கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் ஆன இவங்க அவரோட மருமகளா! பியூட்டி பார்லர் போறதுக்கு ஒன்றரை கோடி ரூபா கார்!

இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான நடிகர், நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz GLS) காரை திரையுலகினர் அதிக அளவில் வாங்கி கொண்டுள்ளனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 1.32 கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.37 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு விலை உயர்ந்த காரை பிரபல நடிகை ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் நேஹா தூபியா (Neha Dhupia) ஆவார். ஹிந்தி, தெலுங்கு மற்றும் பஞ்சாபி உள்பட இந்தியாவின் பல்வேறு மொழி திரைப்படங்களில் நேஹா தூபியா நடித்துள்ளார். 44 வயதாகும் இவருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர்.

Actress Neha Dhupia Buys Mercedes Benz GLS

இவர் சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரை வாங்கினார். நேஹா தூபியா வாங்கியிருப்பது இந்த காரின் 450டி 4மேட்டிக் (450d 4matic) வேரியண்ட் ஆகும். இதுதான் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் டாப் வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் 1.37 கோடி ரூபாய் ஆகும்.

இதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.59 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரின் ஒரு பியூட்டி பார்லர் திறப்பு விழாவிற்கு நேஹா தூபியா வந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவை, நேஹா தூபியாவின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Mercedes Benz GLS

நேஹா தூபியா வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 450டி 4மேட்டிக் காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 367 பிஎஸ் பவர் மற்றும் 750 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்த காரில், அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளுக்கு பஞ்சமே இல்லை. இதில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் முக்கியமானவை.

மேலும் பனரோமிக் சன்ரூஃப், 5 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) ஆகிய வசதிகளும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 450டி 4மேட்டிக் காரில் இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நேஹா தூபியாவிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), ஆடி ஆர்8 (Audi R8), டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) மற்றும் ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) என ஏராளமான கார்கள் ஏற்கனவே உள்ளன. இந்த வரிசையில்தான் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 450டி 4மேட்டிக் காரை அவர் வாங்கியுள்ளார்.

நேஹா தூபியாவின் கணவர் பெயர் அங்கட் பேடி (Angad Bedi) என்பதாகும். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடியின் (Bishan Singh Bedi) மகன் ஆவார். எனவே பிஷன் சிங் பேடியின் மருமகள் என்ற பெருமையும், நேஹா தூபியாவிற்கு உண்டு. நேஹா தூபியா திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனதால், அங்கட் பேடியுடன் அவருக்கு அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, November 8, 2024, 12:56 [IST]
English summary
Actress neha dhupia buys mercedes benz gls viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+