமான பாதைகளை அதிகம் கொண்ட பகுதியில் பயன்படுத்துவதற்கு மஹிந்திரா தார் ராக்ஸ் ஆனது ஏற்ற வாகனம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 18, 2025, 16:03 [IST]
English summary
Actress neena madhu bought mahindra thar roxx for her dad check all details here
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X